News December 9, 2024

தப்புமா கவுதம் கம்பீர் பதவி?

image

ஆஸிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி வென்றதால், பயிற்சியாளர் கவுதம் கம்பீர் சற்று நிம்மதியில் இருந்தார். இந்நிலையில், 2ஆவது டெஸ்டில் தோல்வியடையவே மீண்டும் கம்பீரின் பயிற்சியாளர் பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எஞ்சிய 3 டெஸ்டுகளிலும் இந்தியா வென்றாலோ (அ) தொடரை வென்றாலோதான் கம்பீரின் பயிற்சியாளர் பதவித் தப்பும். இல்லையேல் சிக்கல்தான். நீங்கள் என்ன நினைக்கிறீங்க. கீழே பதிவிடுங்க.

News December 9, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால். ▶குறள் இயல்: குடியியல்.
▶அதிகாரம்: குடிசெயல்வகை.. ▶குறள் எண்: 1023 ▶குறள்: குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும். ▶பொருள்: என் குடியை உயரச் செய்வேன் என்று முயலும் ஒருவனுக்கு ஊழ், ஆடையைக் கட்டிக் கொண்டு தானே முன் வந்து துணை செய்யும்.

News December 9, 2024

இன்றைய நல்ல நேரம்!

image

▶நாள்- டிசம்பர்- 09 ▶கார்த்திகை – 24 ▶கிழமை: திங்கள் ▶ஆண்டு: குரோதி ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM, 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 1:45 AM – 2:45 AM, 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி:நவமி ▶சூலம்: கிழக்கு▶பரிகாரம்: தயிர் ▶பிறை: வளர்பிறை ▶;சுபமுகூர்த்தம்: இல்லை ▶நட்சத்திரம்: பூரட்டாதி.

News December 9, 2024

ஆண்கள் நடத்திய வினோத திருவிழா

image

உடலில் சேற்றை பூசிக்கொண்டு ஆண்கள் மட்டுமே நடத்திய வினோத திருவிழா ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கொடைக்கானல் அருகே முத்தாலம்மன் கோயிலில், 2 வருடத்திற்கு ஒரு முறை இந்த விழா உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. முக்கிய நிகழ்வாக பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் சேற்றால் அடித்துக் கொள்வார்கள். இதனால் தங்களுக்கு நோய் நொடிகள் எதுவும் வருவதில்லை எனவும், விவசாயம் செழிப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

News December 9, 2024

யார் இந்த அபு முகமது அல் ஜொலானி?

image

சிரியா நாட்டில் ஆட்சியை கவிழ்த்து உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் HTS கிளர்ச்சிப் படையின் தலைவர் முகமது அல் ஜொலானி (42). அல்காயிதா இயக்கத்தின் துணை இயக்கமான அல் நுஸ்ராவை உருவாக்கியவர் அல் ஜொலானி. பின், சில தீவிரவாத இயக்கங்களையும் இணைத்துக் கொண்டு HTS அமைப்பை நிறுவினார். அடக்குமுறை அரசை கவிழ்ப்பதே தன் லட்சியம் என்று சொல்லும் அல் ஜொலானி, சிரியாவை மற்றொரு ஆப்கானிஸ்தானாக மாற்றாமல் இருந்தால் சரி.

News December 9, 2024

ராசி பலன்கள் (09-12-2024)

image

➤மேஷம் – விருத்தி ➤ ரிஷபம் – தனம் ➤மிதுனம் – மேன்மை ➤கடகம் – நலம் ➤சிம்மம் – ஓய்வு ➤கன்னி – நன்மை ➤துலாம் – இன்பம் ➤விருச்சிகம் – மறதி ➤தனுசு – நிம்மதி ➤மகரம் – ஜெயம் ➤கும்பம் – அமைதி ➤மீனம் – முயற்சி.

News December 9, 2024

உதயநிதி படங்களில் கொள்கை இருந்தது: பொன்முடி

image

உதயநிதியின் திரைப்படங்களையும், விஜய்யின் திரைப்படங்களையும் ஒப்பிட்டு அமைச்சர் பொன்முடி கருத்து தெரிவித்துள்ளார். திமுகவை விஜய் விமர்சித்தது குறித்து கேள்விக்கு பதிலளித்த பொன்முடி, உதயநிதியும் நடிகராக இருந்துதான் அரசியலுக்கு வந்திருக்கிறார். இருந்தபோதிலும், அவரது படங்களில் கொள்கை இருந்தது. ஆனால், விஜய் படங்களில் எந்தக் கொள்கையுமே இல்லை எனத் தெரிவித்தார்.

News December 9, 2024

PAK வீரர்களும் IND செல்லக் கூடாது: அஃப்ரிடி

image

IND வீரர்கள் PAK வர மறுத்தால், எவ்வளவு முக்கியமான போட்டியாக இருந்தாலும் PAK வீரர்களும் IND செல்லக்கூடாது என ஷாகித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய காலம் இது எனவும், பணம் சம்பாதிப்பதற்காக உரிமைகளை விட்டுத் தரக்கூடாது எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் PAK-ல் வந்து விளையாடமாட்டோம் என IND அணி கூறிவருகிறது.

News December 9, 2024

நாங்களா அப்பவே அப்படி..! விண்டேஜ் புள்ளிங்கோஸ்

image

இந்த காலத்து காலேஜ் பசங்கலாம் ரொம்ப அடாவடி பண்றாங்க.. நாங்கலாம் காலேஜ் படிக்கும் போது எப்படி இருந்தோம் தெரியுமா என அங்கிள்ஸும், தாத்தாக்களும் சொல்வதை கேட்டிருப்போம். ஆனால், எந்தக் காலமாக இருந்தாலும் இளசுகளின் ரவுசு ஒன்றுதான் என இந்த போட்டோ கூறுகிறது. 1982-இல் சென்னையில் பஸ் டே கொண்டாட்டத்தில் அட்ராசிட்டி செய்யும் அப்போதைய புள்ளிங்கோஸை பாருங்க. கேட்டா அது வாலிப வயசாமே..

News December 9, 2024

நீங்க இந்துவா முஸ்லிமா..?

image

டெல்லி பாஜக கவுன்சிலர் ரவீந்திர சிங் செய்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சாலையோரக் கடைகளுக்குச் சென்ற அவர், ‘‘நீங்கள் முஸ்லிமாக இருந்தால் உங்கள் பெயரை கடையில் எழுதுங்கள். இந்துவாக இருந்தால் காவி நிற கொடியை வைத்துக் கொள்ளுங்கள்’’ என பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. கடை வியாபாரிகள் மத ரீதியாக தங்களை அடையாளப் படுத்த வேண்டும் என சிறுபான்மை வெறுப்பு பேச்சை பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

error: Content is protected !!