News December 10, 2024

பொய்யை திரும்ப திரும்ப சொல்லும் இபிஎஸ்: அமைச்சர்

image

ஆயிரம் பொய்களைக் கூறினாலும் திராவிட மாடல் நல்லாட்சி மீது சிறு கீறல் கூட விழவைக்க முடியாது என்று இபிஎஸ்க்கு அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் விவகாரத்தில் அதிமுகவின் பொய்யை நாடாளுமன்றத்தில் கேள்வி பதில் மூலம் அம்பலப்படுத்தினோம். வயிற்றெரிச்சலில் கூறிய பொய்களையே திரும்பத் திரும்ப எத்தனை முறை கூறினாலும் எடுபடாது என்று விமர்சித்துள்ளார்.

News December 10, 2024

பார்வையை திருப்பிய குரு: 3 ராசிகளுக்கு யோகம்!

image

குரு பகவான் ரோகிணி நட்சத்திரத்திற்கு சென்றுள்ளதால் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகிறது. 1) ரிஷபம்: அதிர்ஷ்டம் வீட்டின் கதவை தட்டும். பணவரவு உண்டாகும். பெரிய முன்னேற்றம் உண்டு. 2) கடகம்: தொட்டதெல்லாம் துலங்கும். வீட்டில் சந்தோஷம் தாண்டவம் ஆடும். திருமண யோகம் உண்டு. 3) சிம்மம்: குடும்பத்தில் உள்ள சிக்கல்கள் தீரும். துணைவரின் ஆதரவு உண்டு. புதிய தொழில் தொடங்குவீர்கள். மன மகிழ்ச்சி உண்டாகும்.

News December 10, 2024

புயலுக்கு முன் அமைதி: எச்சரிக்கும் ஈரான்

image

சிரியாவில் பஷார் அல் அசாத் அரசு கிளர்ச்சியாளர்களால் கவிழ்க்கப்பட்டது. இதுபற்றி ஈரான் ராணுவம் வெளியிட்டுள்ள X பதிவில், ஆசாத் அரசின் வீழ்ச்சியை சிலர் கொண்டாடுகிறார்கள். நோவா காலத்தில் மழை வந்தபோது மக்கள் சந்தோஷப்பட்டனர். அதுவே பின், வெள்ளமாகி அவர்களை அடித்துச் சென்றது. அப்போதுதான் இறை தண்டனையை அவர்கள் உணர்ந்தனர். இது ஆரம்பமே எனத் தெரிவித்துள்ளது. போர் ஓய்ந்து மக்கள் புது வாழ்வு பெறுவது எக்காலமோ?

News December 10, 2024

சிரியாவுக்குள் புகுந்துவிட்டதா இஸ்ரேல் ராணுவம்?

image

இஸ்ரேல் படையினர் சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸை நெருங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 200-க்கும் மேற்பட்ட விமானத் தாக்குதலை நடத்திய நிலையில், டமாஸ்கஸில் இருந்து 25 கி.மீ தொலைவு வரை இஸ்ரேல் படை முன்னேறியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இஸ்ரேல் இந்த தகவலை மறுத்துள்ளது. தற்காப்புக்காக பொதுவான எல்லைப்பகுதியில் நிற்கும் தங்கள் படைகள், எல்லையை தாண்டவில்லை என இஸ்ரேல் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

News December 10, 2024

அஜித்தே சொல்லிட்டாரு, இதை ப்ளே பண்ணுங்க

image

அஜித் தனது அறிக்கையில் கடவுளே என்ற வார்த்தையை தவிர்த்து, “க….. அஜித்தே” என்ற கோஷத்தை எழுப்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டார். மேலும், யாரையும் புண்படுத்தாமல் கடினமாக உழைத்து, உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள் மற்றும் சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருங்கள். உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துகள்..வாழு & வாழ விடு! என ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்.

News December 10, 2024

பயப்பட வேண்டாம்…இது மாரடைப்பு இல்லை!!

image

வயது வித்தியாசமின்றி மாரடைப்பு அதிகரித்து வரும் சூழலில், மார்பு வலி மாரடைப்பு என தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. இதயத் தசைகளுக்குப் போதிய ரத்தம் கிடைக்காத போது, மார்பில் வலி ஏற்படும். இதை Angina Pectoris என டாக்டர்கள் கூறுகிறார்கள். இது நடைபயிற்சி, உடற்பயிற்சி போன்ற உடல் செயல்பாடு அதிகரிக்கும் விஷயங்களால் ஏற்படும் வலியாகும். இதற்கு 5-10 நிமிடங்கள் ஓய்வெடுத்தாலே போதும் என அறிவுறுத்துகின்றனர்.

News December 10, 2024

போக்குவரத்து கடன் எகிறிட்டே போகுது..!

image

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கடன் தாறுமாறாக உயர்ந்துள்ளதாக சிஏஜி ரிப்போர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துக் கழகத்தின் மொத்தக் கடன் ரூ.21,980 கோடியாக உள்ளதாகவும், கடந்த 2017-க்கு முன்பாக இருந்த கடனை விட, இது 6 மடங்கு அதிகம் எனவும் சிஏஜி தெரிவித்துள்ளார். மேலும், ஊழியர்களின் செலவீனம் மட்டும் 55.20% முதல் 63.55% வரை உள்ளதாகவும் கூறியுள்ளார்.

News December 10, 2024

இரண்டே நாளில் 200 பேரை கொலை செய்த ரவுடி!

image

ஹைதி நாட்டின் தலைநகரான போர்ட் ஓ பிரின்ஸை, பல ஆண்டுகளாக மோனல் பெலிக்ஸ் என்ற ரவுடி தனது கட்டுக்குள் வைத்துள்ளான். சில தினங்களாக பெலிக்ஸின் மகனுக்கு தீராத காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதற்கு பில்லி சூனியமே காரணம் என நம்பிய பெலிக்ஸ், அப்பகுதியைச் சேர்ந்த 200 மந்திரவாதிகளை தனது ஆட்களை விட்டு இரண்டே நாளில் கொடூரமாக கொலை செய்துள்ளான். இதனை ஹைதி அரசாங்கம் உறுதி செய்த போதிலும், அவனை நெருங்க தயங்குகிறது.

News December 10, 2024

கருணாநிதியை பின்பற்றும் ஓபிஎஸ்?

image

சட்டப்பேரவை வளாகத்திற்கு வந்த OPS, பேரவை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவில்லை. கடந்த காலங்களில் EPS-க்கு அருகில் OPS அமர்ந்திருந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் அவரின் இருக்கை அவையின் பின்பகுதிக்கு மாற்றப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த அவர், அவை நடவடிக்கைகளில் கலந்துகொள்வதை தவிர்ப்பதாக தெரிகிறது. கருணாநிதியும் (2011-16) இருக்கை விவகாரம் காரணமாக அவை நடவடிக்கைகளில் கலந்துகொள்வதை தவிர்த்தார்.

News December 10, 2024

கடன் உதவி, ₹50,000 மானியம்… அரசு அறிவிப்பு

image

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் “கலைஞர் கைவினைத் திட்டம்” அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள் ➤ ₹3 லட்சம் வரை பிணையற்ற கடன் உதவி ➤₹50,000 வரை மானியம், ➤ 5% வரை வட்டி மானியம் ➤திறன் மேம்பாட்டிற்கான சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும். இதற்கு msmeonline.tn.gov.inஇல் விண்ணப்பிக்கவும். முழுத் தகவலுக்கு <>இதை <<>>கிளிக் செய்யவும்

error: Content is protected !!