News December 10, 2024

மீண்டும் ஹாலிவுட்டில் தனுஷ்.. படம் பேரை பாருங்க!

image

மீண்டும் ஹாலிவுட் திரைப்படத்தில் தனுஷ் நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஹாலிவுட்டில் வளர்ந்து வரும ஸ்டாராக உள்ள சிட்னி ஸ்வீனியுடன் இணைந்து அப்படத்தில் நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. சோனி புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு STREET FIGHTER எனப் பெயரிடப்பட்டுள்ளது. எனினும், தனுஷ் தரப்பில் இருந்து இதுதொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

News December 10, 2024

உயிரைப் பறித்த மசாஜ்: பாடகிக்கு நேர்ந்த சோகம்!

image

தாய்லாந்தில் மசாஜ் செய்துகொண்ட பாடகி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாடகி பிங் சியடாவுக்கு தோள்பட்டையில் வலி இருந்துள்ளது. ஒரு மசாஜ் செய்தால் சரியாகும் என பார்லர் சென்றவருக்கு, கழுத்து சுளுக்கு எடுத்து மசாஜ் செய்யப்பட்டது. அதன்பின், அவரின் வலப்பக்க கை, கால்கள் செயலிழக்க, முடிவில் அவர் உயிரிழந்தார். கழுத்து, முதுகுத்தண்டில் மசாஜ் செய்யும்போது கவனம் தேவை என்கின்றனர் டாக்டர்கள்.

News December 10, 2024

எலான் மஸ்க்கிடம் உதவி கேட்கும் இந்திய அரசு

image

நவம்பர் இறுதியில் அந்தமானில் ரூ.36 ஆயிரம் கோடி மெத் போதை பொருளை கடத்திவந்த படகை போலீஸார் பிடித்தனர். அதில் சேட்டிலைட் சிக்னலில் இயங்கும் Starlink கருவி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது. Starlink சர்வதேச கடல் எல்லைகளிலும் செயல்படும். அந்த கருவியில் பதிவான விபரங்களை தருமாறு, எலான் மஸ்குக்கு சொந்தமான அந்நிறுவனத்திடம் அரசு கேட்டுள்ளது. இந்திய டெலிகாம் மார்க்கெட்டில் கால்பதிக்கும் எலான், அரசுக்கு உதவுவாரா?

News December 10, 2024

4 பேருக்கு வாழ்க்கை கொடுத்த தெய்வக் குழந்தை ❤️❤️

image

ஏதேனும் குறைகளுடன் பிறக்கும் குழந்தைகளை தெய்வக் குழந்தை என்று கூறுவோம். அதை உண்மையாக்கியுள்ளது இச்சம்பவம். புதுச்சேரியை சேர்ந்த நவ்தீப்புக்கு (11), பிறக்கும் போதே ஆட்டிசம் குறைபாடு இருந்துள்ளது. இந்நிலையில், திடீர் உடல்நலக்குறைவால் நவ்தீப் நேற்று இறந்தான். இதையடுத்து, சிறுவனின் கண்களை அவரது பெற்றோர் தானம் அளித்தனர். இதன் மூலம் கருவிழி பாதிப்பால் பார்வையிழந்த 4 பேருக்கு பார்வை கிடைக்க போகிறது.

News December 9, 2024

Danger: தூங்கும் போது இதை செய்வீர்களா..?

image

நம்மில் பலர் இரவில் கொசு விரட்டிகளை பயன்படுத்துகிறோம். ஆனால், இதிலிருந்து வெளியேறும் கெமிக்கல் நமது உடலுக்கு பல்வேறு தீங்குகளை இழைப்பதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். சுவாசப் பிரச்னைகள், தோல் வியாதிகள் ஏன் புற்றுநோய் வருவதற்கு கூட இது வழிவகுக்கும் என அலர்ட் கொடுக்கின்றனர். மேலும், குழந்தைகள் மற்றும் கருவில் இருக்கும் சிசுக்களைக் கூட இது பாதிக்கும் என தெரிவிக்கின்றனர்.

News December 9, 2024

PAN பயனாளர்களே கவனமாக இருங்கள்

image

மத்திய அரசின் புதிய பான் கார்டு பதிப்பு, PAN 2.0 அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்காக நீங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை. புதுப்பிக்கப்பட்ட புதிய PAN கார்டை உங்கள் முகவரிக்கு அரசு நேரடியாக அனுப்பும். கவனமாக இருங்கள். பான் கார்டு புதுப்பிப்புக்கான போன், மெசேஜ், மெயில் எதற்கும் பதிலளிக்க வேண்டாம். எந்த தகவலும் அல்லது OTP ஐயும் கொடுக்க வேண்டாம். எச்சரிக்கையாக இருந்து இணைய மோசடிகளைத் தவிர்க்கவும்.

News December 9, 2024

பவன் கல்யாணுக்கு கொலை மிரட்டல்!

image

ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை பவன் கல்யாணின் உதவியாளரின் செல்போனை தொடர்புகொண்ட மர்மநபர் ஒருவர், பவன் கல்யாண் கொலை செய்யப்படுவார் எனக் கூறி இணைப்பை துண்டித்துள்ளார். அதேபோல, அவரது செல்போனுக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல் மெசேஜ்கள் வந்துள்ளன. இதையடுத்து, பவன் கல்யாணுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

News December 9, 2024

உங்கள் மனைவியிடம் இந்த 7 அறிகுறிகள் உள்ளதா?

image

உங்கள் மனைவி, உங்கள் மீது கோபத்தில் இருப்பதை பின்வரும் அறிகுறிகள் உணர்த்தும்: 1)வழக்கத்துக்கு மாறான அமைதி 2)அடிக்கடி உங்களை விமர்சிப்பது 3)அடிக்கடி எரிச்சல் / கோபம் 4)தலைவலி, தசைப்பிடிப்பு அறிகுறிகள் 5)வழக்கமாக செய்துகொண்டிருந்த விஷயங்களில் விலகுவது 6)தாம்பத்ய உறவை தவிர்ப்பது 7)கடமைக்காக பேசுவது, இடித்துப் பேசுவது என பேச்சில் அதிருப்தி. உடனே காரணத்தை கண்டறிந்து சரிசெய்தால் மகிழ்ச்சி தானே!

News December 9, 2024

24 மணி நேரத்தில் வலுவடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

image

வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தொடர்ந்து அதே இடத்தில நீட்டிப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு – வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெறும். இது, தமிழகம் – இலங்கை இடையே கரையை கடக்கும் எனவும் கணித்துள்ளது. இதனால், நாளை முதல் கனமழை பெய்யக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது.

News December 9, 2024

எதையும் தாங்கும் இதயத்துக்கு கிடைத்த வெற்றி ❤️❤️

image

வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் தனது தாய் – தந்தை உட்பட ஒட்டுமொத்த குடும்பத்தையும் பறிகொடுத்தவர் ஸ்ருதி (24). அதற்கு பின் தனக்கு ஒரே ஆறுதலாக இருந்த தனது காதலன் ஜென்சனையும் சாலை விபத்தில் அவர் பறிகொடுத்தார். இத்தனை இழப்புகளுக்கு பிறகும் கூட, அவர் தன்னம்பிக்கையை சிறிதளவும் இழக்கவில்லை. இந்நிலையில், ஸ்ருதிக்கு வருவாய்த்துறையில் கிளார்க்காக கேரள அரசு பணியமர்த்தியுள்ளது.

error: Content is protected !!