India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் பெட்ரோல், டீசல் கார்களில் இருந்து எலக்ட்ரிக் கார்களுக்கு மாறிவிட்டனர். இந்நிலையில், 2024இல் இந்தியாவில் வெளியிடப்பட்ட எலக்ட்ரிக் கார்களை இந்த லிஸ்ட்டில் காணலாம். * மஹிந்திரா XUV400,*டாடா பஞ்ச் EV,*BYD சீல்,* BMW i5, * Mercedes-Benz EQA மற்றும் EQB ஃபேஸ்லிஃப்ட், * மினி கன்ட்ரிமேன் EV, * Tata Curvv EV, * Kia EV9, * MG Windsor EV, *BYD eMAX 7. இதில் உங்கள் சாய்ஸ் எது?
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு எதிராகப் பேச அனுமதி கோரி எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி ஆகியோர் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இந்த மசோதாவை இன்று நண்பகல் 12 மணிக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால் தாக்கல் செய்யவுள்ளார். ஆரம்பம் முதலே இம் மசோதாவை காங்கிரஸ், திமுக, விசிக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.
இந்தியாவின் நம்பர் 1 பொதுத்துறை வங்கியான SBI, 13,735 காலிப் பணியிடங்களை (Clerk) நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இன்று (டிச. 17) முதல் ஜன. 7 வரை பெறப்படுகின்றன. வயது வரம்பு 20 முதல் 28 வரை. இதில், சென்னை கோட்டத்தில் மட்டும் 340 காலியிடங்கள் உள்ளன. மேலும் தகவல்களுக்கு <
கனடா நாட்டின் துணைப் பிரதமர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் தனது பதவியை ராஜினாமா செய்தார். அந்நாட்டின் நிதியமைச்சராகவும் உள்ள அவர், வருடாந்திர நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு சில மணி நேரத்திற்கு முன், ட்ரூடோ முடிவு மீதான அதிருப்தியில் ராஜினாமா செய்துள்ளார். கனடாவைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் 250 கனடா டாலர்கள் காசோலை வழங்கும் கொள்கை தொடர்பாக இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஏற்படும் நெருக்கடியைப் போக்க பெரம்பூர் ரயில் நிலையத்தை நான்காவது முனையமாக்க தெற்கு ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. சென்னையின் இரண்டாவது முனையமாக எழும்பூரும் மூன்றாவது முனையமாக தாம்பரமும் இருந்து வருகிறது. இதனையடுத்து, நான்காவது முனையமாக பெரம்பூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ₹428 கோடியில் இங்கு ரயில் முனையம் அமையவுள்ளது.
நவம்பர் மாதத்தில் தங்கத்தின் இறக்குமதி இதுவரை இல்லாத வகையில் 331% அதிகரித்துள்ளது. மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, நவம்பரில் தங்கத்தின் இறக்குமதி ₹1.25 லட்சம் கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டு நவம்பரில் வெறும் ₹29,000 கோடியாக இருந்துள்ளது. நடப்பு நிதியாண்டில் மொத்தமாக ₹4.10 லட்சம் கோடிக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 49% அதிகமாகும்.
ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. 2026 சட்டசபை தேர்தலுக்கு முன் நடப்பதால், இது ஆட்சியை எடை போடும் தேர்தலாக இருக்கும். அதனால், இப்போதே தேர்தல் பணிகளை DMK முடுக்கியுள்ளது. அதேநேரம், இடைத்தேர்தலில் தவெக போட்டியிட வேண்டும் என முன்னணி தலைவர்கள் விஜய்யிடம் வலியுறுத்தியுள்ளனர். இதனால், தொகுதியின் செல்வாக்கு குறித்து அறிய அவசர சர்வே எடுக்க அவர் உத்தரவிட்டுள்ளாராம்.
தமிழ் திரையுலகில் இளையராஜாவுக்கு இருக்கும் ரசிகர்கள் மிகவும் வித்தியாசமானவர்கள். அவருடைய இசையில் லயித்துக் கொண்டே அவர் பேசும் விஷயங்களை தொடந்து விமர்சித்துக் கொண்டிருப்பர். அந்த வகையில், நேற்று ஆண்டாள் கோயிலில் அவருக்கு நடந்த அநீதியை முதலில் தட்டிக் கேட்டவர்கள் அவர்கள்தான். ஆனால், இளையராஜாவே அப்படியெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை என்று சொன்ன பின்பு வழக்கம்போல அவரை விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர்.
மக்களவையின் 543 தொகுதிகள், மாநிலங்களின் 4,120 பேரவைத் தொகுதிகள், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சிப் பதவிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடக்கும். குறிப்பாக, மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த அடுத்த 100 நாட்களுக்குள் நாடு முழுவதும் 89,194 நகர்ப்புற உள்ளாட்சி இடங்களுக்கும், 31 லட்சத்து 89 ஆயிரம் கிராமப்புற உள்ளாட்சி பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்படும். இது சாத்தியமா? கமெண்ட் பண்ணுங்க..
இந்தாண்டு இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்த ஹீரோக்கள் விஜய் சேதுபதி, அல்லு அர்ஜூன், விக்ரம், பிரித்வி ராஜ் தான். படத்தின் கதை வலுவாக இருந்தாலும், அதை நேர்த்தியான நடிப்பால் ரசிகர்களை கவரவில்லை என்றால் அவர்களின் உழைப்பு அனைத்தும் வீண் தான். ஆனால் படத்தின் கதாபாத்திரமாகவே வாழ்ந்து நம் அனைவரையும் வியக்க வைத்த இவர்களில் 2024 சிறந்த நடிகருக்கான தேசிய விருது யாருக்கு வழங்கலாம்? கமெண்ட்ல சொல்லுங்க.
Sorry, no posts matched your criteria.