India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
போட்டிப்போட்டுக் கொண்டு ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தி வந்த ஏர்டெல், ஜியோவுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட்டை கொடுத்துள்ளனர் வாடிக்கையாளர்கள். கடந்த ஜூலை முதல் அக்டோபர் வரையிலான மூன்றே மாதத்தில் ஏர்டெல், ஜியோ, ஐடியா வாடிக்கையாளர்கள் சுமார் 55 லட்சம் பேர் பிஎஸ்என்எல்-க்கு மாறிவிட்டனர். அதே சமயத்தில், பிஎஸ்என்எல்-இலிருந்து மற்ற நெட்வொர்க்குகளுக்கு மாறுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருக்கிறது.
USA அதிபராக தேர்வாகியுள்ள டொனால்ட் டிரம்ப், ஃபிரான்ஸ் அதிபர் மேக்ரான் ஆகியோரை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்து பேசியுள்ளார். ரஷ்யாவுடனான போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவதே அனைவரின் விருப்பமாக உள்ளதாகவும், அமைதி மற்றும் உக்ரைன் மக்களின் பாதுகாப்பு குறித்து இச்சந்திப்பில் பேசியதாகவும் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். மேலும், போரை நிறுத்துவதில் டிரம்ப் உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்று சோக நாளாக மாறியுள்ளது. இன்று நடைபெற்ற 3 போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது. ஆஸி.க்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டில் தோல்வி. ஆஸி.க்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி தோல்வி. 19 வயதிற்குட்பட்டோருக்கான போட்டியில் இந்தியாவின் இளம் படையும் தோல்வியடைந்துள்ளது. சத்திய சோதனை என ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
புதுச்சேரி EX CM ராமசந்திரன் மறைவு செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன் என்று ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். திமுக சார்பில் முதலமைச்சராக இருந்து புதுச்சேரியின் வளர்ச்சிக்காகப் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி சாதனைப்படைத்தவர். அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் ஆழ்ந்த ஆறுதலை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
இன்று அனைத்து வயதினருக்கும் செல்போன் அத்தியாவசிய தேவையாகிவிட்டது. ஆனால் பெற்றோர்- குழந்தைகள் உறவில் விரிசல் ஏற்படுவதற்கு ஸ்மார்ட்போன்கள் முக்கிய காரணமாக இருப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது பற்றி தெரியுமா? 73% பெற்றோர்களும், 69% குழந்தைகளும் இதை உறுதி செய்துள்ளனர். ஆனால், அதே பெற்றோர்களே, மொபைல் போனை அதிக நேரம் யூஸ் பண்ணுவதில் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருப்பதுதான் ட்விஸ்ட்.
இந்தியா கூட்டணிக்கு தலைமை ஏற்க மம்தா பானர்ஜிக்கு அனைத்து தகுதியும் உள்ளதாக சரத் பவார் கூறியுள்ளார். மம்தா திறமையான தலைவர், எதிர்க்கட்சி கூட்டணிக்கு தலைமை தாங்கி, அதை திறமையாக வழிநடத்த அவருக்கு மோதுமான அரசியல் அனுபவம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ராகுல் மீது I.N.D.I.A கூட்டணி தலைவர்கள் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படும் நிலையில், சரத் பவாரின் இந்த கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.
RJ பாலாஜி இயக்கும் ‘சூர்யா 45’ திரைப்படத்தில் ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவாளராக கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில், அவரை வரவேற்று படக்குழு இன்று போஸ்டர் ஒன்றை வெளியிட்டது. ஆனால், இதில் ஏ.ஆர். ரஹ்மானின் பெயர் இடம்பெறவில்லை. இதற்கு முன்பு வெளியான அப்டேட் போஸ்டர்களில் ரஹ்மானின் பெயர் இருந்தது. ஏ.ஆர். ரஹ்மான் ஓய்வுபெறவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதனை உறுதிப்படுத்தும் விதமாக இந்த போஸ்டர் அமைந்துள்ளது.
கேரள மாநிலம் கோட்டயத்தில் 12-ந்தேதி தந்தை பெரியார் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற உள்ளது. இதையொட்டி, வைக்கத்தில் உள்ள பெரியார் நினைவிடத்தில், அவரது வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் புகைப்பட கண்காட்சிக் கூடம், நூலகம், பார்வையாளர் மாடம், சிறுவர் பூங்கா உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. இதனை திறந்த வைப்பதற்காக CM ஸ்டாலின் 11ம் தேதி கேரளா செல்கிறார். அம்மாநில CM பினராயி விஜயனும் இவ்விழாவில் பங்கேற்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடந்துள்ளது. மக்களின் வாக்குகளின் படி, பிக்பாஸ் வீட்டில் இருந்து ஆர்.ஜே.ஆனந்தி மற்றும் தர்ஷிகா ஆகியோர் மிகவும் குறைவான வாக்குகளுடன் கடைசி இடத்தில் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் எலிமினேஷனில் நடந்த ஒரு ட்விஸ்ட் காரணமாக யாருமே எதிர்பாராத வகையில் ஆர்.ஜே.ஆனந்தி கண்ணீருடன் வெளியேறியுள்ளார். அதற்கு அடுத்ததாக சாச்சனா வெளியேறினார்.
புரோ கபடி லீக் தொடரில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸை, பாட்னா பைரேட்ஸ் அணி அதிரடியாக வீழ்த்தியது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 38-28 என்ற புள்ளிக்கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அசத்தல் வெற்றி பெற்றது. இன்று நடைபெற்று வரும் மற்றொரு ஆட்டத்தில் யு மும்பா – குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் ஆடி வருகின்றன. இந்த தொடரில் 12 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், ஹரியானா அணி 67 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
Sorry, no posts matched your criteria.