India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அட்லீ அடுத்ததாக சல்மான் கானை இயக்க உள்ளதை உறுதி செய்துள்ளார். ‘தெறி’ படத்தின் ஹிந்தி ரிமேக்கான ‘பேபி ஜான்’ பட புரமோஷனில் பேசிய அவர், சல்மான் கானுடனான புதிய படத்திற்கு தற்காலிகமாக ‘ஏ6’ என பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த படம் அதிக நேரத்தையும், சக்தியையும் எடுத்துக் கொள்வதாகவும், இப்படம் நாட்டை பெருமைப்படுத்தும் வகையில் இருக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் இருக்கும் ஆம் ஆத்மி அடுத்து கையில் எடுத்துள்ள திட்டம் சஞ்சீவனி. இந்த திட்டத்தின் மூலம் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு அரசு, தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்கப்படவுள்ளது. வருமான பேதமின்றி அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் பயனடையும் இத்திட்டம் ஆட்சிக்கு வந்ததும் அமலாகும் என்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.
நீண்ட இடைவெளிக்குப் பின் வடகொரியா உடனான தூதரக உறவை இந்தியா தொடங்கி உள்ளது. கொரோனா காரணமாக கடந்த 2021ல் அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் மூடப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்திய அதிகாரிகளும் அங்கு அனுப்பப்பட்டுள்ளனர். அணு ஆயுதம், அதி நவீன ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தி வருகிறது. இத்தகைய டெக்னாலஜிகள் பாக். செல்வதை தடுக்க, இந்தியா வேலையை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
பாஜகவினரை திமுகவினர் சங்கி எனக் கூறுவது குறித்து அண்ணாமலை காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், திமுகவை எதிர்த்தாலே அவர்களுக்கு கிடைக்கும் பட்டம் சங்கி. யார் அவர்களை எதிர்த்தாலும் பாஜகவின் A டீம், B டீம் என்கிறார்கள். அராஜகம், அட்டூழியம், மிரட்டுவது, சினிமா செய்திகளை பார்ப்பதில்லை என்றெல்லாம் பேசுவது ஆணவத்தின் உச்சம். 2026 தேர்தலில் இவர்கள் காணாமல் போவார்கள் என எச்சரித்தார்.
கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு அமுதம் அங்காடிகளில் குறைந்த விலையில் ரூ.999க்கு 20 மளிகைத் தாெகுப்பு வழங்கும் திட்டத்தை உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்துள்ளார். இந்த தொகுப்பில் மஞ்சள் தூள், சர்க்கரை, பாஸ்மதி அரிசி, ரவை, மைதா, ஆட்டா, சூரியகாந்தி எண்ணெய், முறுக்கு மாவு, அதிரசமாவு, பிரியாணி மசாலா, சாம்பார் பொடி உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. மளிகைத் தொகுப்பை நீங்க வாங்கி விட்டீர்களா?
‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் 3ஆவது பாடல் ‘யேடி’ நாளை மறுநாள் வெளியாகும் என அப்படத்தின் இயக்குநர் தனுஷ் அறிவித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். 2025 பிப்ரவரி 7ஆம் தேதி படம் ரிலீசாக உள்ளது. அண்மையில் வெளியான முதல் பாடல் ‘கோல்டன் ஸ்பாரோ’ பிரமாண்ட ஹிட் அடித்த நிலையில், அடுத்து வெளியான ‘காதல் ஃபெயில்’ தனுஷ் ஸ்டைலில் இருந்தது.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அஸ்வினின் சர்வதேச கிரிக்கெட் பயணத்தில், ரசிகர்கள் கொண்டாட எண்ணற்ற தருணங்களை வழங்கியிருப்பதாகவும், எல்லைகளை கடந்து பெரிய கனவுகளை காண பல லட்சம் பேருக்கு ஊக்கமளித்துள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார். மேலும், புதிய பயணத்தில் மகத்தான வெற்றியை பெறவும் வாழ்த்தியுள்ளார்.
பிரதமர் மோடி, வரும் 21, 22ஆம் தேதிகளில் அரசுமுறை பயணமாக குவைத் செல்ல உள்ளார். அங்கு மன்னர் ஷேக் மெஷல் அல் அஹமது அல் ஜபர், பட்டத்து இளவரசர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து பேச உள்ளார். கடந்த 43 ஆண்டுகளில் இந்திய பிரதமர் அந்நாட்டிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். கடைசியாக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடந்த 1981ஆம் ஆண்டு அந்நாட்டிற்கு சென்றார்.
DMK வரும் தேர்தலில் படுதோல்வியை சந்திக்கும் என BJP மூத்த தலைவர் H.ராஜா கூறியுள்ளார். கப்பல் மூழ்கப்போகிறது என்று தெரிந்தால், எலிகள் அங்கிருந்து குதித்து தப்பித்துக் கொள்ளும் என்ற அவர், அதற்காக திருமாவளவனையும், வேல்முருகனையும் எலிகள் என்று தான் கூறவில்லை எனவும் அவர் தெரிவித்தார். திமுக கூட்டணி இருந்த இடம் தெரியாமல் போகும் எனவும், பாஜக அணியே ஆட்சி அமைக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த அஸ்வினுக்கு, AUS கேப்டன் பேட் கம்மின்ஸ் நினைவுப் பரிசை வழங்கியுள்ளார். AUS வீரர்கள் கையெழுத்து இட்ட ஜெர்ஸியை வழங்கி பிரியாவிடை அளித்துள்ளார். சர்வதேச போட்டிகளில் அஸ்வினின் சுழலை இனி பார்க்க முடியாது என்றாலும், IPL உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளில் அவர் விளையாடுவார். பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் அவருக்கு தெரிவித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.