India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரசுக்கு எதிராக பல அமைப்புகள், பிரிவினைவாத அமைப்புகள் இணைந்தன. ஆயுதம் ஏந்திய கிளர்ச்சிப் படைகள், கடந்த மாதம் 27ம் தேதி தீவிர தாக்குதல் நடத்தி, நாட்டின் முக்கிய நகரங்களை சுற்றி வளைத்தன. தலைநகர் டமாஸ்கஸைக் கிளர்ச்சிப்படைகள் நெருங்கியதை அறிந்த அதிபர் ஆசாத், விமானம் மூலம் ரஷ்யா தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கிளர்ச்சியாளர்கள் டமாஸ்கஸ் அரண்மனைகளைக் கைப்பற்றினர்.
SLக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்று, டெஸ்ட் தரவரிசை பட்டியலில் ஆஸி.,வை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது. நேற்று இந்தியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து AUS, முதலிடத்திற்கு முன்னேறியது. ஆனால், அந்த மகிழ்ச்சி 24 மணி நேரம்கூட நீடிக்கவில்லை. தற்போது AUS மீண்டும் பழையபடி 2வது இடத்திற்கும், இந்தியா இன்னும் மோசமாக மூன்றாவது இடத்திற்கும் தள்ளப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் டிச.16ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், குறைந்தபட்ச ஆதார விலை சட்டத்தை கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெறுகிறது. இதில், அனைத்து மாவட்ட விவசாயிகளுக்கும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அவதூறுகளைப் பரப்பி உயிர்வாழும் துரோக வரலாற்றின் அடையாளம் என EPSஐ ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மதுரை டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் DMK அரசு, மத்திய அரசுக்கு போதிய அழுத்தம் கொடுக்கவில்லை என இபிஎஸ் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில், பார்லிமென்டில் சுரங்கம், கனிமத் திருத்தச் சட்ட வரைவுக்கு ADMK எம்பி தம்பிதுரை ஆதரவாக பேசியதை மறைத்துவிட்டு, EPS நாடகமாடுவதை மக்கள் அறிவார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (GIC)ல் 110 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மென்பொருள் என்ஜினியர்கள், தகவல் பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு, நேர்முக தேர்வுகள் உள்ளன. விண்ணப்பிக்க கடைசி நாள் 19.12.2024. சம்பளம் – ₹50,925 – ₹96,765 வரை வழங்கப்படும். https://ibpsonline.ibps.in/gicionov24/ என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம்.
சென்னையில் 2 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரையில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளுக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து, மாணவர்களை வெளியேற்றி, வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீசார் சோதனை நடத்துகின்றனர். காலையில் டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டலும், 2 நாளுக்கு முன் மோடிக்கு கொலை மிரட்டலும் வந்தது குறிப்பிடத்தக்கது.
செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை ஜன.10க்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. விசாரணையை இழுத்தடிக்கும் வகையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் எண்ணிக்கை 44இல் இருந்து 2000ஆக உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை சுட்டிக்காட்டி, செந்தில் பாலாஜி வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என ஒய்.பாலாஜி என்பவர் வழக்குத்தொடர்ந்தார். இதற்கு செந்தில் பாலாஜி எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஆதவ் அர்ஜுனா சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், முதல்வர் ஸ்டாலினை திருமாவளவன் இன்று சந்தித்து பேசினார். அதன் பிறகு நிருபர்களிடம் பேசிய அவர், விஜய் பங்கேற்ற அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில், தான் கலந்துகொள்ளாதது சுதந்திரமாக எடுத்த முடிவு எனத் தெரிவித்தார். மேலும், விசிகவுக்கும், தவெகவுக்கும் எந்த மோதலும் இல்லை எனக் கூறிய திருமா, விஜய்யுடன் இதுவரை சர்ச்சை ஏற்பட்டதே இல்லை என்றார்.
எது மாறினாலும், சூரியன் கிழக்கில் உதிப்பது மாறாது என்பார்கள். ஆனால், பனாமா தீவின் மேற்கில் பசிபிக் பெருங்கடலில் உதித்து சூரியன் கிழக்கில் அட்லாண்டிக் பெருங்கடலில் மறைவதை உங்களால் பார்க்க முடியும். இதற்கு ஒரு காரணமும் உள்ளது. பனாமா “S” வடிவத்தில் இருக்கும் நாடு. இதனால், வடக்கு மற்றும் தெற்கு பல நேரங்களில் கிழக்கு மற்றும் மேற்காக புரிந்து கொள்ளப்படுவதால், இப்படியான ஒரு அதிசயம் நிகழ்கிறது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக டிச.11 முதல் 13ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை பெய்யும் என IMD தெரிவித்துள்ளது. மேலும், பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுத்துள்ளது. இந்நிலையில், அடுத்த 4 நாட்களுக்கு மழையால் மக்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
Sorry, no posts matched your criteria.