India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தனது அரசியல் வாரிசு குறித்து மம்தா பானர்ஜி மனம் திறந்துள்ளார். இது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், நான் என்பது கட்சியல்ல, நாங்கள்தான் கட்சி என்றார். தனது கட்சி ஒரு கூட்டு குடும்பம் எனவும், முடிவுகளை கூட்டாகதான் எடுப்போம் என்றும் தெரிவித்தார். மக்களுக்காக யார் சிறந்தவர் என்பதை கட்சி முடிவு செய்யும். கட்சியில் ஒவ்வொருவரும் மிக்கியமானவர்கள். புதிதாக வருபவர்கள் கூட நாளை மூத்த தலைவராகலாம் என்றார்.
சமீபத்தில் சென்னை குரோம்பேட்டை பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்து மூன்று பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், தாம்பரம் மாநகராட்சி பகுதிகளுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் மிகவும் அசுத்தமானது என்று ஜூலை மாதமே வெளியான <
வங்கக்கடலில் 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளை நோக்கி வரக்கூடும் எனவும், டிச.12ம் தேதி வாக்கில் தென்மேற்கு வங்கக் கடலில் தமிழ்நாடு – இலங்கை பகுதியை அடையக்கூடும் என்றும் கூறியுள்ளது. இதனால், டிச.11, 12ல் காவிரி டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அடுத்தடுத்து கட்சியில் இருந்து நிர்வாகிகள் விலகுவதை தடுக்கும் முயற்சியில் சீமான் இறங்கியுள்ளாராம். குறிப்பாக கோவை, ஈரோடு, கரூர் உள்ளிட்ட கொங்கு பகுதிகளைச் சேர்ந்த நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகி வருகின்றனர். இதனால், அப்பகுதி நிர்வாகிகளை அழைத்து அவர் பேச்சுவார்த்தை நடத்தி தெளிவுபடுத்தி வருகிறாராம். இதனால், அதிருப்தி மனநிலையில் இருந்த நிர்வாகிகள் பலர் தங்கள் முடிவு மாற்றி வருவதாகக் கூறப்படுகிறது.
தேசியப் பாதுகாப்பு ஆலோசனைக்குழுவுடன் தமிழக RN ரவி ரகசிய ஆலோசனை நடத்தி உள்ளார். கடந்த ஆகஸ்டில் NIA ஆலோசகர் அஜித் தோவலுடன் நடந்த சந்திப்பின் தொடர்ச்சியாகவே, இக்கூட்டம் நடந்ததாக தெரிகிறது. இதன்போது, தமிழகத்தில் அதிகரித்துள்ள போதைப்பொருள் கடத்தல் குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது, தமிழக போலீசாரின் செயல்பாடுகள் குறித்து தனது அதிருப்தியை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
அடுத்தாண்டு பிப்ரவரி முதல் தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மாற்றப்படும் என மாநில தொழில்நுட்ப கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பிப், ஆகஸ்ட் மாதங்களில் இந்த தேர்வுகள் இளநிலை, இடைநிலை, முதுநிலை, அதிவேகம் என்ற நிலைகளில் நடத்தப்படுகிறது. இந்நிலையில், புதிய பாடத்திட்டம் பிப்ரவரி முதல் அமலாகிறது. புதிய பாடத்திட்டத்தை <
தமிழகம் முழுவதும் குடிநீரின் மாதிரிகளை பரிசோதித்து அறிக்கை அளிக்க, அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் 3 பேர் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், சுழற்சி முறையில் தினமும் 10 குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று குடிநீர் மாதிரியை பரிசோதிக்கவும், 100% சுகாதாரமான குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 9 ஆண்டுகளில் தமிழக அரசு, புயல், மழை போன்ற பேரிடர் காலங்களில் மத்திய அரசிடம் நிவாரணப் பணிகளுக்காக மொத்தமாக ₹1.25 லட்சம் கோடி நிதி உதவி கேட்டிருக்கிறது. ஆனால், அதில் 6% தொகை மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் நிவாரணப் பணிகளுக்கு ₹6,675 கோடி கேட்டிருந்த நிலையில், வெறும் ₹945 கோடியை அளித்துள்ளது. புயலால் நிலை குலைந்துள்ள தமிழக மக்களின் வலியை மத்திய அரசு உணரவில்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பொங்கல் சிறப்புத் தொகுப்போடு சேர்த்து மக்களுக்கு ₹1000 ரூபாய் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஆண்டுதோறும் பொங்கலுக்கு அரிசி, பருப்பு, கரும்பு, சர்க்கரை ஆகிய பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. அதோடு சேர்த்து ₹1000 அளிக்கப்பட்டால், ஜனவரி மாதம் மகளிர் உரிமைத் தொகையுடன் சேர்ந்து குடும்பத்திற்கு ₹2000 கிடைக்கும்.
ஆடைகளுக்கு GST உயர்த்தினால் ஒரு லட்சம் பேருக்கு வேலை பறிபோகும் என இந்திய ஆடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. GST-யை 12%இல் இருந்து 28%ஆக உயர்த்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் உறுதியானால் சிறு, நடுத்தர நிறுவனங்களைப் பாதிக்கும் என அச்சங்கம் கவலை தெரிவித்துள்ளது. அதேநேரம், ₹1,000 வரையிலான ரெடிமேட் ஆடைகளுக்கான 5% GST-யை ₹1,500ஆக உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளதை வரவேற்றுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.