India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
‘பான் இண்டியா’ மூவியாக வெளியாகி பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்த திரைப்படம் காந்தாரா. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள இத்திரைப்படம் அதிரடியும், அமானுஷ்யமும் கலந்து ஒரு விஷுவல் ட்ரீட்டாக அமைந்தது. இதனிடையே, இத்திரைப்படத்தின் 2-ம் பாகம் வேகமாக உருவாகி வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் மோகன்லால் நடித்து வந்த நிலையில், திடீரென அவரை தூக்கிய படக்குழு, அவருக்கு பதிலாக ஜெயராமை ஒப்பந்தம் செய்துள்ளதாம்.
Microsoft 365 ஆப்ஸ் மீண்டும் செயலிழந்துள்ளன. Cloud சேவைகளை பயனர்கள் அணுக முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதற்கான காரணத்தை ஆராய்ந்து வருவதாகவும், விரைவில் தீர்வு எட்டப்படும் எனவும் தெரிவித்துள்ள Microsoft நிறுவனம், அதுவரை பயனர்கள் Cloud செயலி அல்லாத, Desktop வெர்சனை பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. Word, Excel போன்ற Desktop செயலிகள் இயங்குகின்றன.
வில்லன், காமெடியன் என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அடித்து துவம்சம் செய்பவர் நடிகர் இளவரசு. சமீபத்திய பேட்டியொன்றில் அவர் மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், நீங்க எவ்ளோ சம்பாதிக்குறீங்க.. எத்தனை கோடில வீடு கட்டிருக்கீங்க.. கோடிக்கணக்குல கார் வெச்சிருக்கீங்களாங்குறது முக்கியம் இல்ல. எந்த அளவுக்கு நம்பிக்கையா இருக்கீங்க.. எவ்ளோ நிம்மதியா இருக்கீங்க.. அதுதான் வாழக்கை எனக் கூறினார்.
இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் அடுத்தகட்ட செயல்பாடுகள் அதிமுகவின் உட்கட்டமைப்பை மட்டுமல்லாமல், தமிழகத்தின் மொத்த அரசியல் சூழ்நிலையையும் மாற்றும். இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே சின்ன உரிமை தொடர்பான விவாதங்கள் அதிகரிக்கும் நிலையில், EC முடிவை எதிர்நோக்கி அனைத்து தரப்பும் காத்திருக்கின்றன. இவ்வழக்கின் தீர்ப்பின் தாக்கம் தமிழக அரசியல் வரலாற்றின் முக்கிய திருப்பமாக இருக்கும்.
நாடு முழுவதும் சிமெண்ட் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கட்டுமானத் துறை மீண்டும் வேகம் பெற்றிருப்பதால், சிமெண்ட் தேவை அதிகரித்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, ஏற்கெனவே குறைவாக இருந்த தங்கள் மார்ஜினை இப்போது சிமெண்ட் டீலர்கள் உயர்த்தியுள்ளனர். இதனால் தமிழகம் உள்பட தென்னிந்தியாவில் ஒரு மூட்டைக்கு ரூ.40 என்ற அளவில் சிமெண்ட் விலை உயர்ந்துள்ளது. இது வீடு கட்டுபவர்களின் சுமையை அதிகரிக்கும்.
தெலுங்கு திரையுலகில் 50 ஆண்டு அனுபவம், படிப்பாளி, MP, பத்மஸ்ரீ, பல்வேறு விருதுகள், டயலாக் கிங் பட்டம்… இப்படி புகழுடன் இருந்த மோகன் பாபுவின் புகழுக்கு, இப்போது குடும்பத்தில் மகனுடன் ஏற்பட்டுள்ள சண்டையால் களங்கம் ஏற்பட்டுள்ளது. நான்கு சுவர்களுக்குள் முடிந்திருக்க வேண்டிய சொத்துப் பிரச்னையை, பிக் பாஸ் சண்டை போல பொதுவெளிக்கு கொண்டு வந்துவிட்டதாக அவரின் ரசிகர்கள் வருத்தத்துடன் கூறுகின்றனர்.
அதிமுகவின் அடையாளமாகத் திகழும் இரட்டை இலை சின்னம், தமிழகத்தின் முக்கிய அரசியல் சின்னங்களில் ஒன்றாக விளங்குகிறது.
இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் இந்நோட்டீஸின் மூலம், இரு தரப்புக்கும் சமவாய்ந்தாகக் கேட்புக் கூட்டம் நடத்த உள்ளது. இந்த கேட்புக் கூட்டத்தின் முடிவே, இரட்டை இலை சின்னத்தின் உரிமையை தீர்மானிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
திருமண உறவை மீறி, மற்றொருவருடன் உறவு ஏற்பட 90% காரணம் செக்ஸ் இல்லை; அவர்களுக்கு தேவைப்படும் மனரீதியான ஆறுதல் தான் என்கிறது ஆய்வு. இதுதவிர, போரடித்தல், உறவு தவறில்லை என்று நினைப்பது, கணவன்- மனைவி புரிதலின்மை, புதிதாக ஏற்படும் காதல், பொதுவான விருப்பங்கள் இல்லாதது என பல காரணங்களும் உள்ளன. உடல் தேவைக்காக ஏற்படும் உறவு வெறும் 10% தானாம். 10 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.
அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான புஷ்பா 2 திரைப்படம், வசூலில் சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில் படம் ரிலீஸான 5 நாட்களில் உலக அளவில் ₹922 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இந்திய சினிமா வரலாற்றில் மிக வேகமாக இந்த தொகையை வசூலித்த படம் என்ற பெருமையையும் புஷ்பா 2 பெற்றுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. படம் எப்படி இருக்கு? கமெண்ட்ல சொல்லுங்க.
AAP எம்எல்ஏ அப்துல் ரகுமான் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இஸ்லாமியர்களின் உரிமைகள் மறுக்கப்படுவதை ஏற்க முடியாது எனவும், அவர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பதற்காகவே கட்சியில் இருந்து விலகுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சில நாள்களுக்கு முன்பு அமைச்சராக இருந்த கைலாஷ் கெலாட், AAP இருந்து விலகிய நிலையில், தற்போது இவரின் விலகல் கட்சிக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.