India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முட்டை பொதுவாக நீள் வட்டம் (Oval) வடிவில் தான் இருக்கும். ஆனால், வட்ட வடிவிலான முட்டையை நீங்கள் பார்த்தது உண்டா? கோடியில் ஒரு முட்டைதான் அப்படி இருக்கும். அத்தகைய அரிய முட்டை, ஸ்காட்லாந்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் ஒரு பெண்ணுக்கு கிடைத்துள்ளது. அதை Ed Pownall என்பவருக்கு அப்பெண்மணி விற்க, அவர் அதை Luventas Foundationக்கு நன்கொடையாக அளித்துள்ளார். அது ₹21,520க்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.
‘புஷ்பா 2’ திரைப்படம் அடுத்தாண்டு ஜனவரி 9ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம் உலகளவில் வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது. வெறும் 11 நாள்களில் ₹1,400 கோடி வசூலைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. விரைவில் ₹2,000 கோடியை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு பஸ்களில் கிரேட் 2 கான்ஸ்டபிள் முதல் இன்ஸ்பெக்டர் வரையிலான போலீஸார் இலவசமாக பயணிக்கலாம் என்று மாநில உள்துறை அறிவித்துள்ளது. போலீஸார் இலவசமாக பயணிப்பது தொடர்பாக போக்குவரத்து, காவல்துறை இடையே கருத்து வேறுபாடு நிலவியது. இந்நிலையில் உள்துறை, போலீசுக்கு இலவச பஸ் பாஸ் அளிக்கவும், அதைவைத்து வருவாய் கோட்டத்தில் டவுன், புறநகர் பஸ்களில் இலவசமாக செல்லலாம் எனக் கூறியுள்ளது.
MP அரசின் சிறைத்துறை பணிகளுக்கு நடந்த தேர்வில் 100க்கு 101.66 மதிப்பெண் பெற்ற நபரால் இந்தூரில் போராட்டம் வெடித்துள்ளது. கடந்த 13ஆம் தேதி வெளியான தேர்வு முடிவில் மோசடி நடந்துள்ளதாகத் தேர்வர்கள், எதிர்க்கட்சியினர் குரல் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், ‘process of normalisation’ சிஸ்டமில் அதிக மதிப்பெண் வருவதும், பூஜ்ஜியத்தை விடக் குறைவாகப் பெறுவதும் இயல்பு என தேர்வுத்துறை விளக்கம் அளித்துள்ளது.
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் இன்று முதல் 3 நாள்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் KTCC மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகம் இருக்கும் என்று கணித்துள்ளது. இதனால், தாழ்வான பகுதியைச் சேர்ந்தவர்கள் கவனமாக இருக்குமாறு தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலத்தின் குப்பைக் கிடங்காக TN எல்லையோர மாவட்டங்கள் மாற்றப்படுவதாக அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். கேரள அரசுடன் உறவாடிக் கொண்டிருக்கும் திமுக அரசு இதனைக் கண்டும் காணாததுபோல் இருப்பதோடு, குப்பை கொட்டும் இடமாக அனுமதித்துள்ளதாகவும் சாடியுள்ளார். TN அரசு இதைத் தடுக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், இனியும் இதே நிகழ்வு தொடர்ந்தால் குப்பை லாரிகளுடன், தான் கேரளா செல்ல உள்ளதாக எச்சரித்துள்ளார்.
இந்திய பங்குச்சந்தையில் மும்பை குறியீட்டெண் சென்செக்ஸ் ஒரே நாளில் 1,015 புள்ளிகள் சரிந்து 80,732 என்ற Intraday low-ஐ தொட்டது. ஃபைனான்ஸ், மெட்டல், FMCG, IT உள்ளிட்ட துறை சார் நிறுவனங்களின் பங்குகளும் வெகுவாக சரிந்துள்ளன. இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் சரிந்ததும், FII சந்தையில் அதிகளவில் பங்கேற்காததும் இதற்கான காரணங்களாக கூறப்படுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக TN சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. அத்தொகுதி MLA EVKS இளங்கோவன் உடல்நலக்குறைவால் மரணமடைந்தால், தொகுதி காலியானதாக TN சட்டமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு தெரியப்படுத்தியுள்ளது. இதையடுத்து, 6 மாதத்தில் அங்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும். 2025 ஜன., பிப்., மாதத்தில் நடைபெற உள்ள டெல்லி சட்டமன்ற தேர்தலுடன் ஈரோடு தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
தமிழகத்தில் நாளை (18.12.2024) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று MET. இம்மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறவுள்ளது. இதன் தாக்கத்தால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணிக்கு எதிராக அடுத்த இரண்டு BGT போட்டியில் இருந்து ஆஸி., வீரர் ஹேசல்வுட் விலகியுள்ளார். இன்று 4ஆம் நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக பயிற்சியில் ஈடுபட்டு இருந்த போது, காலில் ஏற்பட்ட காயத்தால் விலகியுள்ளார். தற்போது தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. மீதமுள்ள 2 போட்டிகளில் வெல்லும் அணியே தொடரை வெல்லும் என்ற நிலையில், அவரின் விலகல் ஆஸி., பெருமை பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.