News December 9, 2024

டங்ஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிராக பேரவையில் தீர்மானம்

image

மதுரை மேலூரில் டங்ஸ்டன் கனிம சுரங்கத்திற்கு மத்திய அரசு வழங்கிய அனுமதியை ரத்து செய்யக்கோரி சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. தீர்மானத்தை அவை முன்னவர் துரைமுருகன் முன்மொழிந்தார். அதில், மாநில அரசுகளின் அனுமதியின்றி எந்த சுரங்கத்திற்கும் அனுமதி வழங்கக் கூடாது எனவும், சுரங்கத்திற்கு தேர்வான பகுதி ஏற்கெனவே பல்லுயிர் பெருக்கத் தலமாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

News December 9, 2024

ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம்

image

திமுக குறித்து விமர்சித்ததாக எழுந்த புகாரில் ஆதவ் அர்ஜுனாவை கட்சியில் இருந்து 6 மாதங்கள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார் விசிக தலைவர் திருமாவளவன். விகடன் நடத்திய “எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” புத்தக வெளியீட்டு விழாவில் விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசிய “தமிழகத்தில் மன்னராட்சி நடக்கிறது” போன்ற கருத்துகள் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், விசிக நடவடிக்கை எடுத்திருக்கிறது

News December 9, 2024

ஹாலிவுட்டிலும் கெத்து காட்டும் புஷ்பராஜ்!

image

புஷ்பா 2வில் வரும் ‘Pushpa-னா National நினைச்சியா International’ என்பதற்கு ஏற்ப, வட அமெரிக்க பாக்ஸ் ஆபிஸிலும் ஒரு கலக்கு கலக்கி வருகிறது. படம் ஒட்டு மொத்தமாக 2 நாள்களில் மட்டும் $1,370,000 (11.6 CR) வசூல் செய்துள்ளதாக Box office mojo தெரிவித்துள்ளது. இதன்மூலம் ரீ ரிலீஸான கிறிஸ்டோபர் நோலனின் ‘இன்டர்ஸ்டெல்லர்’ படத்தின் வசூலை முந்தியுள்ளது. மேலும் வெளியான 3 நாள்களில் ரூ.621 கோடி வசூல் செய்துள்ளது.

News December 9, 2024

27ஆம் தேதி தொடங்குகிறது புத்தகக் கண்காட்சி

image

சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்தகக் கண்காட்சி இந்தாண்டு வரும் 27ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் இக்கண்காட்சி ஜனவரி 12ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷும் தொடங்கி வைக்கவுள்ளனர். மொத்தம் 900 அரங்குகள் அமைக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

News December 9, 2024

காய்கறி விலை குறைந்தது

image

சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை சரிந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி ஒரு கிலோ வெங்காயம் ₹30க்கும், ஒரு கிலோ தக்காளி ₹35க்கும் விற்பனையாகிறது. தமிழகத்தில் தற்போது மழையின் தீவிரம் குறைந்திருப்பதால் விலை சரிவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பீன்ஸ், கேரட், அவரைக்காய் கிலோ தலா ₹40, பீட்ரூட் கிலோ ₹30, வெண்டைக்காய் கிலோ ₹20, கத்திரிக்காய் கிலோ ₹10 என்று விற்பனையாகிறது.

News December 9, 2024

தொடங்கிய உடனே மக்களவை ஒத்திவைப்பு

image

எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் மக்களவை இன்று நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதானி விவகாரம் குறித்த அவை ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் மீது விவாதம் நடத்தக்கோரி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட INDIA கூட்டணி கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சி தோல்வியடைந்ததை தொடர்ந்து, சபாநாயகர் அவையை 12 மணி வரை ஒத்திவைத்துள்ளார்.

News December 9, 2024

11.48 லட்சம் மகளிருக்கு ட்ரைனிங்.. அரசின் புதிய திட்டம்

image

TNCDW மூலம் 11.48 லட்சம் பெண்களுக்கு நிதிசார் கல்வி பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிதிசார் திறனை வளர்ப்​பது, வட்டி மானி​யம், வங்கிக் கடன் உள்ளிட்ட சேவைகளை சுய உதவிக் குழுவினர் எளிதில் பெற இத்திட்டம் உதவி செய்யும். இதற்கான சிறப்பு முகாம்களுக்கு ₹4.50 கோடி ஒதுக்கியுள்ள நிலையில், பணிகள் தொடங்கியுள்ளன. வரும் 31ஆம் தேதிக்குள் இந்த பயிற்சியை முடிக்க Dy CM உதயநிதி அறிவுறுத்தியுள்ளார்.

News December 9, 2024

மீன்கள் விலை குறைந்தது… எவ்வளவு தெரியுமா?

image

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்படும் மீன்களை வாங்கியே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வியாபாரிகள் விற்கின்றனர். கடலுக்கு மீன்பிடிக்க சென்ற படகுகள் அனைத்தும் நேற்று ஒன்றாக கரை திரும்பின. இதனால் வஞ்சிரம் ரூ.650, கடல் வவ்வால் ரூ.450, இறால் ரூ.300, பெரிய நண்டு, கடமா ரூ.250ஆக விலை குறைந்துள்ளது. உங்க ஏரியால என்ன விலை?

News December 9, 2024

சூர்யா 45-ல் ARR-க்கு பதில் சாய் அப்யங்கர்

image

‘சூர்யா 45’ படத்தில் இருந்து ஏ.ஆர்.ரகுமான் விலகியதாக கூறப்படும் நிலையில், படத்தின் இசையமைப்பாளர் யார் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், ட்ரீம் வாரியர் நிறுவனம், புதிய sensation சாய் அப்யங்கரை கமிட் செய்துள்ளதாம். ‘கட்சி சேர’ பாடல் மூலம் பெரும் வரவேற்பை பெற்ற சாய், ஏற்கனவே LCUவில் ராகவா லாரன்ஸ் படத்திலும் கமிட்டாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இசைப்புயலின் இடத்தை சாய் நிரப்புவாரா?

News December 9, 2024

உதயநிதிக்கு மூன்றாவது இருக்கை

image

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சட்டப்பேரவையில் முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் அவர் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது மூன்றாவது வரிசையில் இருக்கை வழங்கப்பட்டிருந்தது. தற்போது, துணை முதலமைச்சராக பொறுப்பேற்றிருப்பதால் அவை முன்னவர் துரை முருகனுக்கு அருகில் இடம் வழங்கப்பட்டுள்ளது. இது, கட்சியிலும் ஆட்சியிலும் அவரது ஆதிக்கத்தை காட்டுவதாகும்.

error: Content is protected !!