India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் பகல் 1 மணி வரை 35 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது.
தோனியை போன்றதொரு கேப்டனை பார்த்தது இல்லை என LSG நிறுவனர் சஞ்சய் கோயங்கா தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், காலத்திற்கு ஏற்ப அவர் தன்னை தயார் செய்து வருவதைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு பேபி பவுலராக இருந்த பத்திரனாவை, தோனி எங்கு பார்த்து கண்டுபிடித்தார் என தெரியவில்லை. ஆனால் இன்று அவரை மேட்ச் வின்னராக மாற்றியுள்ளார்’ எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.
ரஜினிக்கு விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “பேரன்பிற்கும், மரியாதைக்கும் உரிய சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். ரஜினி, விஜய் ரசிகர்கள் இணையத்தில் அடிக்கடி சண்டையிடுவது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இன்றும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. 12 முதல் 20 செ.மீ மழை பொழிவதற்கு வாய்ப்புள்ளதால் இன்றும் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. அத்துடன், டிச.12 (இன்று) முதல் 18ம் தேதி வரை 5 நாள்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளது. ஏற்கெனவே, இன்று கனமழை காரணமாக 23 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
BGT 3வது டெஸ்ட் போட்டிக்காக அடிலெய்டில் இருந்து பிரிஸ்பேனுக்கு கிளம்பும் போது, 8:30 மணிக்கு வரவேண்டிய ஜெய்ஸ்வால் 10 மணிக்கு ஹோட்டல் receptionக்கு வந்துள்ளார். அவருக்காக 20 நிமிடங்கள் காத்திருந்த பிறகு, இந்திய அணியின் பஸ் ஏர்போர்ட்டிற்கு புறப்பட்டது. விஷயமறிந்த ஜெய்ஸ்வால், டாக்சி ஒன்றை பிடித்து ஏர்போர்ட் வந்துள்ளார். இதன் காரணமாக ரோஹித் கோபத்தில் இருப்பதாகத் தகவல் வெளிவந்துள்ளது.
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்துள்ளது. இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை மறுநாள் உருவாகவுள்ளது.
நடிகர் ரஜினிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். X பதிவில், “எல்லைகள் கடந்து ஆறிலிருந்து அறுபதுவரை அனைவரையும் தன்னுடைய நடிப்பால், ஸ்டைலால் ரசிகர்களாக்கிக் கொண்ட அருமை நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினி அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள். திரையுலகில் தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் தாங்கள், எப்போதும் அமைதியோடும், மனமகிழ்ச்சியோடும் திகழ்ந்து மக்களை மகிழ்வித்திட விழைகிறேன்” என்றார்.
சென்னையை அடுத்த செம்பரம்பாக்கம் ஏரி 85% நிரம்பியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கையாக நீர் திறப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். 24 அடி நீர்மட்டம் கொண்ட ஏரியில் நீர்மட்டம் 21.18 அடியை எட்டியுள்ளது. துணை ஏரிகள் நிரம்பி வருவதால் அந்த ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கனஅடியில், 2,903 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது.
தொடர் மழை காரணமாக சாத்தனூர் அணையில் இருந்து 13,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு நீர்வரத்து தற்போது 8,000 கனஅடியாக உள்ளது. இதனால், தி.மலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர் திறப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என PWD தெரிவித்துள்ளது. அண்மையில் தென்பெண்ணை வெள்ளத்தால் கடலூர், விழுப்புரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
சென்னையில் பெய்து வரும் கனமழையால் விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்ல வேண்டிய 7 விமானங்கள் மற்றும் பெங்களூரு, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களிலிருந்து சென்னை வர வேண்டிய 5 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் சிரமமடைந்துள்ளனர். சென்னையில் கனமழை தொடரும் என MET கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.