India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வடகடலோர தமிழகத்தில் இன்று அநேக இடங்களில் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை அய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல, நாளை முதல் 4 நாள்களுக்கு தமிழகத்தில் அநேக இடங்களிலும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
காலையில் ஏற்படும் களைப்பை தடுக்கவும், நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடனும் இருக்க வேண்டுமா? இதை டிரை பண்ணுங்க.
*காலை உணவாக ஓட்ஸ் சாப்பிடலாம்.
*நாள்தோறும் முட்டை (2-3) சாப்பிடலாம்.
*புரதம் நிறைந்த யோகர்ட் (கிரேக்க தயிர்)
*கொட்டைகள் மற்றும் விதைகள் உள்ள பழம்
*பிடித்த வாழைப்பழங்கள் சாப்பிடலாம்.
*இலை பச்சை நிறத்தில் உள்ள காய்கறிகள்
*சியா விதை (நீர் அல்லது தயிரில் கலந்து)
அலங்காநல்லூரில் உள்ள கருணாநிதி ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு, தமிழக அரசு ₹8 லட்சம் மின்கட்டணம் பாக்கி வைத்துள்ளதாக R.B.உதயகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார். மதுரையில் நடந்த ADMK கூட்டத்தில் பேசிய அவர், தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதுபோல, தமிழக CMஆக எடப்பாடி பழனிசாமி வருவார் என்றார். மேலும், கரண்ட் பில் கூட கட்ட முடியாத திமுக அரசு மக்களை எப்படி காப்பாற்றும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
*இதயத்தை சீராக பாதுகாக்கும்
*உடல் எடை குறைப்புக்கு உதவும்
*இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்
*எலும்பை பலபடுத்தும்
*மூளை வளர்ச்சிக்கு நல்லது
*புற்றுநோய் தாக்குதலை தடுக்கும்
*பித்தப்பை கல்லை தடுக்கிறது
*பார்வை திறனை மேம்படுத்தும்
*சரும பாதுகாப்புக்கு உகந்தது
*தசை செயல்பாட்டை ஊக்குவிக்கும்
முதலாளிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுவதால் நாட்டின் இறக்குமதி அதிகரித்து வருவதாக ராகுல் MP குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பான X பதிவில், கடந்த நவம்பர் மாதம் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை $37.9 பில்லியனாக உள்ளது. இறக்குமதி அதிகரிப்பால் இந்த பற்றாக்குறை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் ஏற்றுமதி வளர்ச்சியில் மத்திய அரசு கவனம் செலுத்துவது இல்லை எனவும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் விடிய, விடிய மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக வேளச்சேரி, நந்தனம் தரமணி, அடையாறு, பல்லாவரம், தாம்பரம், போரூர், ராயபுரம், திருவொற்றியூர் உள்பட பல இடங்களில் கனமழை பெய்கிறது. தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இதனால், சென்னை மாநகரில் பகல் முழுவதும் அவ்வபோது மழை வெளுத்து வாங்கியது.
▶டிச.19 (மார்கழி 4) ▶வியாழன் ▶நல்ல நேரம்: 10:45 – 11:45 AM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 – 01:15 AM, 06:30 – 07:30 PM ▶ராகு காலம்: 01:30 – 03:00 PM ▶எமகண்டம்: 06:00 – 07:30 AM ▶குளிகை: 09:00 AM – 10:30 AM ▶திதி: 1:10 PM வரை சதுர்த்தி பின்பு பஞ்சமி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶நட்சத்திரம்: ஆயில்யம் ▶சந்திராஷ்டமம்: பூராடம்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC25 FINAL) இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இது தொடர்பாக ICC வெளியிட்டுள்ள பட்டியலில் தென்னாப்ரிக்க அணி 63.33 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இதேபோல ஆஸ்திரேலியா 58.89 P, இந்தியா 55.88 P, இலங்கை 45.45 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இதனால் எந்த 2 அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
தனது திருமண நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்துகொண்ட போட்டோவை, கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், எங்களது கனவு திருமணத்தில், எங்கள் கனவு சின்னம் எங்களை ஆசிர்வதித்தபோது என நடிகர் விஜய்யை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். நீண்டகால காதலர் ஆண்டனி தட்டிலை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். விஜய்-கீர்த்தி நடித்த படங்களில் உங்களுக்கு பிடித்த படம் என்ன? CMT HERE.
▶குறள் பால்: அறத்துப்பால்
▶குறள் இயல்: இல்லறவியல்
▶அதிகாரம்: அடக்கமுடைமை
▶குறள் எண்: 122 ▶குறள்:
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு.
▶பொருள்: மிக்க உறுதியுடன் காக்கப்படவேண்டியது அடக்கமாகும். அடக்கத்தைவிட ஆக்கம் தரக் கூடியது வேறொன்றும் இல்லை.
Sorry, no posts matched your criteria.