India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை பெரம்பூரில் ரவுடி அறிவழகனை போலீசார் சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வியாசர்பாடியை சேர்ந்த A கேட்டகரி ரவுடியான அறிவழகனை பிடிப்பதற்காக பனந்தோப்பு சென்ற போலீசாரை, அவர் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால், தற்காப்புக்காக அவரை காலில் சுட்டு போலீசார் பிடித்துள்ளனர். அதிகாலையில் பொது இடத்தில் நடந்த இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
நிலச்சரிவால் திருவண்ணாமலையில் உயிரிழந்த 7 பேருக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். ஜெய்ப்பூர் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த அவர், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, திருவண்ணாமலை இறப்பு வருத்தமளிப்பதாக கூறினார். ‘கூலி’ படப்பிடிப்புக்காக அவர் ஜெய்ப்பூர் செல்வது குறிப்பிடத்தக்கது.
இந்த சந்தேகம் உங்களுக்கு வந்தே இல்லையா? காசோலையில் ₹10,000 என பணத்தை எழுதிய பிறகு, பத்தாயிரம் ரூபாய் ‘மட்டும்’ என குறிப்பிடுவார்கள். இந்த ‘மட்டும்’ ஏன் தெரியுமா? காசோலையில் குறிப்பிட்ட தொகைக்கு பிறகு எண்களைச் சேர்த்து விடாமல் இருக்கவும், குளறுபடி, ஏமாற்று வேலைகளை தவிர்க்க இந்த வழக்கம் வந்துள்ளது. (எடுத்துக்காட்டு) ₹10,000 எழுதிய பிறகு, ₹1,00,000 என மாற்றிவிடாமல் இருக்க இந்த நடைமுறை வந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் 10 நாள்களுக்குப் பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. ஃபெஞ்சல் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட அம்மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ச்சியாக விடுமுறை விடப்பட்டு வந்தது. தற்போது நிலைமை சிறிது சீரடைந்திருக்கும் நிலையில், பள்ளிகள் திறக்கப்படுகின்றன. நிலைமை மிகவும் மோசமாக இருக்கும் 7 அரசுப் பள்ளிகள் மட்டும் இன்று செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
16 திங்கட்கிழமை சிவன் – பார்வதியை வழிபாடு செய்தால், மனகஷ்டங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. இந்த விரதத்தை மேற்கொள்ள, ஒவ்வொரு திங்கள் காலையில் நீராடி உண்ணாமல் சிவன் பார்வதிக்கு பூஜை செய்யவேண்டும். உணவிற்கு பதிலாக பழச்சாறுகள், பால், பழம் எடுத்து கொண்டு பூஜை செய்யலாம். வில்வ இலைகள், செவ்வரளி மலர்கள், சங்கு பூக்களை படைக்கலாம். நைவேத்தியமாக பழங்கள் இயன்ற பாயாசம், சர்க்கரைப் பொங்கல் படைக்கலாம்.
திமுக அரசின் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று இபிஎஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை அயனாவரத்தில் மனநிலை குன்றிய கல்லூரி மாணவி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில், திமுக அரசுக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் வந்தால், முறையாக விசாரிக்க ஸ்டாலின் அரசின் காவல்துறைக்கு தெரியாதா? எனவும் இபிஎஸ் வினவியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள குடும்ப நல கோர்ட்டுகளில் 33,000 வழக்குகள் தேக்கம் அடைந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 40 குடும்ப நல நீதிமன்றங்கள் உள்ளன. இதில் விவாகரத்து, ஜீவனாம்சம் உள்ளிட்ட பல்வேறு குடும்ப விவகாரங்கள் குறித்த 33,213 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 17,638 வழக்குகள் இந்தாண்டில் தொடரப்பட்டவை ஆகும். கடந்த 10 ஆண்டுகளில் 3 மடங்கு விவாகரத்து வழக்குகள் அதிகரித்துள்ளன.
கர்நாடக வங்கியில் P.O. வேலைக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாளாகும். நாடு முழுவதும் உள்ள கர்நாடக வங்கிக் கிளைகளில் காலியாக உள்ள P.O. வேலைக்கு விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. இதற்கான விண்ணப்பப்பதிவு <
தனது வாழ்க்கையை கேன்சர் நோய் புரட்டிப் போட்டு விட்டதாக நடிகை கவுதமி வேதனை தெரிவித்துள்ளார். சந்தேகத்தின்பேரில் தாம் மருத்துவ பரிசோதனை செய்ததாகவும், அப்போதுதான் தனக்கு கேன்சர் இருப்பது தெரிய வந்ததாகவும் அவர் கூறியுள்ளார். தனது மகளுக்காகவே தாம் வாழ்ந்ததாகவும், கேன்சருக்கு தாம் எடுத்த சிகிச்சைகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் அவரிடம் கூறியதாகவும் கவுதமி குறிப்பிட்டுள்ளார்.
சென்னை அயனாவரத்தில் மனநிலை குன்றிய கல்லூரி மாணவியை 7 பேர் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்து அண்ணாமலை பதிவிட்டுள்ளார். கல்லூரி மாணவியை 7 பேர் பல மாதமாக பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய செய்தி மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ளார். பிற மாநில குற்றச் செயல்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் ஸ்டாலின், இதுகுறித்து ஏன் பேசாமல் இருக்கிறார்? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.