News December 18, 2024

சவுக்கு சங்கருக்கு 2 நாள் சிறை

image

யூ-டியூபர் சவுக்கு சங்கரை 2 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க மதுரை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. தேனி கஞ்சா வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்த நிலையில், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதால், அவர் நேற்று கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரை போலீசார், மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், சங்கரை காவலில் வைக்க உத்தரவிட்டது.

News December 18, 2024

ஜமைக்கா: துப்பாக்கிச்சூட்டில் தமிழக இளைஞர் பலி

image

ஜமைக்காவில் கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நெல்லை இளைஞர் விக்னேஷ்(31) உயிரிழந்தார். பிராவிடன்ஸ் தீவில் தென்காசியைச் சேர்ந்தவர் நடத்தி வரும் சூப்பர் மார்க்கெட்டில் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் காயமடைந்த 2 தமிழர்கள் ஹாஸ்பிட்டலில் சிகிச்சையில் உள்ளனர். பலியான விக்னேஷ் உடலைத் தாயகம் கொண்டுவர உதவி செய்யக்கோரி, உறவினர்கள் கண்ணீர் மல்க கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.

News December 18, 2024

DO YOU KNOW: சாகித்ய அகாடமி விருது

image

ஆண்டுதோறும், 24 இந்திய மொழிகளில் (ஆங்கிலம் உள்பட) இலக்கியத்திற்கு சிறந்த பங்களிப்பு செய்பவர்களுக்கு ‘சாகித்ய அகாடமி’ விருது மத்திய அரசால் வழங்கப்படுகிறது. 1955-ஆம் முதல் சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. விருதுடன் சான்றிதழ், ரூ.1 லட்சம் சேர்த்து வழங்கப்படுகிறது. தமிழில் முதல் விருது ‘தமிழ் இன்பம்’ நூலுக்காக ரா.பி.சேதுபிள்ளைக்கு வழங்கப்பட்டது.

News December 18, 2024

‘Boxing Day Test’ என்றால் என்ன?

image

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்த நாளான டிச. 26ஆம் தேதி, ‘Boxing Day’ அதாவது பரிசு வழங்கும் நாளாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் மெல்போர்ன் மைதானத்தில் AUS கிரிக்கெட் வாரியம் டெஸ்ட் போட்டியை நடத்துகிறது. அதற்கு ‘Boxing Day Test’ எனப் பெயர். IND vs AUS மோதும் 4ஆவது டெஸ்ட், ‘Boxing Day Test’ஆக நடைபெற உள்ளது. இதில், கடந்த 12 ஆண்டுகளாக IND ஒரு தோல்வியைக் கூட சந்திக்கவில்லை.

News December 18, 2024

விஜய் இதுவரை கண்டிக்காதது ஏன்?

image

அம்பேத்கர் பற்றி அமித் ஷா பேசிய பேச்சால் அரசியல் களமே கொந்தளித்து போயுள்ளது. அம்பேத்கர் கோஷத்துக்கு பதிலாக கடவுளின் பெயரை கூறினாலாவது சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என அமித் ஷா பேசியதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன. இந்த சூழலில், அம்பேத்கரை தனது கொள்கை வழிகாட்டியாக அறிவித்த விஜய், இதுவரை கருத்து தெரிவிக்காமல் இருப்பது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.

News December 18, 2024

ஃபாசிஸ்டுகளை எரிச்சல்படுத்துவோம்: உதயநிதி

image

அம்பேத்கர், அம்பேத்கர் எனக் கூறுவது ஃபேஷனாகவிட்டது எனக் கூறிய அமித்ஷாவுக்கு உதயநிதி பதிலடி கொடுத்துள்ளார். அவரது பதிவில், அம்பேத்கரின் பெயரை எப்படியாவது சிதைக்கலாம் என நினைக்கும் ஃபாசிஸ்டுகளுக்கு அம்பேத்கர் பெயரை கேட்டாலே எரிச்சல் வருவது நியாயம்தான். அப்படி அந்த ஃபாசிஸ்டுகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால், இன்னும் பல நூறு முறை அம்பேத்கர் பெயரை சொல்வோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

News December 18, 2024

ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது

image

2024-ம் ஆண்டுக்கான தேசிய சாகித்ய அகாடமி விருது, தமிழில் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. “திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.,யும் 1908” என்ற அவரது நூலுக்காக இந்த விருதைப் பெறுகிறார். தமிழகத்தின் குறிப்பிடத்தக்க வரலாற்று ஆய்வாளர்களில் ஒருவரான ஆ.இரா.வேங்கடாசலபதி, 25-க்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். சென்னை MIDS நிறுவனத்தில் ஆய்வாளராக பணியாற்றுகிறார்.

News December 18, 2024

‘பார்க்கிங்’ டைரக்டருடன் இணையும் சிம்பு?

image

‘பார்க்கிங்’ பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் சொன்ன ஒன் லைன் சிம்புவிற்கு பிடித்துபோக, அதை டெவலப் செய்ய சொல்லி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் காரணமாக தேசிங்கு பெரியசாமி இயக்கும் படம் தள்ளிப்போய் கொண்டே இருப்பதால், சிம்பு இந்த முடிவை எடுத்துள்ளாராம். அவர் தற்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடித்து வருகிறார்.

News December 18, 2024

பாஜகவுடன் கூட்டணியா? ஜெயக்குமார் விளக்கம்

image

2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக உடன் கூட்டணி இல்லை என அதிமுக Ex அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாகக் மறுத்துள்ளார். அதிமுகவின் தொடர் தோல்வி பாவத்தைக் கழிக்க NDA கூட்டணியில் இணைய வேண்டும் என TTV தினகரன் பேசியிருந்த நிலையில், ஜெயக்குமார் இவ்வாறு கூறியுள்ளார். டிடிவி தினகரன் முழுமையாக பாஜகவில் சரணடைந்துவிட்டதாகவும் அவர் சாடியுள்ளார்.

News December 18, 2024

செகண்ட் ஹேண்ட் வாகனங்கள் விலை உயருகிறது?

image

புதிய வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரியை போல் செகண்ட் ஹண்ட் வாகனங்களுக்கும் 18% GST விதிக்க GST கவுன்சில் பரிந்துரைத்துள்ளது. இதனால், உதிரிபாகங்களின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கு 12% GST விதிக்கப்படும் நிலையில், அதனை 18% ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய வரி விதிப்பால் செகண்ட் ஹேண்ட் வாகனங்களை வாங்கும்போது, அதிக வரி செலுத்த வேண்டியிருக்கும்.

error: Content is protected !!