India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
TN-ல் அடுத்த 3 நாள்களுக்கு இயல்பை விட வெப்பம் அதிகமாக இருக்கும் என்று IMD தெரிவித்துள்ளது. TN-ல் நாளை முதல் 23-ம் தேதி வரை ஒருசில இடங்களில் வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகரிக்கக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும் 21ம் தேதி வரை தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் எனவும், சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறியுள்ளது.
தனது அப்பா கொடுமைக்காரர் என்று குஷ்பூ குற்றஞ்சாட்டியுள்ளார். தனது அப்பா ஆணாதிக்கர், படப்பிடிப்பில் சாப்பிடக் கூடாது என்று திட்டுவார், படப்பிடிப்பு தளத்திலேயே தன்னை அப்பா அடிப்பார் என்றும் சாடியுள்ளார். அவரின் கொடுமை தாங்க முடியாமல் குடும்பத்தை தான் பார்த்து கொள்வதாகக் கூறியதாகவும், அவரிடம் திரும்பி வரும் நிலை வந்தால் தற்கொலை செய்வேன் என கூறியதாகவும் குஷ்பூ குறிப்பிட்டுள்ளார்.
மும்பையில் ரயிலில் சென்றபோது தன்னிடம் ஒரு நபர் முத்தம் கேட்டதாக நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார். விஜய்யின் மாஸ்டர், ரஜினியின் பேட்டை, தனுஷின் மாறன், விக்ரமின் தங்கலான் படங்களில் நடித்தவர் மாளவிகா மோகனன். முன்னணி நடிகையாக வலம் வரும் அவர், கல்லூரிக் காலத்தில் மும்பை மின்சார ரயிலில் சென்றபோது ஒருவர் முத்தம் கேட்டதாகவும், இதை கண்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறியுள்ளார்.
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருக்கும் விலங்குகளை தத்தெடுக்கும் வசதியை பூங்கா நிர்வாகம் வழங்கி வருகிறது. அதன்படி, நடிகர் சிவகார்த்திகேயன் ஷேர்யார் என்ற சிங்கத்தையும் யுகா என்ற புலியையும் மூன்று மாத காலத்திற்கு தத்தெடுத்துள்ளார். ஒரு புலியை தத்தெடுக்க மாதம் ₹75,000, சிங்கத்துக்கு மாதம் ₹60,000 என மொத்தம் ₹4,05,000-ஐ பூங்காவிற்கு சிவகார்த்திகேயன் செலுத்தியுள்ளார்.
PF பணத்தை எடுப்பதற்கு சில நேரங்களில் மிகுந்த சிரமத்தை மாத சம்பளதாரர்கள் அனுபவிக்கின்றனர். அவர்களின் துயரத்தை போக்கும் வகையில், புதிய திட்டத்தை EPF தயாரித்துள்ளது. இதன்கீழ், PF கணக்கில் உள்ள பணத்தை ஏடிஎம்மில் பயனாளர்கள் அவசரத் தேவைக்கு எடுக்க முடியும். இந்தத் திட்டத்தை வரும் மே மாத கடைசி (அ) ஜூனில் தொடங்க EPF திட்டமிட்டிருப்பதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
மொபைலில் இருக்கும் சிரிக்கும் எமோஜியை வானில் பார்க்க வேண்டுமா? ஏப்.25 வரை காத்திருங்கள். அன்று இரவு வெள்ளி, சனி கோள்கள் அருகருகே சங்கமிக்கவுள்ளன. அதன் கீழே தேய்பிறை நிலவும் வரும். இது பார்ப்பதற்கு சிரிக்கும் எமோஜி போல தெரியும். விண்ணில் பளிச்சென காட்சி தரும் என்பதால் வெறும் கண்களாலேயே கண்டு ரசிக்கலாம். GET READY KUDOS!
இந்திய கிரிக்கெட் அணியின் துணை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட இரண்டாவது நாளே KKR அணியின் துணை பயிற்சியாளராக அபிஷேக் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2018 முதல் 2024 வரை KKR அணியின் துணை பயிற்சியாளராக இருந்துள்ளார். கடந்த ஆண்டு, கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டபோது, அபிஷேக் நாயர் துணை பயிற்சியாளரானார். ஆனால், அவர் நீக்கப்பட்டதற்கான காரணம் வெளியிடப்படவில்லை.
மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின்கீழ் மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் ஓய்வூதியம் பெறும் பெண்களும் சேர்ந்து ரூ.1,000 பெற முடியுமா என பலருக்கு சந்தேகம் உண்டு. அமைப்பு சாரா நல வாரியம் உள்ளிட்ட பிற துறைகளின் வழியாக முதியோர்கள் ஓய்வூதியம் பெற்றாலும், ரேஷன் கார்டில் பெயர் இருப்போருக்கு மாதம் ரூ.1,000 உண்டு. அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படாது.
ஆபீஸ், மால், அபார்ட்மெண்ட் என எங்கு சென்றாலும் லிப்டில் போற பழக்கம் இருப்பவரா? எப்போதாவது என்றால் லிப்ட் ஓகேதான். ஆனால், படியில் ஏறுவதும், இறங்குவதும கால்களில் உள்ள தசைகளை வலுப்படுத்துகிறது. ஒரு கார்டியோ பயிற்சி ஆகும், இது இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. எலும்புகளை வலுப்படுத்தும். உடற்பயிற்சி ஆகும். உடற்பயிற்சிக்கு நேரமில்லை என்றால், படிக்கட்டில் ஏறி இறங்குங்க போதும்!
RRக்கு எதிரான நடப்பு IPL போட்டியில் 180 ரன்களை குவித்திருக்கிறது LSG அணி. டாஸ் வென்ற LSG கேப்டன் ரிஷப் பண்ட், பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து, களமிறங்கிய தொடக்க வீரர் மார்க்ரம் 66 ரன்கள் அடித்து அசத்தினார். ஆயுஷ் பதோனியும் 50 ரன்கள் குவிக்க, LSG அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்துள்ளது.
Sorry, no posts matched your criteria.