India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் அடுத்த 3 நாள்களுக்கு மிக கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மெல்ல மெல்ல கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால், ஏற்கெனவே டெல்டா, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் தாக்கம் அடுத்த 3 நாள்களுக்கு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் 8 மணிநேரம் செல்போனை தொடாமல் இருக்கும் வினோதப் போட்டி நடைபெற்றது. போட்டியாளர்கள் 8 மணி நேரம் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படுக்கையில் படுத்திருக்க வேண்டும். அவ்வப்போது கழிவறை செல்ல மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். உணவு, பானம் என அனைத்தும் படுக்கைக்கே வந்துவிடும். இந்த போட்டியில் பங்கேற்ற டோங் என்ற பெண், எந்தவித பதைபதைப்பும் இன்றி வெற்றி பெற்று ₹1.16 லட்சம் பரிசுத்தொகையை தட்டிச் சென்றார்.
USல் பிறப்புரிமை அடிப்படையில் வழங்கப்படும் குடியுரிமையை ரத்து செய்ய உள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார். பிறப்புரிமை குடியுரிமையை கேலிக்குரியது எனக் கூறும் அவர், பதவியேற்றதும் 150 ஆண்டுக்கு மேலாக உள்ள இச்சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவார் எனத் தெரிகிறது. இதனால் இந்திய வம்சாவளியினர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. முந்தைய பதவிக்காலத்திலும் அவர் இவ்விவகாரத்தை எழுப்பியிருந்தாலும், மாற்றம் நிகழவில்லை.
இந்தியாவில் 2024ஆம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்களின் பட்டியலில் விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ 6ஆவது இடம் பிடித்து அசத்தியுள்ளது. இந்த பட்டியலில் ராஜ்குமார் ராவ், ஷ்ரத்தா கபூர் நடிப்பில் வெளியான ‘ஸ்திரீ 2’ முதலிடம் பிடித்துள்ளது. ‘கல்கி 2898ஏடி’ 2ஆவது இடத்திலும், ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ 7ஆவது இடத்திலும், ‘G.O.A.T’ 8ஆவது இடத்திலும், ‘சலார்’ 9ஆவது இடத்திலும், ‘ஆவேஷம்’ 10ஆவது இடத்திலும் உள்ளன.
2025 டெல்லி சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ANI நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. X தளத்தில் இதனை மறுத்திருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி தேர்தலை தனியாக எதிர்கொள்வோம் என்று கூறியிருக்கிறார்.
நமது வாழ்க்கையில் இதுபோன்ற ஆண்டனி எப்போது வருவார் என்ற கேள்வி ‘லக்கி பாஸ்கர்’ படத்தை பார்த்த பலருக்கும் எழுந்திருப்பதாக ராம்கி கூறியுள்ளார். இப்படம் குறித்து பேசிய அவர், ஆண்டனி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் ஆழமான இடத்தை பிடித்திருப்பதாகத் தெரிவித்தார். இயக்குநரிடம் பாதி கதையைக் கேட்டதும் ஓகே சொன்னதாகவும், இப்படம் நினைத்த மாதிரியே 5 மொழிகளிலும் ஹிட்டானது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார்.
இலங்கை அதிபரான பின்னர், முதல் வெளிநாட்டு பயணமாக, அனுரகுமார திசநாயக்க வரும் டிச.15-ல் இந்தியா வருகிறார். 2 நாள் பயணமாக இந்தியா வரும் அவர், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோரை சந்தித்து பேசுகிறார். அப்போது இருதரப்பு உறவுகள், பொருளாதார ஒத்துழைப்பு, பிராந்திய நலன்கள், இலங்கைக்கான உதவிகள் குறித்து விவாதிக்கப்படும். எல்லாம் சரி, தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்குமா?
இந்திய சினிமாவை கட்டி ஆண்ட பாலிவுட் சினிமாவால் இந்தாண்டு ஒரு பான் இந்தியா ஹிட் கூட கொடுக்க முடியவில்லை. ஆனால் Mollywood சினிமாவோ All We Imagine as Light, பிரம்மயுகம், மஞ்சுமெல் பாய்ஸ், ஆவேஷம், ஆடுஜீவிதம் போன்ற பான் இந்தியா ஹிட்-களை கொடுத்துள்ளன. கோலிவுட்& Tollywood தாங்களும் சளைத்தவர்கள் இல்லை என மகாராஜா, அமரன், லக்கி பாஸ்கர் போன்ற ஹிட் படங்களை கொடுத்துள்ளன. இதில் உங்களுக்கு பிடித்த படம் எது?
தமிழகத்தில் மதியம் 1 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருவாரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று MET அறிவித்துள்ளது. மேலும், ராணிப்பேட்டை, தி.மலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.58,280க்கு விற்பனையாகிறது. நேற்று ரூ.7,205ஆக இருந்த ஒரு கிராம் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.80 உயர்ந்து இன்று ரூ.7,285க்கு விற்பனையாகிறது. கடந்த இரண்டு நாள்களில் தங்கத்தின் விலை ரூ.1,240 உயர்ந்திருக்கிறது. வெள்ளியின் விலை இன்று கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.103க்கு விற்பனையாகிறது.
Sorry, no posts matched your criteria.