News December 10, 2024

திருப்பதியில் முடி காணிக்கை செலுத்திய சிவராஜ்குமார்

image

நடிகர் சிவராஜ் குமார் திருப்பதி சென்று முடி காணிக்கை செலுத்தியுள்ளார். அங்கு அவரும், அவரது மனைவி கீதா சிவராஜ்குமாரும் முடி காணிக்கை செலுத்தினர். சிவராஜ்குமாருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற உள்ளதாகவும் இணையத்தில் தகவல் வெளியானது. ஆனால், இதனை சிவராஜ்குமார் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

News December 10, 2024

வெள்ளி விலை 4% அதிகரிப்பு

image

சென்னையில் வெள்ளியின் விலை ஒரே நாளில் 4% உயர்ந்து அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. நேற்று, கிராம் ₹100 என்று விற்கப்பட்ட வெள்ளி, இன்று ₹104ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில நாள்களாக வெள்ளி விலை ₹100 என்று விற்கப்பட்டுவந்த நிலையில், இன்று ஒரே நாளில் அதன் விலை கடும் உயர்வைக் கண்டிருக்கிறது. தங்கம் விலை ஒரு நாளுக்கு 1% உயர்ந்தாலே மக்கள் அதிர்ச்சியடையும் நிலையில் வெள்ளி விலை சாதாரணமாக 4% உயர்ந்திருக்கிறது.

News December 10, 2024

இதை நடந்தால் இந்தியா IN; இல்லனா OUT

image

IND அணி WTC இறுதிப்போட்டிக்கு செல்ல
தற்போது நடைபெற்று வரும் ஆஸி., அணிக்கு எதிரான BGT தொடரை 4-1, அல்லது 3-1 என வெல்ல வேண்டும். 3-2 என தொடரை வென்றால், ஆஸி. அணிக்கு எதிரான 2 போட்டி கொண்ட டெஸ்டில் ஒரு போட்டியை இலங்கை வெல்ல வேண்டும். 2-2 என டிரா ஆனால் AUS-SL தொடரை SL 2-0 என வெல்ல வேண்டும். 2-3 என தோற்றால் PAK-SA தொடரை PAK 2-0 என வெல்ல வேண்டும் & AUS-SL தொடரில் ஒரு போட்டியில் SL தோற்க வேண்டும்.

News December 10, 2024

தமிழ்நாட்டில் புதிதாக 1000 தடுப்பணைகள்!

image

தமிழ்நாட்டில் அடுத்த நிதியாண்டில் புதிதாக 1000 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். ஃபெஞ்சல் புயல், மழையால் பெரும் சேதமடைந்துள்ள கடலூர், காஞ்சிபுரம், வேலூர் மாவட்ட எல்.எல்.ஏக்கள் தங்கள் தொகுதியில் தடுப்பணைகள் கோரினர். பின்னர், பேசிய துரைமுருகன், எம்.எல்.ஏக்களின் கோரிக்கைகள் பரிசீலனையில் உள்ளது. முதல்வரிடம் கூறி நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றார்.

News December 10, 2024

SM கிருஷ்ணா மறைவுக்கு முதல்வர் இரங்கல்

image

கர்நாடக முன்னாள் முதல்வர் SM. கிருஷ்ணாவின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 1960 முதல் கருணாநிதியுடன் SM கிருஷ்ணா நெருக்கமாக இருந்ததாகவும் மாநில நல்லிணக்கத்துக்காக இருவரும் உழைத்ததாகவும் முதல்வர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். கர்நாடகத்தை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் சென்றதில் SM.கிருஷ்ணாவின் பங்கு அதிகம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

News December 10, 2024

தி.மலையில் 7 பேர் பலி.. மலையில் டெல்லி குழு ஆய்வு!

image

தி.மலையில் கனமழையால் மண் சரிவு ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்த இடத்தில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். வரும் 13ம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறவுள்ள நிலையில், 2,668 உயர மலையில் மகாதீபம் ஏற்ற வழக்கமாக 2,500 பக்தர்களுக்கு அளிக்கப்படும் அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை. கடந்த இரு நாட்களுக்கு முன்பு புவியியல் வல்லுநர்கள் குழு ஆய்வு செய்த நிலையில், இன்று டெல்லியில் இருந்து வந்த குழு ஆய்வு செய்கிறது.

News December 10, 2024

OTTல் வெளியானது ‘தங்கலான்’

image

பா.ரஞ்சித், விக்ரம் கூட்டணியில் உருவான ‘தங்கலான்’ திரைப்படம் NETFLIXல் வெளியானது. AUG 15ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றதோடு, பாக்ஸ் ஆபிஸில் ₹100 கோடிக்கு மேல் வசூலித்தது. வழக்கமாக படம் வெளியான 30வது நாளில் OTTல் அந்த திரைப்படம் வெளியாகும் நிலையில், தயாரிப்பு நிறுவனத்திற்கும், NETFLIXக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இப்படத்தின் வெளியீடு தாமதமானது.

News December 10, 2024

தங்கம் விலை ₹600 உயர்ந்தது

image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ₹600 அதிகரித்தது. நேற்று ஒரு சவரன் ₹57,040க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ₹57,440க்கு விற்பனையாகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ₹7,130ஆக இருந்த நிலையில் இன்று ₹75 அதிகரித்து ₹7,205க்கு விற்கப்படுகிறது. தங்கத்தின் விலை உயர்வு நுகர்வோரை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.

News December 10, 2024

டங்ஸ்டன் ஒப்பந்தம் குறித்து விவாதிக்க நோட்டீஸ்

image

டங்ஸ்டன் சுரங்க ஒப்பந்தத்தை ரத்து செய்வது குறித்து அவையை ஒத்திவைத்துவிட்டு விவாதிக்க வேண்டும் என MPக்கள் கனிமொழி, மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இந்த சுரங்க அனுமதிக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக MPக்கள் மக்களவையில் இவ்விவகாரத்தை எழுப்ப உள்ளனர்.

News December 10, 2024

CM இதற்காக தான் பதவி விலக வேண்டும்: அண்ணாமலை

image

தேர்தல் நெருங்கும் நேரத்தில் DMK ஃபைல்ஸ்-3 வெளியிடப்படும் எனவும், DMK கூட்டணிக் கட்சிகள் எடுத்த டெண்டர்கள், லாபங்கள் அம்பலப்படுத்தப்படும் என்றும் அண்ணாமலை எச்சரித்துள்ளார். டங்ஸ்டன் விவகாரத்தில் CM நாடகமாடியதாக சாடிய அவர், பதவி விலக வேண்டுமென்றால் Tasmac பிரச்னைக்காக விலக வேண்டும் என்றும் கூறியுள்ளார். முன்னதாக, டங்ஸ்டன் சுரங்கம் தோண்டப்பட்டால், பதவி விலகுவேன் என ஸ்டாலின் கூறியிருந்தார்.

error: Content is protected !!