News October 27, 2025

மருத்துவ துணை படிப்புகள்: அவகாசம் நீட்டிப்பு

image

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர்வதற்கான கால அவகாசம் நவ.14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பிசியோதெரபி, நர்சிங், பாரா மெடிக்கல், ஆயுர்வேதம் உள்ளிட்ட படிப்புகளில் இன்னும் 2,000 காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பியுங்கள். இதை ஷேர் பண்ணுங்க.

News October 27, 2025

EPS 4 ஆண்டுகளாக காணாமல் போனார்: கனிமொழி

image

4 ஆண்டுகளாக காணாமல் போன EPS, இன்று CM ஸ்டாலினை நோக்கி கேள்வி கேட்கிறார் என கனிமொழி சாடியுள்ளார். ஒளிந்து கொண்டிருந்த EPS-ஐ, பாஜக கண்டறிந்து கூட்டணிக்குள் இணைத்துள்ளதாகவும் விமர்சித்தார். இந்த கூட்டணியை விரட்ட வேண்டும் என்பதே திமுகவின் நோக்கம் என்றும் அவர் கூறினார். மேலும், ஒவ்வொரு முறையும் தமிழகத்துக்கு மத்திய அரசு நிதியை கிள்ளிக் கொடுக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

News October 27, 2025

உள்ளூர் போட்டிகளில் Ro-Ko? கில் விளக்கம்

image

2027 உலகக் கோப்பைக்கு ரோஹித், கோலி தயாராவதற்காக, இருவரையும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வைக்க BCCI முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக ODI கேப்டன் கில்லிடம் கேட்டபோது, இது பற்றி எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை என்று கூறியுள்ளார். அதேநேரம், தெ.ஆப்பிரிக்கா, நியூசி., தொடருக்கு இடையே சிறிது இடைவெளி உள்ளதால், அப்போது இதுகுறித்து முடிவு செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.

News October 27, 2025

விஜய் கட்சியில் இருந்து விலகல்

image

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து விஜய் ஆறுதல் கூறவிருக்கிறார். இது மாற்றுக்கட்சியினரை மட்டுமல்ல, சொந்த கட்சியினரையும் அதிருப்தியடைய செய்துள்ளது. நேற்றிலிருந்து இந்த விவகாரம் விவாத பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில், கரூரை சேர்ந்த தவெக நிர்வாகிகள் 25-க்கும் மேற்பட்டோர், அக்கட்சியில் இருந்து விலகி செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

News October 27, 2025

ஜெயிலர் 2 படத்தில் வித்யா பாலன்?

image

‘ஜெயிலர் 2’ பட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் பாகத்திலிருந்த சிவராஜ்குமார், மோகன்லால் ஆகியோர் நடிக்கும் நிலையில், வில்லனாக மிதுன் சக்கரவர்த்தி நடிக்கிறார். இந்நிலையில், இப்படத்தில் வித்யா பாலன் முக்கிய ரோலில் நடிக்கிறாராம். முன்னதாக, ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் கேமியோவாக நடித்திருந்த வித்யா, இதில் முழு படத்திலும் பயணிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹுக்கும்..

News October 27, 2025

கந்த சஷ்டி படிப்பதால் கிடைக்கும் பலன்கள்

image

மனமுருகி கந்த சஷ்டி கவசத்தை படிப்பதால், நவகிரகங்களும் நம்முடனே இருக்கும் என்பது ஐதீகம். வீட்டிலுள்ள எதிர்மறை சக்திகள் நீங்கி, நேர்மறை சக்திகள் உண்டாகும். மன, உடல் வலிமை அதிகரிப்பதோடு, முக வசீகரமும் ஏற்படும். முருகனுக்கே உகந்த செவ்வாய்க்கிழமைகளில் 3 முறை கந்த சஷ்டி கவசத்தை படிப்பதால், நாம் நினைத்த காரியங்கள் கைகூடும். அரஹரா போற்றி! அடியார்க்கு எளியாய் போற்றி! சண்முகா போற்றி! சரவணபவனே போற்றி!

News October 27, 2025

FLASH: உருவானது மொன்தா புயல்

image

வங்கக்கடலில் ‘மொன்தா’ புயல் உருவானதாக IMD தெரிவித்துள்ளது. சென்னைக்கு கிழக்கே 600 கிமீ தூரத்தில் மையம் கொண்டுள்ள இப்புயல், அடுத்த 48 மணி நேரத்தில் கடும் புயலாக வலுப்பெறும். இதனையடுத்து, நாளை மாலை (அ) இரவு நேரங்களில் காக்கிநாடா – மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும். இதனால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

News October 27, 2025

அதிமுகவிடம் 100 தொகுதிகள் கேட்கும் விஜய்?

image

அதிமுக கூட்டணியில் இணைவதற்கு, விஜய் 100 தொகுதிகளை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக EPS மகன் மிதுன், விஜய்யை இரண்டு முறை தனியாக சந்தித்து பேசியதாகவும், அப்போது பாஜக அல்லாத அதிமுக கூட்டணியில் இணைய அவர் விருப்பம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. 40 தொகுதிகள் வரை ஒதுக்க அதிமுக தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாகவும், ஆனால் அதை விஜய் ஏற்கவில்லை என்று தவெக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

News October 27, 2025

இன்று இங்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை

image

மருது பாண்டியர்களின் நினைவேந்தலையொட்டி சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவகோட்டை ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று(அக்.27) விடுமுறையாகும். திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாகும். மொன்தா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுவையின் ஏனாம் மாவட்டத்திற்கும் இன்றைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 27, 2025

காலை குழந்தைகளுக்கான உடற்பயிற்சிகள்

image

காலையில் உங்கள் குழந்தைகளை சில நிமிடங்கள், அவர்களது கை, கால்களை நீட்டி உடலை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள பழக்கப்படுத்துங்கள். இதற்கு எளிய யோகா ஆசனங்கள் உதவும். அவை என்னென்ன ஆசனங்கள் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று, வேறு ஏதேனும் ஆசனம் உங்களுக்கு தெரிந்தால் கமெண்ட்ல சொல்லுங்க.

error: Content is protected !!