News December 9, 2024

என்னடா இது… தவெகவுக்கு வந்த புது சோதனை!

image

தூத்துக்குடி மாவட்ட தவெகவில் கோஷ்டி பூசல் உச்சமடைந்துள்ளதாக நிர்வாகிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கையே தற்போது தான் நடந்து வருகிறது. அதற்குள், நீ பெரியவனா, நா பெரியவனா என இரு தரப்பு பிரிந்து செயல்படுகிறதாம். ஆலோசனைக் கூட்டம், உறுப்பினர் சேர்க்கை என அனைத்தும் ஒரே மாவட்டத்தில் இருமுறை நடப்பதால், எந்த தலைமையின் கீழ் செயல்படுவது எனத் தெரியாமல் தொண்டர்கள் குழம்பியுள்ளனராம்.

News December 9, 2024

அரைசதத்தை விடுங்க…50 பந்துகள் கூட யாருமே ஆடல

image

10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்பது பெரிய தோல்வி தான். ஆஸி. அணிக்கு எதிராக 2-வது டெஸ்டில் 2-வது இன்னிங்ஸில் இந்திய அணி வீரர்கள் யாரும் அரைசதம் கூட அடிக்கவில்லை என விமர்சிக்கிறார்கள். ஆனால், ஒரு வீரரும் 50 பந்துகளை கூட எதிர்கொள்ளவே இல்லை தெரியுமா? அதிகபட்சமாக நிதிஷ் குமார் ரெட்டி 47 பந்துகளை எதிர்கொண்டிருந்தார். இதனை சுட்டிக்காட்டி, ஆகாஷ் சோப்ரா கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அட கடவுளே..

News December 9, 2024

வழக்குகள் முடித்து வைப்பு: சந்தேகம் எழுப்பும் காங்.,

image

CBI, ED செயல்பாடுகள் குறித்து மக்களவையில் விவாதிக்க அனுமதிகோரி காங்., கொறடா மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளார். அதில், அஜித் பவார், சந்திரபாபு நாயுடு மீதான மோசடி வழக்குகளை CBI, ED முடித்து வைத்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் வழக்குகள் முடித்து வைக்கப்படுகிறதா என்று கேள்வி எழுப்பிய அவர், மத்திய அரசு பதிலளிக்குமாறு கோரியுள்ளார்.

News December 9, 2024

பெண்களுக்கு மாதம் ரூ.7,000 புதுத் திட்டம்.. இன்று துவக்கம்

image

பெண்களுக்கு மாதம் ரூ.7,000 உதவித் தொகை அளிக்கும் புதிய திட்டத்தை PM மோடி இன்று ஹரியானாவில் தொடங்கி வைக்கவுள்ளார். இந்தத் திட்டம் முதல்கட்டமாக ஹரியானாவில் தற்போது செயல்படுத்தப்படுகிறது. பிறகு விரிவுபடுத்தப்படும். LIC பீமா சகி என்ற அந்தத் திட்டத்தின்கீழ் பெண்கள் முகவர்களாக நியமிக்கப்படுவர். அவர்களுக்கு முதலாண்டு ரூ.7,000, அடுத்தாண்டு ரூ.6,000, பின்னர் ரூ.5,000 உதவித்தொகை அளிக்கப்படும்.

News December 9, 2024

CM ஸ்டாலினை சந்திக்கிறார் திருமா

image

பல்வேறு அரசியல் சர்ச்சைகளுக்கு மத்தியில் CM ஸ்டாலினை இன்று திருமாவளவன் நேரில் சந்திக்கிறார். காலை 9 மணியளவில் தலைமைச் செயலகத்தில் இந்த சந்திப்பு நடக்க உள்ளது. ‘மன்னராட்சி’ என VCK துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியது அரசியல் விவாதமாக மாறியுள்ளது. இந்நிலையில், ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதி வழங்க உள்ள திருமா, ஆதவ் விவகாரம், அரசியல் சூழல் தொடர்பாகவும் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

