News December 15, 2024

SK 25யில் ஜிவி பிரகாஷ் குமாரின் 100

image

யார்ரா அந்த பையன் என முதல் படத்திலேயே இண்டஸ்ட்ரியின் கவனத்தை ஈர்த்தார் ஜிவி பிரகாஷ். நடிப்பை விட்டுட்டு மியூசிக்கில் கவனம் செலுத்துங்கள் என சொல்லாத ஆளே கிடையாது. மீண்டும் சுதா கொங்கராவுடன் தான் இசையமைக்கும் 100வது படத்தை எட்டி விட்டார். இதில் கூடுதல் சிறப்பு இது SKவின் 25 படம். ஏற்கனவே இவர்களின் அமரன் கூட்டணி ரசிகர்களை கவர்ந்தது. மீண்டும் ஒரு தேசிய விருது கிடைக்குமா ஜிவி.பிரகாஷ்?

News December 15, 2024

அதிமுக கூட்டத்தில் 16 தீர்மானங்கள்

image

சென்னை வானகரத்தில் நடைபெற்றுவரும் செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன. அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் வெள்ள நிவாரணம், டங்ஸ்டன் ஆலை உரிமம் ஆகியவை குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன. மேலும், 2026 தேர்தல் வியூகம் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.

News December 15, 2024

BIGGBOSS எவிக்‌ஷன்: இந்த வாரமும் இரண்டு பேர்

image

பிக்பாஸ் சீசன் 8 அக்டோபர் முதல் வாரம் தொடங்கி 70-வது நாளை நெருங்கியுள்ளது. கடந்த வாரம் வழக்கத்திற்கு மாறாக RJ ஆனந்தி, சாச்சனா என இருவரை எவிக்ட் செய்தார் விஜய் சேதுபதி. இந்நிலையில், இந்த வாரத்திற்கான எவிக்‌ஷனில் நேற்று சத்யா வெளியேற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து, இன்று தர்ஷிகா வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

News December 15, 2024

தமிழகத்தில் அதிகபட்சம் 13 செ.மீ. மழை

image

கடந்த 24 மணி நேரத்தில் நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் அதிகபட்சமாக 13 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து, மணிமுத்தாறில் 10 செ.மீ., கொடைக்கானலில் 9 செ.மீ., ஊத்து, காயல்பட்டினம் ஆகிய பகுதிகளில் 8 செ.மீ., தூத்துக்குடி, நாலுமுக்கு, சேர்வலாறு அணை ஆகிய பகுதிகளில் தலா 7 செ.மீ, தூத்துக்குடியில் 6 செ.மீ., என மழை பெய்துள்ளது.

News December 15, 2024

ஹீரோவாக நடிக்கும் ரோபோ சங்கர்!

image

பாஸர் எல்வின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அம்பி’ என்ற படத்தில் ரோபோ சங்கர் ஹீரோவாக நடித்து வருகிறார். காமெடி கலந்த குடும்ப படமாக உருவாகி வரும் இப்படத்தில் அஸ்வினி சந்திரசேகர், கஞ்சா கருப்பு, ரமேஷ் கண்ணா, இமான் அண்ணாச்சி, மீசை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். டி2 மீடியா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News December 15, 2024

நாமக்கல்லில் குடும்பத்துடன் தற்கொலை

image

நாமக்கல், வழவந்தி கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியளித்துள்ளது. குடும்பப் பிரச்னை காரணமாக விவசாயி மற்றும் அவரது குடும்பத்தினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியிருக்கிறது. செல்வராசுவின் மனைவி பூங்கொடி மற்றும் அவர்களது மகன் சுரேந்தர் ஆகியோர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டது அருகில் வசிப்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

News December 15, 2024

WPL 2025 ஏலம் இன்று நடைபெறுகிறது

image

மகளிர் ஐபிஎல் 2025-க்கான ஏலம் இன்று (டிச. 15) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. இதில் 91 இந்திய வீராங்கனைகள், 29 சர்வதேச வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். 5 டீம்கள் ஏலம் எடுக்கவுள்ளன. முந்தைய பிளேயர்ஸை டீம்கள் தக்கவைக்கவுள்ள நிலையில் மீதமுள்ள 19 இடங்களுக்கு மட்டுமே இந்த ஏலம் நடத்தப்படுகிறது. ஏலம் தொடங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக ஜியோ சினிமாவில் லைவ் ஸ்டீரிமிங் ஒளிபரப்பாகவுள்ளது.

News December 15, 2024

EVKS இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதை

image

மறைந்த ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ EVKS இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும் என TN அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசியல் மட்டுமின்றி இந்திய அரசியலிலும் சிறப்பாக பணியாற்றியதை போற்றும் விதமாக அரசு மரியாதை அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. நேற்று காலை மறைந்த EVKS இளங்கோவன் உடல் இன்று மாலை தகனம் செய்யப்படவுள்ளது.

News December 15, 2024

ஜார்ஜியாவின் புதிய அதிபர் தேர்வு

image

Ex கால்பந்தாட்ட வீரர் மைக்கேல் கவெல்ஷ்விலி ஜார்ஜியா நாட்டின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அக்டோபரில் நடந்த தேர்தலில் ஜார்ஜிய ட்ரீம் கட்சி வெற்றி பெற்ற நிலையில் கட்சி ஆதரவில் மைக்கேல் அதிபராக தேர்வாகியுள்ளார். ஐரோப்பிய யூனியனுடன் இணையும் முடிவை நிறுத்தி வைத்ததற்கு எதிராக மக்கள் போராடி வரும் நிலையில் ரஷிய ஆதரவு அதிபர் பதவியேற்பது அந்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

News December 15, 2024

தமிழில் என்ட்ரி கொடுக்கும் ‘கிஸிக்’ லீலா

image

புஷ்பா 2 படத்தில் இடம்பெற்றிருந்த “கிஸிக்” பாட்டின் மூலம், இந்தியா முழுவதும் ட்ரெண்ட்டாகி விட்டார் ஸ்ரீலீலா. “கிஸிக்” லீலா என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர், இன்னும் கொஞ்ச நாள்களில் தமிழ் திரையிலும் ரசிகர்களை கவரப்போகிறார். சுதா கொங்கரா – சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார். ‘குறிச்சி மடதொபெட்டி’ பாட்டு போல தமிழிலும் ஒரு சம்பவத்தை செய்வாரா “கிஸிக்” லீலா?

error: Content is protected !!