India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரியார் சிலையை உடைப்பேன் என்றும், கனிமொழி குறித்து அவதூறாகவும் பேசிய எச். ராஜாவுக்கு 6 மாத சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. இந்நிலையில், இந்த இரு வழக்குகளிலும் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனை சட்டவிரோதம் என்றும், எனவே அதை ரத்து செய்யக்கோரியும், எச்.ராஜா இன்று ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.
திமுக தலைமை செயற்குழுக் கூட்டம் ஏற்கெனவே ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. அந்தக் கூட்டம் அடுத்து எப்பாேது நடத்தப்படும் என்பது குறித்த அறிவிப்பை திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார். அதில் அவர், திமுக தலைமை செயற்குழுக் கூட்டம் வருகிற 22ஆம் தேதி காலை 10 மணிக்கு திமுக தலைமையகமான அறிவாலயத்திலுள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
TNPSC குரூப் 2, 2ஏ மெயின் தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வு எழுதுவாேர், அவர்களின் சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்ற டிசம்பர் 18ஆம் தேதி வரை TNPSC கால அவகாசம் அளித்திருந்தது. இந்த அவகாசம் நாளையுடன் நிறைவடையவுள்ளது. ஆதலால் இனிமேலும் தாமதிக்காமல் உடனடியாக சான்றுகளை பதிவேற்றம் செய்யும்படி TNPSC கேட்டுக் கொண்டுள்ளது. இந்தத் தகவலை பகிருங்க.
அல்சர் மற்றும் நெஞ்செரிச்சலுக்கு பொதுவாக வழங்கப்படும் மருந்து RANITIDINE. இந்த மூலக்கூறு மருந்துக்கு கீழே ரேண்டாக், அசிலாக் போன்ற மாத்திரைகள் விற்கப்படுகின்றன. இதனிடையே, இந்த மருந்தில் உடலுக்கு தீங்கு செய்யும் கெமிக்கல் இருப்பதாக கூறி, அவற்றை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தடை செய்துள்ளன. ஆனால், இந்த மருந்துக்கு இந்தியாவில் தடையில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
RS-ல், அரசியலமைப்பு மீதான விவாதத்தில் பேசிய அமித் ஷா, அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ள Article 368 வாய்ப்பளிக்கிறது. தன்னை இளைஞர் என சொல்லிக்கொள்ளும் 54 வயது தலைவர் (ராகுல்காந்தி) அரசியலமைப்பை நாங்கள் மாற்றுவதாக சொல்கிறார். பாஜக ஆட்சி செய்த 16 ஆண்டுகளில் 22 சட்டத்திருத்தங்கள் கொண்டுவந்தது. ஆனால் காங். 55 ஆண்டுகளில் 77 திருத்தங்களை கொண்டு வந்திருக்கிறது என காங்கிரஸை, அமித் ஷா விளாசியுள்ளார்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் வெற்றி பெற்ற நிலையில், முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, தமிழகத்தில் ‘HOME OF CHESS’ அகாடமி உருவாக்கப்படும் என்றும், இதன் மூலமாக லட்சக்கணக்கான குகேஷ்களை உருவாக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், விமர்சனங்களை தாங்கும் இயல்பே குகேஷின் வெற்றிக்கு காரணம் என்றும் ஸ்டாலின் பாராட்டினார்.
டெல்லி தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ள அத்வானி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக ஹாஸ்பிடல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இன்னும் ஓரிரு நாளில் அவர் ICUவில் இருந்து வேறு வார்டுக்கு மாற்றப்படுவார் என்றும் ஹாஸ்பிடல் நிர்வாகம் கூறியுள்ளது. கடந்த 12ஆம் தேதி அவர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 5 நாள்களாக ICUவில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
2025ஆம் ஆண்டிற்கான முட்டை கொள்முதல் டெண்டர் இறுதி செய்யப்பட்டுள்ளது. கல்வித்துறை புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டுக்கு 94 கோடி முட்டைகள்தான் தேவை என்ற நிலையில், தேவைக்கு அதிகமாக கூடுதல் விலைக்கு 25 கோடி முட்டைகளை வாங்க இருப்பதால், அரசுக்கு ₹152 கோடி நஷ்டம் ஏற்படுமென தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே சர்ச்சையில் சிக்கிய ஒரு தனியார் நிறுவனத்துக்குத்தான் இம்முறையும் டெண்டர் தரப்பட்டதாக கூறப்படுகிறது.
சுக்கிரன் டிச.28இல் கும்பத்துக்கு இடம்பெயர்வதால் 3 ராசிகள் உச்சத்துக்கு போகப் போகின்றன. 1) மேஷம்: வருமானம் அதிகரிக்கும். புதிய முதலீடுகள் லாபத்தை அள்ளி தரும். வசீகரமும், ஆளுமையும் கூடும். 2) சிம்மம்: தொட்டதெல்லாம் துலங்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி கூடும். வாழ்க்கை துணை கிடைப்பார்கள். 3) விருச்சிகம்: அதிர்ஷ்ட காலம் ஆரம்பம். புதிய சொத்து வாங்குவீர்கள். சமூகத்தில் மரியாதை கூடும்.
20க்கும் மேற்பட்ட MPக்களுக்கு நோட்டீஸ் அனுப்ப BJP முடிவு செய்துள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று ‘ஒரே நாடு ஒரே தேர்தல் (ONOE)’ மசோதாவை அறிமுகம் செய்வதால், அனைத்து BJP MPக்களும் அவைக்கு வர கொறடா உத்தரவிட்டிருந்தார். ஆனால், அதையும் மீறி அவைக்கு வராத MPக்கள் மீது நடவடிக்கை எடுக்க கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளது. சொந்த கட்சியினருக்கே ‘ONOE’ல் நம்பிக்கை இல்லையா என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.