News December 9, 2024

பாடநூல்கள், சீருடைகள் மீண்டும் வழங்கும் பணி தீவிரம்

image

ஃபெஞ்சல் புயலால் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட சில மாவட்​டங்கள் பெரியள​வில் பாதிக்​கப்​பட்​டுள்ளன. மழை, வெள்ள பாதிப்​பில் பள்ளி மாணவர்​களின் பாடநூல்​கள், சான்​றிதழ்கள் சேதமடைந்தன. அவ்வாறு பாதிக்​கப்​பட்ட மாணவர்​களின் விவரங்களை சேகரித்த, வட்டாரக் கல்வி அதிகாரி​கள், ஆசிரியர்கள் புள்ளி விவரங்களை பள்ளி​க்கல்​வித்துறை வசம் ஒப்படைத்​தனர். அதன்படி, புதிய பாடநூல் வழங்​கும் பணிகள் தொடங்​கப்​பட்​டுள்ளன.

News December 9, 2024

74 வயதில் முட்டை ஈன்ற உலகின் வயதான பறவை

image

பறவைக்கு 74 வயதா? என சட்டென ஆச்சரியமாக இருக்கும். 74 வயதில் பறவை ஒன்று 60வது முட்டை இட்டுள்ளது. காட்டில் வாழும் பல பறவைகள் 100 வயது வரை வாழ்கிறது. அல்பாட்ராஸ் இனத்தைச் சேர்ந்த கடற்பறவையான இப்பறவை தான் உலகின் வயதான பறவை எனப்படுகிறது. இப்பறவை இனம் சராசரியாக 68 வயது வரை வாழக்கூடியவை. 74 வயதில் ஆரோக்கியமாக இருக்கும் விஸ்டம் என பெயர்கொண்ட இது இதுவரை சுமார் 30 குஞ்சுகளைப் பொரித்திருக்கும்.

News December 9, 2024

சீனாவிலும் தொடரும் வசூல் வேட்டை!

image

நித்திலன், விஜய் சேதுபதி கூட்டணியில் உருவான ‘மகாராஜா’ சீனாவிலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. சீனாவில் 40,000க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியான இப்படம் வெளியான 10 நாள்களில் ரூ.64.05 கோடி வசூலித்துள்ளது. ஏற்கனவே உலகளவில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்த நிலையில், தற்போது சீனா வசூலையும் சேர்த்து ரூ. 166 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. 200 கோடியை தோடுவாரா மகாராஜா?

News December 9, 2024

வடமாவட்ட மக்களை வஞ்சித்த அரசு: சாடும் வானதி

image

வெள்ள எச்சரிக்கை கொடுக்காமல் சாத்தனூர் அணையை திறந்துவிட்டு, வடமாவட்டங்களை ஸ்டாலின் அரசு வஞ்சித்துள்ளதாக பாஜக MLA வானதி சீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளார். மழை, வெள்ள பாதிப்புகளை கையாண்டது குறித்து பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர சபாநாயகரிடம் அனுமதி கேட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். மக்கள் பிரச்னையை தீர்க்காமல், தங்களை விமர்சித்த விஜய் பற்றியே திமுகவினர் பேசி வருவதாகவும் சாடியுள்ளார்.

News December 9, 2024

பெரியம்மை கொடுமை என்ன தெரியுமா?

image

மனிதகுல வரலாற்றில் பல உயிர்களை காவு வாங்கிய கொடூர நோய்தான் பெரியம்மை. இது தாக்கியவர்களில் சுமார் 20% உயிரிழந்தனர். 1967ஆம் ஆண்டு மட்டும் உலகில் பெரியம்மையால் 20 லட்சம் பேர் உயிரிழந்ததாக தரவுகள் சொல்கின்றன. அதன்பின், WHO எடுத்த சீறிய முயற்சிகளால் மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு 1979ஆம் ஆண்டு பெரியம்மை கிருமிகள் உலகிலிருந்து முற்றிலுமாக அகற்றப்பட்டன.

error: Content is protected !!