News December 8, 2024

வெற்றியை வசமாக்குவார்களா ரிஷப் பண்ட், நிதிஷ்?

image

அடிலெய்ட் டெஸ்டில் 2ஆவது இன்னிங்சில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 128 ரன்கள் நேற்று எடுத்திருந்தது. போட்டி முடிய இன்னமும் 3 நாள் உள்ள நிலையில், இந்திய அணி 29 ரன் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. மேலும் ஒன்றரை நாள் நிலைத்து ஆடி அதிக ரன்கள் எடுத்தால்தான் வெற்றி சாத்தியம். ரிஷப் பண்ட், நிதிஷ் ரன் குவித்தால் மட்டுமே இது சாத்தியம். சாதிப்பார்களா பண்ட், நிதிஷூம்? கீழே கமெண்ட் பதிவிடுங்க.

News December 8, 2024

3 நாள்களில் ரூ.500 கோடி.. பட்டையை கிளப்பும் புஷ்பா 2

image

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ரஷ்மிகா, பகத் பாசில் நடிப்பில் கடந்த 5ஆம் தேதி ரிலீசான புஷ்பா 2 படம், வெளியான நாள் முதல் வசூலை வாரிக் குவித்து வருவதாகக் கூறப்படுகிறது. அதன்படி, கடந்த 3 நாள்களில் மட்டும் ரூ.500 கோடி வசூலை புஷ்பா 2 திரைப்படம் தாண்டி விட்டதாக படக்குழு தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. முதல் நாளில் மட்டும் ரூ.250 கோடி வசூலித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 8, 2024

டிசம்பர் 8: வரலாற்றில் இன்று

image

1825 – முதலாவது நீராவிக் கப்பல் (என்டர்பிரைசஸ்) இந்தியாவில் சாகர் துறைமுகத்தை வந்தடைந்தது.
* 1935: இந்தி நடிகர் தர்மேந்திரா பிறந்தார்
* 1939: பாடகி எல்.ஆர். ஈஸ்வரி பிறந்தார்
* 1947 – இயக்குநர் கங்கை அமரன் பிறந்தார்
* 1953: மறைந்த காமெடி நடிகர் மனோபாலா பிறந்தார்
* 1971- இந்திய-பாகிஸ்தான் போர் மூண்டது
* 2014: கர்நாடக இசையமைப்பாளர் நெடுநுரி கிருஷ்ணமூர்த்தி காலமானார்.

News December 8, 2024

சிரியா தலைநகரை நெருங்கிய கிளர்ச்சியாளர்கள் படை

image

சிரியா தலைநகர் டமாஸ்கசை கிளர்ச்சியாளர்கள் படை நெருங்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 2 மாகாணங்களை நேற்று பிடித்த துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள் படை, நாட்டின் மிகப்பெரிய மாகாணமான ஹோம்சுக்குள்ளும் நுழைந்து விட்டது. இப்பகுதி தலைநகர் டமாஸ்கசில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனால் எந்நேரமும் டமாஸ்கசையும் அவர்கள் கைப்பற்றலாம் எனக் கூறப்படுவதால் சிரியாவில் பதற்றம் நிலவுகிறது.

News December 8, 2024

UNLIMITED DATA.. புதிய திட்டத்தை வெளியிட்டது VI

image

வாடிக்கையாளர்களை ஈர்க்க VI புதுப்புது ப்ரீபெய்ட் திட்டங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில், ரூ.365க்கு ரீசார்ஜ் திட்டத்தை வெளியிட்டுள்ளது. அதில் அன்லிமிடெட் அழைப்பு, தினமும் 2 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ், மாதம் 2ஜிபி டேட்டா அளிக்கிறது. நள்ளிரவு 12- மதியம் 12 மணி வரை அன்லிமிடெட் டேட்டா, திங்கள்-வெள்ளி வரை பயன்படுத்தாத டேட்டாவை சனி, ஞாயிறு ஆகிய 2 நாள்களுக்கு சேமிக்கும் வசதியும் உள்ளது.

News December 8, 2024

தமிழ்நாட்டில் மன்னராட்சியா? செல்வபெருந்தகை பதில்

image

விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனன், 2026 தேர்தலில் தமிழகத்தில் மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் எனக் கூறியிருந்தார். ஸ்டாலின், உதயநிதியை மனதில் வைத்தே அவர் இவ்வாறு பேசியதாக பரவலாக கூறப்படுகிறது. இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த செல்வ பெருந்தகை, தமிழகத்தில் மன்னராட்சி நடக்கவில்லை. குடியாட்சிதான் நடக்கிறது என்றார். 1971ல் மன்னராட்சி முடிவுக்கு வந்து விட்டதாகவும் தெரிவித்தார்.

News December 8, 2024

HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (டிச.8) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News December 8, 2024

தி.மலையில் பள்ளிகளுக்கு இன்று முதல் 9 நாள் விடுமுறை

image

தி.மலை மாநகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கும் இன்று முதல் 16ஆம் தேதி வரை 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்பு பணி, வரும் 13ஆம் தேதி தீப திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, இந்த மாவட்டத்திற்கு அரையாண்டுத் தேர்வு ஜன.2ஆம் தேதி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News December 8, 2024

ரூ.5,000 டெபாசிட் SMS வருகிறதா? புது மோசடி

image

அப்பாவி மக்களின் பணத்தை திருட மோசடி கும்பல் புது வழியை கண்டுபிடித்துள்ளதாக போலீஸ் எச்சரித்துள்ளது. வங்கிக் கணக்குக்கு ரூ.5,000 அனுப்பி, அதை திருப்பி அனுப்பும்படி கோரிக்கை வைப்பதாகவும், அதை நம்பி UPIயில் பேலன்ஸ் பார்க்க பாஸ்வேர்ட் கொடுத்தால் உடனே லிங்க் மூலம் பணத்தை திருடி விடுவதாக எச்சரித்துள்ளனர். எனவே, ரூ.5,000 டெபாசிட் என SMS வந்தால் உடனே பேலன்ஸ் பார்க்க வேண்டாம் எனக் கூறியுள்ளனர்.

News December 8, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால். ▶குறள் இயல்: குடியியல்.
▶அதிகாரம்: குடிசெயல்வகை.. ▶குறள் எண்: 1022 ▶குறள்: ஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின் நீள்வினையால் நீளும் குடி. ▶பொருள்: முயற்சி நிறைந்த அறிவு என்று சொல்லப்படும் இரண்டினையும் உடைய இடைவிடாத செயலால் ஒருவனுடைய குடி உயர்ந்து விளங்கும்.

error: Content is protected !!