News December 8, 2024

சென்னை Trafficக்கு இனி டாட்டா: வருகிறது Air Taxi

image

எங்க கிளம்பினாலும் ட்ராபிக், எப்போ பார்த்தாலும் டிராபிக் என தவிப்பவர்களுக்கு வரப்பிரசாதமாக வரவிருக்கிறது Air Taxi. இந்த Air Taxi பெங்களூரு நகரில் விரைவில் அறிமுகமாகவுள்ளதாம். இதன் மூலம் 4 மணி நேரம் பயணம் செய்யும் இடங்களுக்கு 40 நிமிடத்தில் போய்விடலாம் என்கிறார்கள். விரைவில் இது சென்னையிலும் வரவுள்ளதாம். எல்லாம் ஓகே ரேட் எவ்வளோ இருக்கும்னு தெரியலையே எந்த ஊருக்கு முதலில் வேணும் கமெண்ட் பண்ணுங்க.

News December 8, 2024

சினிமாவில் கடைசி வரை நிறைவேறாத விஜய்யின் ஆசை

image

நடிகராக உச்சம் தொட்டு விட்டார் விஜய் எனலாம். இன்னும் ஒரு படத்தின் அரசியல் பக்கம் போக ரெடியாகிவிட்டார் தளபதி. பெரிய வெற்றி, தோல்வி, பாக்ஸ் ஆபிஸ் மெகா ஹிட் என கடந்து விட்ட அவருக்கு சினிமாவில் நிறைவேறாத ஆசை ஒன்று இருக்கிறதாம். விஜய்க்கு 2000க்கு பிறகு படம் இயக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததாம். இதனை விஜய் மில்டன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். விஜய் படம் டைரக்ட் பண்ணியிருந்த எப்படி இருக்கும்?

News December 8, 2024

மதுரை எய்ம்ஸ் எப்போது பயன்பாட்டிற்கு வரும்?

image

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2027 பிப்ரவரி மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என RTIல் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ கல்விசார் கட்டடம், நர்சிங் கல்லூரி, ஹாஸ்டல், வெளிநோயாளிகள் பிரிவு உள்ளிட்டவற்றின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறப்பட்டுள்ளது. இதற்காக லார்சன் அண்டு டூப்ரோ கட்டுமான நிறுவனத்துடன், ₹1,118.35 கோடி மதிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 8, 2024

மோசமான சாதனையில் இணைந்த கேப்டன் ரோஹித்!

image

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து அதிக ஆட்டங்களில் தோற்ற இந்திய அணி கேப்டன் லிஸ்டில் ரோஹித்தும் இணைந்துள்ளார். முதல் இடத்தில் MAK பட்டோடி (1967-68) வரை தொடர்ந்து 6 டெஸ்ட் போட்டிகளில் தோற்றுள்ளார். 2வது சச்சின் 5 (1999-2000), 3வது இடத்தில் Datta Gaekwad (1959), தோனி (2011,2014), விராட் கோலி (2020-21), ரோஹித் (2024) * ஆகியோர் தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளனர்.

News December 8, 2024

இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்

image

வங்கக் கடலில் உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறவுள்ளது. இதன் தாக்கத்தால் வரும் 10ஆம் தேதி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்பின், தமிழகத்தில் கனமழையானது 3 நாள்களுக்கு தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 8, 2024

அடிலெய்டில் வரலாறு படைத்த ஆஸ்திரேலியா

image

அடிலெய்டில் இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் மோதிய 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸி., அபார வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை நடைபெற்றுள்ள IND-AUS போட்டிகளில் மிக குறைந்த பந்துகளில் முடிந்த ஆட்டம் இதுதான். மொத்தம் 2 நாள்கள் 2 மணி நேரம் மட்டுமே நடந்த இப்போட்டியில் மொத்தமாக 1031 பந்துகள் மட்டுமே வீசப்பட்டுள்ளன.

News December 8, 2024

சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்

image

சபரிமலையில் மண்டல காலத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில், இதுவரை 17 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். இதில் நேற்று முன்தினம் அதிகமாக 89,840 பேரும், நேற்று 90,000க்கும் பேரும் தரிசனம் மேற்கொண்டுள்ளனர். ஆன்லைன் மூலம் 70,000 பக்தர்களுக்கும், உடனடி முன்பதிவு மூலம் 10,000 பக்தர்களுக்கும் மட்டுமே அனுமதி எனக் கூறப்பட்டிருந்த போதிலும், அதைவிட அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

News December 8, 2024

சிரியா விஷயத்தில் US அமைதியா இருக்கனும்: டிரம்ப்

image

சிரியா, USAஇன் நட்பு நாடு இல்லை என்பதால் அமெரிக்க அரசு தலையிடக் கூடாது என அதிபராக தேர்வாகியுள்ள டிரம்ப் கூறியுள்ளார். சிரியாவில் கடந்த 13 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நீடித்து வரும் நிலையில், HTS கிளர்ச்சியாளர்கள் தலைநகர் டமாஸ்கஸில் நுழைந்துள்ளனர். அச்சத்தில் நாட்டைவிட்டு வெளியேறிய அந்நாட்டு அதிபர் பஷர் அல் ஆசாத், பயணித்த விமானம், ரேடார் சிக்னலில் இருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

News December 8, 2024

உ.பி.யை கலக்கிய ‘வாரிசு திருடன்’

image

தெலுங்கு படங்களின் பழைய ஸ்கிரிப்ட்டை அப்படியே காப்பி அடித்து, இப்போ போலீஸ் கிட்ட மாட்டிக்கொண்டுள்ளார் இந்த “வாரிசு திருடன்”. ஏதோ ஒரு வகையில் வாரிசு இல்லாத வசதியான குடும்பத்தை குறிவைத்து, அதில் நுழைந்து, பணம் நகைகளை கொள்ளை அடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் ராஜூ. இப்படியே உ.பி.யில் 9 குடும்பங்களில் ஸ்கெட்ச் போட்டவர், ஒரு வீட்டில் கொஞ்ச அவசரப்பட DNA டெஸ்ட் களி தின்ன வைத்து விட்டது.

News December 8, 2024

100க்கும் மேற்பட்ட நாதகவினர் திமுகவில் இணைந்தனர்

image

சமீபமாக நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில், திருவள்ளூர் மாவட்ட நாதக நிர்வாகிகள் சபரீஷ், சதீஷ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் அமைச்சர் நாசர் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். ”சங்கி என்றால் நண்பன்” என்று சீமான் பாஜகவுக்கு ஆதரவாக பேசுவதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

error: Content is protected !!