India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உலகக் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா 3ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இன்றைய போட்டியில் இந்தியாவை வெற்றி கொண்ட ஆஸ்திரேலிய அணி, 60.71 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது. இரண்டாவது இடத்தில் 59.26 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்க அணி இருக்கிறது. 57.29 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்திய அணி, இறுதிப் போட்டிக்கு தகுதிபெற இன்னும் சில போட்டிகளில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது
DMK கூட்டணியில் இருந்து கொண்டே ‘மன்னர் ஆட்சி’ என VCK Dy GS ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளது சர்ச்சையாக வெடித்துள்ளது. அவரை உடனடியாக கட்சியை விட்டு நீக்க வேண்டும் என VCK நிர்வாகிகள் திருமாவுக்கு அழுத்தம் கொடுப்பதாகத் தெரிகிறது. ஆனால், விசிகவின் ‘வெல்லும் சனநாயம்’, ‘மது ஒழிப்பு மாநாடு’ ஆகியவற்றை நடத்திய ‘Voice Of Commons’ ஆதவ் அர்ஜுனாவின் நிறுவனம். அதனாலேயே திருமா சற்று தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.
அய்யயொ சாமி என நாய் துரத்த ஓடாதவர்கள் குறைவே. அவ்வாறு நாய் துரத்தினால் தப்பிக்க சில டிப்ஸ் * நாயை திசை திருப்புங்கள். எதையாவது காட்டி தூக்கி எறியுங்கள் * நாய்களின் கண்களை நேரடியாக பார்ப்பதை தவிர்க்கவும், அது அவற்றிற்கு கோவத்தை கொடுக்கும் * நீங்கள் மெதுவாக நடக்கும்போது நாய் உங்களை நோக்கி வந்தால் அப்படியே நின்றுவிடுங்கள். அவை ஒன்றும் செய்யாது * பயத்தை காட்டவே வேண்டாம். ட்ரை பண்ணி பாருங்க….
IND அணிக்கு எதிரான 2வது BGT டெஸ்ட் போட்டியில் AUS அணி அபார வெற்றி பெற்றுள்ளது. முதல் இன்னிங்ஸில் இரு அணிகளும் முறையே 180 மற்றும் 337 ரன்கள் எடுத்தனர். பின்னர் 2வது இன்னிங்ஸில் ஆஸி., அணியின் அபார பந்துவீச்சால் IND அணி 175 ரன்களுக்கு சுருண்டது. 19 ரன் இலக்குடன் ஆடிய ஆஸி., 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் தொடரை 1-1 என சமன் செய்தது.
‘SK25’ படத்தின் ஷூட்டிங் டிச. 21ஆம் தேதி தொடங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா, ஜெயம் ரவி, ஸ்ரீலீலா ஆகியோர் இப்படத்தில் நடிக்கவுள்ளனர். ₹140 கோடி பட்ஜெட்டில் இப்படத்தை தயாரிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் சிவகார்த்திகேயனை வைத்து போட்டோஷூட் நடத்தப்பட்டது. அந்த புகைப்படங்கள் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
3ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்தியாவில் பண்ட் 28(31), அஸ்வின் 7(14), ஹர்ஷித் ராணா 0(12), நிதிஷ் குமார் ரெட்டி (42), சிராஜ் 7(7) ஆகியோர் எடுத்து வெளியேற, பும்ரா 2(5) ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்திய அணி 175 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் ஆஸி.க்கு 19 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆஸி.யில் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகள், ஸ்டார்க், போலந்து தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
கடும் போராட்டத்திற்கு பிறகு, இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது. காலை முதல் தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்து வந்த நிலையில், நிதிஷ் குமார் ரெட்டி சிக்ஸ் அடித்து இந்திய அணிக்கு முன்னிலை பெற்று கொடுத்துள்ளார். இதுவரை இந்தியா 166/8 எடுத்து, 8 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நிதிஷ் குமார் ரெட்டி 42(46), பும்ரா 2(4) ரன்களுடன் களத்தில் இருக்கிறார்கள்.
சென்னையில் இன்று கோழி இறைச்சியின் விலை கிலோ ₹230 முதல் ₹280 வரை விற்பனையாகிறது. நாமக்கல் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் நிர்ணயித்த விலையின்படி, கறிக்கோழி கிலோ ₹95ஆகவும், முட்டைக்கோழி கிலோ ₹110ஆகவும் விற்கப்படுகிறது. நாமக்கல்லில் இன்று முட்டை மொத்த விலை 10 பைசா உயர்ந்து ₹5.90ஆக உள்ளது. சென்னையில் இது ₹6.50 முதல் ₹7.00 வரை விற்கப்படுகிறது.
அம்பாளை தரிசிச்சிட்டு எந்த ஒரு காரியத்தை செஞ்சாலும் வெற்றி கிடைக்கும்னு சொல்லுவாங்க. அதுக்காக இவங்க ரெண்டு பேரும் என்ன பண்ணியிருக்காங்க பாருங்க. நாகர்கோவில்ல இரவு அம்மன் கோயிலுக்குள்ள போனவங்க விளக்கு பொருத்தி சாமி கும்பிட்டுட்டு, அந்த விளக்கையே திருடிட்டு போயிருக்காங்க. போலீஸ் மனோஜ், அர்ஜூன்னு ரெண்டு பேரை கைது பண்ணி விசாரணை நடத்திட்டு இருக்காங்க.
Under 19 ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. இப்போட்டியில் இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷியின் மீதே அனைவரின் கவனமும் உள்ளது. இந்திய அணி: ஆயுஷ் மத்ரே, சூர்யவன்ஷி, ஆந்த்ரே , அமான்(C), கார்த்திகேயா, நிகில் குமார், ஹர்வன்ஷ் சிங்(வ), கிரண், ஹர்திக் ராஜ், சேத்தன் சர்மா, யுதாஜித் குஹா. All the best team India
Sorry, no posts matched your criteria.