News December 17, 2024

BGT: போராடி வீழ்ந்த கே.எல் ராகுல்

image

பிரிஸ்பேனில் நடைபெறும் இந்தியா – ஆஸி., இடையேயான BGT போட்டியில் கே.எல்.ராகுல் நூலிழையில் சதத்தை தவறவிட்டார். முதல் இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் அனைவரும் பேட்டிங்கில் சொதப்பினாலும், தன் நிதான ஆட்டத்தால் இந்திய அணியை காப்பாற்றிய ராகுல் 84 ரன்களில் அவுட் ஆனார். தற்போது வரை இந்திய அணி 158/6 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ஃபாலோ ஆன் தவிர்க்க 88 ரன்கள் தேவை.

News December 17, 2024

நாளை சென்னையில் மிக கனமழை

image

வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி மெதுவாக நகர்ந்து வருகிறது. இதன் தாக்கத்தால், நாளை சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்கள், விழுப்புரம், கடலூரில் மிக கனமழை பெய்யும் என்று IMD தெரிவித்துள்ளது. மேலும், ராணிப்பேட்டை, தி.மலை, கள்ளக்குறிச்சி, வேலூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை கனமழைக்கும் வாய்ப்புண்டு.

News December 17, 2024

பாரம்பரிய உடையில் மாரத்தான் ஓடிய தம்பதி

image

அபுதாபியில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த தம்பதி பாரம்பரிய உடையில் கலந்துக் கொண்டு கவனம் ஈர்த்தனர். தேசிய எண்ணெய் நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற இந்த மாரத்தானில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். அந்த வகையில், நாகர்கோவிலைச் சேர்ந்த லிடியா ஸ்டாலின் – விபின் தாஸ் தம்பதி வேட்டி, சட்டை மற்றும் பாவாடை தாவணி அணிந்து 42.2 கி.மீ. தொலைவை 4 மணி நேரம் ஓடி நிறைவு செய்தனர்.

News December 17, 2024

அரசு வேலைக்காக அண்ணன், தம்பியை கொலை செய்த பெண்

image

ஆந்திராவின் பல்நாடு அருகே இறந்துபோன தந்தையின் அரசு வேலை, பென்சனுக்காக அண்ணன், தம்பியை கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். வருவாய்த்துறையில் பணிபுரிந்த போலராஜு, உடல்நலக்குறைவால் கடந்த மாதம் காலமான நிலையில், அவரது வாரிசு ஒருவருக்கு பணி வழங்க அரசு திட்டமிட்டிருந்தது. இதனால் போட்டியிலிருந்த சகோதரர்களை கொலை செய்து ரூட்டை கிளியர் செய்ய நினைத்த கிருஷ்ணவேணி தற்போது ஜெயிலில் கம்பி எண்ணுகிறார்.

News December 17, 2024

பிளாஸ்டிக் பாட்டிலில் பால் விற்பது குறித்து ஆவின் ஆய்வு

image

மீண்டும் பயன்படுத்தக் கூடிய Plastic பாட்டிலில், பால் விற்பனை செய்வது குறித்து ஆய்வு செய்ய ஆவின் நிறுவனத்திற்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இதன் விசாரணையில், Plastic Bottleல் விற்பனை செய்தால் செலவு அதிகரிக்கும் எனவும், தனியார் நிறுவனங்களே Plastic பைகளில் தான் விற்பதாகவும் அரசு தரப்பு வாதிட்டது. இதனை ஏற்க மறுத்த தீர்ப்பாயம், ஆவின் இதை முன் மாதிரியாக செய்யலாம் எனக்கூறி வழக்கை ஒத்திவைத்தது.

News December 17, 2024

செந்தில் பாலாஜி ஜாமினுக்கு எதிரான மனு: இன்று விசாரணை

image

செந்தில் பாலாஜி ஜாமினுக்கு எதிரான மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. அவரது ஜாமினை மறு ஆய்வு செய்யுமாறு சீனிவாசன் என்ற வழக்கறிஞர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை 2 நீதிபதிகள் அமர்வு இன்று விசாரிக்கிறது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் மோசடி செய்த வழக்கில், செந்தில் பாலாஜி 2023 ஜூன் 14ல் கைது செய்யப்பட்டார். பின் 2024 செப்.26ல் அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

News December 17, 2024

அவை நடவடிக்கைகளில் பங்கேற்க திமுக உத்தரவு

image

நாடாளுமன்ற அவைகளில் இன்று ’ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ளது. இதன் மீது நடைபெறும் விவாதம் மற்றும் வாக்கெடுப்புகளில் திமுக MPக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அக்கட்சியின் கொறடா உத்தரவிட்டுள்ளார். இதேபோல, பாஜக மற்றும் காங்கிரஸ் கொறடாக்களும் அவரவர் கட்சி MPக்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

News December 17, 2024

எங்களுக்கு எதுக்கு 25% வரி? குறைங்க ப்ளீஸ்

image

வருமான வரி சலுகை வழங்க வேண்டுமென சிறு, குறு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. தற்போது பெரிய நிறுவனங்கள், சிறு நிறுவனங்கள் என, அனைத்துக்கும் 25% வரி விதிக்கப்படுகிறது. இந்நிலையில், அதிக வேலைவாய்ப்பு வழங்கும் சிறு, குறு நிறுவனங்களை அரசு ஊக்குவிக்க வேண்டுமென ‘டான்ஸ்டியா’ வலியுறுத்தியுள்ளது. அதன்படி, குறு தொழில்களுக்கு 15%, சிறு நிறுவனங்களுக்கு 20% வரி வசூலிக்க வேண்டுமென கோருகின்றனர்.

News December 17, 2024

BGT: ஃபாலோ ஆன் தவிர்க்குமா இந்தியா?

image

IND-AUS இடையேயான பிரிஸ்பேன் டெஸ்ட்டின் 4ஆம் நாள் ஆட்டம் மழையால் தடைபட்டுள்ளது. 4ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் ஷர்மா(10) சொதப்ப, கே.எல்.ராகுல் நிலைத்து நின்று ஆடினார். மழை குறுக்கிடும் வரை முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 105/5 ரன்கள் எடுத்துள்ளது. ஆனால் இந்திய அணி follow-on தவிர்க்க 246 ரன்கள் எடுக்க வேண்டும். இல்லை என்றால் மீண்டும் 2வது இன்னிங்ஸில் தொடரும் நிலை உருவாகும்.

News December 17, 2024

டெங்குவால் 25,000 பேர் பாதிப்பு

image

டெங்கு காய்ச்சலால் நடப்பாண்டில் தமிழகத்தில் 25,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பருவநிலை மாற்றத்தால் இந்த பாதிப்பு ஏற்படுவதாகவும், அதனை தடுக்க தேவையான மருந்து, மாத்திரைகள் கையிருப்பில் உள்ளதாகக் கூறியுள்ள பொதுசுகாதாரத் துறை, நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, தேவைக்கு ஏற்ப மருந்து, மாத்திரைகளை கொள்முதல் செய்து தட்டுப்பாடு ஏற்படாமல் கவனித்து வருவதாக கூறியுள்ளது.

error: Content is protected !!