India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராவோருக்கு தமிழக அரசு சிறப்பு இலவச பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு வெளியே எங்கும் செல்ல வேண்டாம். வீட்டில் அமர்ந்து கொண்டே பயிற்சியில் பங்கேற்கலாம். தமிழக அரசின் கல்வி டிவியில் நாளை முதல் 13ஆம் தேதி வரை காலை 7-9 மணி வரையும், இரவு 7-9 மணி வரையும் பயிற்சி வகுப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளன. என்ன ரெடியாயிட்டிங்களா?
நாளை மறுதினம் (10ஆம் தேதி) முதல் 13ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 10ஆம் தேதி மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக MET கூறியுள்ளது. 11ஆம் தேதி காஞ்சி, செங்கல்பட்டு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை, 12ஆம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூரில் மிக மழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது.
இன்று (டிச.8) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
▶நாள்- டிசம்பர்- 08 ▶கார்த்திகை – 23 ▶கிழமை: ஞாயிறு ▶ஆண்டு: குரோதி ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM, 3:15 PM – 4:15 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM, 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி:அஷ்டமி ▶சூலம்: மேற்கு▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: வளர்பிறை ▶;சுபமுகூர்த்தம்: இல்லை ▶நட்சத்திரம்: சதயம்.
மணிப்பூருடன் தமிழ்நாட்டை ஒப்பிடலாமா என விஜய்யை, கனிமொழி எம்பி கடுமையாக சாடியுள்ளார். அரசியலில் மேடை ஏறினால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா என கேள்வி எழுப்பிய அவர், பாஜக மணிப்பூருக்கு சென்று நியாயம் வழங்காமல் இருப்பதை விட இது மோசமானது என விமர்சித்துள்ளார். மணிப்பூர் கலவரத்தையும், தமிழகத்தின் வேங்கைவயல் சம்பவத்தையும் இணைத்து மத்திய, மாநில அரசுகளை விஜய் நேற்று விமர்சித்து இருந்தார்.
*போதுமான தூக்கம், உடல்பயிற்சிகள், சத்தான உணவுகள் இவற்றை தினசரி செயல்பாடுகளாக பின்பற்றுங்கள். *இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது கூடுதலாக கொஞ்சம் நேரம் ஒதுக்கி, ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும். *எவ்வளவு பிசியாக இருந்தாலும், உடற்பயிற்சிகள் செய்ய தவற வேண்டாம். இதற்கு 20 நிமிடங்களாவது ஒதுக்குங்கள் (அ) குறைந்தபட்சம் நடைபயிற்சி செய்யுங்கள். *இதனால் நோய்கள் குறையும், அழகு கூடும்.
காதலுக்கு வயதில்லை என்பது உண்மையாகியுள்ளது. USA-வில் 100 வயதை கடந்த காதலர்கள் திருமணம் செய்து கொண்டு, உலகின் வயதான புதுமணத் தம்பதி என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளனர். பெர்னி லிட்மேனும் (100), மர்ஜோரிஃபிடர்மேனும் (120) ஒரு விருந்தில் சந்தித்துள்ளனர். பின்னர் அந்த உறவு வளர்ந்து திருமணம் வரை சென்றுள்ளது. இளமையில் ஒரே கல்லூரியில் படித்தும் இருவரும் சந்தித்து கொள்ளாததுதான் இதில் சுவாரஸ்யம்.
நகைச்சுவை, குணசித்திரம் என எந்த கேரக்டராக இருந்தாலும் தூள் கிளப்புபவர் முனீஷ் காந்த். அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: சண்டை போடுறவன், கெத்து காட்டுறவன் எல்லாம் வீரன் கிடையாது. யார் வீரன் தெரியுமா.. ஒரு கல்யாணம் பண்ணி, பொண்டாட்டிய நிம்மதியா பாத்துட்டு, புள்ளக்குட்டிய பெத்துட்டு கடைசி வரை கர சேக்குறான் பாருங்க. அவன்தான் பெரிய வீரன் எனக் கூறினார்.
➤மேஷம் – உற்சாகம் ➤ ரிஷபம் – விவேகம் ➤மிதுனம் – நன்மை ➤கடகம் – ஆதரவு ➤சிம்மம் – போட்டி ➤கன்னி – பணிவு ➤துலாம் – நற்செயல் ➤விருச்சிகம் – கவலை ➤தனுசு – மேன்மை ➤மகரம் – சுகம் ➤கும்பம் – வரவு ➤மீனம் – எதிர்ப்பு.
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கவுள்ள ட்ரம்ப், புதிய பர்ப்யூம்களை அறிமுகப்படுத்தி உள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் போது, ட்ரம்ப் மீது துப்பாக்கி சூடு நடந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய ட்ரம்ப், அதே இடத்தில் மீண்டும் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது முகம் சிவக்க அவர் முழக்கமிட்ட வார்த்தைகள் Fight, Fight, Fight. அதை நினைவுப்படுத்தும் வகையில் பர்ப்யூமுக்கு பெயரிடப்பட்டுள்ளது. வெற்றிக்கான பர்ப்யூம்!
Sorry, no posts matched your criteria.