News December 9, 2024

டங்ஸ்டன் உரிமத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்

image

மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்யக் கோரி மத்திய அரசுக்கு எதிரான சிறப்புத் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது. அவை முன்னவர் துரைமுருகன் கொண்டு வந்த இந்தத் தீர்மானத்தை அதிமுக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரித்து வாக்களித்தன. டங்ஸ்டன் சுரங்கத்திற்கு தேர்வான பகுதி, அரிய வகை உயிரினங்களின் வாழ்வாதாரமாக இருப்பதாக தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News December 9, 2024

நீங்கள் அதானியை தொட்டால், நாங்க சொரோஸை இழுப்போம்

image

அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு எழுந்தபோது, அதுகுறித்து மோடி பதிலளிக்க வேண்டும் என்றார் ஜார்ஜ் சொரோஸ். காங்கிரஸ் கட்சி, குறிப்பாக ராகுல் காந்தி தொடர்ந்து பாஜகவுடன் அதானியை தொடர்புப்படுத்தி பேசி வருகிறார். இதற்கு பதில் சொல்வது பாஜகவுக்கு பெரும் தலைவலியான நிலையில், சொரோஸுடன் காங்கிரஸை இணைத்துப் பேசத் தொடங்கிவிட்டது பாஜக. யாருக்கு யாருடன் தொடர்போ? யார் அறிவாரோ!

News December 9, 2024

உதயநிதி பங்கேற்கும் நிகழ்ச்சியில் விஜய்?

image

சென்னையில் வரும் 27ம் தேதி தொடங்கி ஜன.12 வரை புத்தகக் கண்காட்சி நடைபெறும் என பபாசி அறிவித்துள்ளது. Dy CM உதயநிதி தொடங்கி வைக்கும் இந்த புத்தகக் கண்காட்சியில் பங்கேற்க தவெக தலைவர் விஜய்-க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே, அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில், திமுகவை கடுமையாக விஜய் விமர்சித்து பேசியது அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

News December 9, 2024

தவெகவில் இணைகிறாரா ஆதவ் அர்ஜுனா?

image

விசிகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜுனா தவெகவில் இணையலாம் என்று பேசப்படுகிறது. தொடர்ந்து திமுகவை விமர்சித்துவந்த அவர், தன்னுடைய புத்தக வெளியீட்டு விழாவில் மேடையை விஜய்யுடன் பகிர்ந்து கொண்டார். மேலும், கருத்தியல் தலைவராக விஜய் உருவெடுத்திருப்பதாகவும் அவர் பேசினார். இவை, ஆதவ் அர்ஜுனா தவெகவில் இணையலாம் என்ற பிம்பத்தை உருவாக்கியிருக்கிறது.

News December 9, 2024

டங்ஸ்டன் சுரங்கத்தை முன்பே தடுத்திருக்கலாம் – இபிஎஸ்

image

மதுரை டங்ஸ்டன் சுரங்கத்திற்கு டெண்டர் கோரியபோதே தடுத்து நிறுத்திருக்கலாம் என LoP இபிஎஸ் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் சுரங்க அனுமதிக்கு எதிராக தமிழக அரசின் தனித் தீர்மானம் மீது பேசிய அவர், தமிழக மக்களைப் பாதிக்கும் திட்டங்களை திமுக தடுப்பதில்லை எனவும், கனிமவளத்தை வியாபாரமாக்கும் வகையில் செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார். கடந்த 10 மாதங்களாக திமுக அரசு அமைதியாக இருந்தது ஏன் எனவும் வினவியுள்ளார்.

News December 9, 2024

என்ன பேசினார் ஆதவ் அர்ஜுனா?

image

தவெக தலைவர் விஜய் “ஆட்சி அதிகாரத்தில் கூட்டணி கட்சிகளுக்கு பங்கு வேண்டும்” என்று பேசியதை விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆதரித்திருந்தார். அதேபோல, நடப்பு ஆட்சியிலும் விசிகவுக்கு பங்கு வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும், “மன்னராட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்” என்று திமுகவை குறிப்பிடும் வகையில் அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்

News December 9, 2024

முதலமைச்சரை சந்திக்க வந்தார் திருமாவளவன்

image

ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுகள் திமுக – விசிக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க வந்துள்ளார் விசிக தலைவர் திருமாவளவன். வெள்ள பாதிப்புக்கு விசிக சார்பாக நிவாரணம் அளிக்க வந்திருப்பதாக சொல்லப்பட்டாலும், இது அரசியல் பேச்சுவார்த்தையாகவே பார்க்கப்படுகிறது. ஆதவ் அர்ஜுனாவை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்துவிட்டுதான் திருமா சந்திப்புக்கே வந்திருக்கிறார்.

News December 9, 2024

IRCTC இணையதளம் முடங்கியது

image

IRCTC இணையதளம் ஒரு மணி நேரத்திற்கு மேலாக முடங்கியுள்ளதால், வாடிக்கையாளர்கள் அவதியடைந்துள்ளனர். பராமரிப்புப் பணிகள் காரணமாக அடுத்த ஒரு மணி நேரத்திற்கு சேவை கிடைக்காது என்றும் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. டிக்கெட்டுகளை ரத்து செய்ய 14646, 0755-6610661 (அ) etickets@irctc.co.in தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது. SUPER செயலியை மேம்படுத்தி வருவதால் இந்த இடையூறு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

News December 9, 2024

வதந்தி பரப்புவோரை விமர்சித்த அமிதாப்!

image

வதந்தி பரப்புவோர் குறித்து பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் காட்டமாக பதிவிட்டுள்ளார். அதில், “குறைந்த மூளையை கொண்ட முட்டாள்களுக்கு இந்த உலகில் ஒருபோதும் மரணமில்லை. தங்களின் மூளையற்ற மற்றும் அரைகுறையான அறிவு குறைபாடுகளை மறைப்பதற்காகவே, ஒவ்வொரு நாளும் போலிகளை உருவாக்கி பதிவிடுகிறார்கள்” என்றார். அபிஷேக் – ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து பரவிய வதந்திக்கு பதிலடி கொடுக்கவே, அவர் பேசுவதாக தெரிகிறது.

News December 9, 2024

ஆதவ் அர்ஜுனா நீக்கம் ஏன்?

image

விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா 6 மாதங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்து அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. “ஆதவ் அர்ஜுனாவின் செயல்பாடுகள் கட்சி மற்றும் தலைமையின் மீதான நன்மதிப்பையும் நம்பகத் தன்மையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில், பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது. இவை, கட்சிப் பொறுப்பாளர்களிடையே நிலவும் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கும் வகையில் உள்ளது”

error: Content is protected !!