News December 7, 2024

ஒய்வு வயதில் மாற்றமா? அரசு சொல்வது இதுதான்

image

மத்திய அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது வரம்பு மாற்றப்படுமா, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படுமா என பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா மக்களவையில் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், ஓய்வு வயது வரம்பில் மாற்றம் இல்லை எனவும், அரசுத்துறைகள், தன்னாட்சி நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப மெகா வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த உள்ளதாகவும் கூறியுள்ளார்.

News December 7, 2024

அப்போ திருமாவளவன் மட்டும் யாரு? கண்சிவந்த மோகன்ஜி

image

திமுகவை ஆதவ் அர்ஜூனா விமர்சித்ததற்கு விசிக எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும், விஜய்யை கூத்தாடி எனவும் ஷாநவாஸ் கூறியிருந்தார். இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இயக்குநர் மோகன்ஜி, “கூத்தாடி.. எவ்வளவு திமிர் இவருக்கு. இவரது தலைவரே ஒரு படத்தில் கூத்தாடி வேடம் போட்டவர்தான். இந்த வார்த்தைக்கு ஷா நவாஸ் பொது மன்னிப்பு கேட்க வேண்டும்” என வலியறுத்தியுள்ளார்.

News December 7, 2024

“வாய்ச்சவடால்” விஜய்க்கு கனிமொழி பதிலடி

image

வாய்ச்சவடால் விட்டு பேசியவர்கள் யாரும் இன்று வரை எதுவும் செய்து காட்டியதில்லை என்று விஜய்க்கு கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார். திமுக மீது காலம் காலமாக விமர்சனங்கள் வந்துக் கொண்டிருக்கிறது எனக் கூறிய அவர், நானும் இறுமாப்போடு சொல்கிறேன், கட்டுப்பாடோடு பணியாற்றினால், 2026 தேர்தலில் 200 தொகுதிகளில் நிச்சயம் வெற்றிபெறும் என சூளுரைத்துள்ளார்.

News December 7, 2024

தி.மலையில் மீண்டும் நிலச்சரிவு

image

தி.மலையில் வரும் 13ஆம் தேதி கார்த்திகை தீபம் ஏற்ற உள்ள நிலையில், கொப்பரை வைக்கும் இடத்தில் இருந்து 400 அடிக்கு மண் சரிவும், அரைமலை பகுதியில் இருந்து சுமார் 600 அடிக்கு கீழ் மற்றொரு நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில், மக்கள் யாரும் சிக்கி இருக்கிறார்களா என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. சமீபத்தில், மண் சரிவு ஏற்பட்டு 7 பேர் இறந்தது குறிப்பிடத்தக்கது.

News December 7, 2024

நாங்கள் தடுமாறுகிறோமா..? சீறிய திருமாவளவன் (1/2)

image

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விஜய்யும், ஆதவ் அர்ஜுனாவும் திமுகவை விமர்சித்தது திருமாவளவனுக்கு கடும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து திருமாவளவன் ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார். நான் தடுமாறுவதாகவும், கட்சி தள்ளாட்டம் காண்பதாகவும் சிலர் பேசி வருகின்றனர். எங்களுக்கு எந்த தடுமாற்றமும் இல்லை. எங்கள் சுயமரியாதையை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று கூறினார்.

News December 7, 2024

நாங்கள் தடுமாறுகிறோமா..? சீறிய திருமாவளவன் (2/2)

image

எங்களுக்கு எந்த தடுமாற்றமும் இல்லை. சமூக மாற்றத்திற்கான தாக்கத்தை விசிக என்றைக்குமே ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். இந்த நேரத்தில் விசிக தொண்டர்கள் உறுதியாக இருக்க வேண்டும். விசிகவை நாடு முழுவதும் விரிவுப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. எதை எந்த நேரத்தில் எப்படி அணுக வேண்டும் என்பது எனக்கு தெரியும். பேராசைக்கு விலை போகிறவன் நான் கிடையாது எனக் கூறினார்.

News December 7, 2024

ஆதவ் அர்ஜுனா பேச்சு: ஒரே போடாக போட்ட உதயநிதி

image

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விசிகவின் ஆதவ் அர்ஜுனாவும், விஜய்யும் திமுகவை விமர்சித்திருந்தனர். குறிப்பாக, ஆதவ் அர்ஜுனா பேசிய போது, தமிழ்நாட்டில் மன்னராட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனக் கூறினார். இந்நிலையில், இதுகுறித்து பேசிய உதயநிதி, “யாரும் பிறப்பால் முதல்வர் ஆகவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆட்சி செய்கிறார். இந்த அறிவு கூட இல்லை அந்த ஆளுக்கு” என ஒருமையில் பேசினார்.

News December 7, 2024

அதுக்குள்ள ₹400 கோடி வசூலா..?

image

‘புஷ்பா 2’ திரைப்படம் 2 நாளில் ₹400 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானது. இந்நிலையில், பெரும்பாலான ரசிகர்களை இப்படம் திருப்தி செய்துள்ளதால் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. விரைவில் ₹1,000 கோடி கிளப்பில் இணையும் எனக் கூறப்படுகிறது.

News December 7, 2024

MVA கூட்டணியில் இருந்து விலகும் சமாஜ்வாதி

image

மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாதி (MVA) கூட்டணியில் இருந்து விலகுவதாக சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது. நடைபெற்ற மகாராஷ்டிர தேர்தலில் மகாயுதி கூட்டணி ஆட்சியமைத்த நிலையில் காங்கிரஸ் தலைமையிலான MVA கூட்டணி எதிர்க்கட்சி வரிசையில் உள்ளது. அதில், உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்த ஒருவர் பாபர் மசூதி இடிப்புக்கு ஆதரவாக பேசியதால் சமாஜ்வாதி அதிருப்தியில் வெளியேறுகிறது.

News December 7, 2024

திருச்செந்தூர் பாகனின் மனைவிக்கு அரசுப்பணி

image

திருச்செந்தூரில் யானை தாக்கி உயிரிழந்த பாகன் உதயகுமார் மனைவிக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. கோவிலில் அலுவலக உதவியாளராக பணிபுரிவதற்கான ஆணையை திமுக எம்.பி கனிமொழி அவரிடம் நேரில் வழங்கினார். கடந்த 18ம் தேதி யானை தெய்வானை பாகன், அவரது உறவினரை தாக்கியதில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். உதயகுமார் மீது மிகுந்த அன்பாக இருந்த யானை, ஒரு வாரத்திற்கு மேல் உணவு உட்கொள்ளாமல் இருந்தது.

error: Content is protected !!