India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மழையின் தீவிரத்தால் மக்கள் அவதிப்படக் கூடாது, உயிர்ச்சேதம் ஏற்படக்கூடாது என்ற நோக்கில் தான் வானிலை அறிக்கையின் அடிப்படையில் அரசு விடுமுறை அறிவிக்கிறது. இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான். ஆனால், பல நேரங்களில் இந்த லீவு நாள்களில் மழை பெய்வதில்லை. லீவு வேஸ்ட் என்று மக்கள் நினைக்க தொடங்கிவிடுவர். ஆனால், இந்த முறை தான் லீவு விட்டதற்கு ஏற்ப சரியான மழை என்கின்றனர். உங்களுக்கு எப்படி?
நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளையொட்டி NTK தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பான X பதிவில், “திரைத்துறையில் இருந்த நிற ஆதிக்கத்தை உடைத்து, தகர்த்து தனது ஆகச்சிறந்த நடிப்பால் அனைவரையும் தன்வசப்படுத்தி, திரை வானில் மிளிரும் உச்ச நட்சத்திரம், பெருமதிப்பிற்குரிய ஐயா ரஜினி அவர்களுக்கு அன்பு நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.
நாகை மாவட்டம் செம்பியன்மாதேவிவில் கனமழை காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் 8ஆம் வகுப்பு மாணவன் கவிழகன்(13) பரிதாபமாக உயிரிழந்தார். வீடு இடிந்து விழுந்த சத்தம் கேட்டு ஓடிவந்த, அக்கம் பக்கத்தினர் சிறுவனின் தந்தை, தங்கையை காயங்களுடன் மீட்டனர். அவர்களுக்கு நாகை GHஇல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கனமழை காரணமாக நாகையில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
₹10 கோடி இழப்பீடு கேட்டு தனுஷ் தொடர்ந்த வழக்கில் நயன்தாரா, வரும் 8ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நயன்தாராவின் ‘Beyond the Fairy Tale’ டாக்குமெண்டரியில் ‘நானும் ரவுடி தான்’ படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாக தனுஷ் கோர்ட்டில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த விவகாரத்தை சட்டப்படி எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக நயன்தாரா சவால் விட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இருந்து 145 பேருடன் சிங்கப்பூர் புறப்பட ஏர் இந்தியா விமானம் தயாராக இருந்தது. அப்போது விமானத்தில் எரிபொருள் டேங்க்கில் கசிவு ஏற்படுவதை கவனித்த விமானி, விமானத்தை நிறுத்தினார். பின்னர் கசிவு சரி செய்யப்பட்டு மீண்டும் புறப்பட்டது. இந்நிலையில், தக்க நேரத்தில் எரிபொருள் கசிவைக் கண்டுபிடித்து எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் காப்பாற்றிய விமானிக்கு பாராட்டுகள் குவிகின்றன.
சமீப காலமாக பெண்களை குறிவைத்து ‘<<14856611>>digital arrest<<>>’ அதிகரித்து வருகின்றன. போலீஸ் எனக் கூறி வீடியோ காலில் வரும் கும்பல், சைபர் மோசடியில் உங்களுக்கு தொடர்புள்ளதாக ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ செய்து பணத்தை சுருட்டிவிடும். டெல்லியில், கடந்த வாரம் இன்ஸ்டா பிரபலத்திடம் இதுபோன்று ₹1 லட்சம் திருடப்பட்டது. நேற்று, நொய்டாவில் பெண் ஒருவரிடம் ₹1.40 லட்சம் அபேஸ் செய்யப்பட்டுள்ளது. உங்களுக்கு இப்படி நடந்திருக்கா?
Digital Arrest என்பது லேட்டஸ்ட் மோசடியாகும். பணமோசடி, போதைப்பொருள் அல்லது ஆள்கடத்தலில் நீங்களோ, உங்களின் நெருங்கிய உறவினரோ ஈடுபட்டதாக கூறி, உங்களை வீடியோ காலில் வரவழைப்பர். போலீஸ் அதிகாரி போல பல மணிநேரம் விசாரணை நடத்துவர். call கட் பண்ணவோ, அறையைவிட்டு வெளியேறவோ விடமாட்டார்கள். இதிலிருந்து தப்ப வேண்டுமானால் வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பச் சொல்லி, உங்களின் மொத்த பணத்தையும் கறந்து விடுவார்கள்.
திருவள்ளூர் பூண்டி ஏரியின் நீர்மட்டம் 34.05 ft (மொ.கொள்ளளவு 35 ft) எட்டிவிட்டது. இதனால் இன்று பிற்பகல் 1:30 மணிக்கு ஏரியிலிருந்து விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்பட உள்ளது. நீர்வரத்தை பொறுத்து இது படிப்படியாக உயரலாம். இதையொட்டி கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு முதல்கட்ட வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, செம்பரம்பாக்கம் ஏரியும் 85% நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
புஷ்பா 2 படத்தில் கிளைமாக்சில் வில்லன்களை கடித்தே ஓட விடுவார் அல்லு அர்ஜுன். ம.பி.யில் இப்படம் ஓடிக்கொண்டிருக்கும் போது, படம் பார்க்க வந்தவரின் காதை கடித்துள்ளார் தியேட்டரில் கேன்டீன் நடத்தி வருபவர். ஸ்நாக்ஸ் வாங்கிய போது, அதன் விலைக்காக ஷபீர் வாக்குவாதத்தில் ஈடுபட, கேன்டீன் ஓனர் ராஜு 3 பேருடன் சேர்ந்து ஷபீரை அடித்து, அவரின் காதையும் கடித்துள்ளார். இதில், ராஜு உட்பட 3 பேர் கைதாகியுள்ளார்கள்.
தி.மலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் நாளை மாலை மகா தீபம் ஏற்றத் தேவையான பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதற்காக 3,500 கிலோ நெய், 1,500 அடி நீள காடாத் துணியால் ஆன திரி, 5 அடி உயரக் கொப்பரை தயார் நிலையில் உள்ளன. நாளை காலை கோயில் வளாகத்தில் பரணி தீபம் ஏற்றப்படும். பின்னர், மாலை 6 மணிக்கு மலைமேல் மகா தீபம் ஏற்றப்படவுள்ளது. மகா தீபத்தை நேரலையில் காண வே2 நியூஸ் உடன் இணைந்திருங்கள்..
Sorry, no posts matched your criteria.