India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் தற்போது ஐந்து முனை அரசியல் போட்டி நிலவுவதாகவும் 2026ஆம் ஆண்டு தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்றும் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மாநிலத்திலும் கூட்டாட்சி அமைய வேண்டும் என்ற தவெக தலைவர் விஜய்யின் அறைகூவலை அண்ணாமலை ஆதரித்திருக்கிறார். ஏற்கெனவே விசிக இதே நிலைப்பாட்டில் இருக்கும் நிலையில் திமுக, அதிமுக கட்சிகள் மவுனம் சாதிக்கின்றன.
அரசியலமைப்பு சட்டம், தேச கட்டுமானம், எண்ணற்ற உரிமைகள் என அம்பேத்கர் நாட்டுக்கு மாபெரும் பங்களிப்பு செய்தும், சுதந்திரத்துக்கு பின் 40 ஆண்டுகள் பெரிய கட்சிகளால் புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளார். ஆனால், 90களில் எழுந்த தலித் அரசியல் எழுச்சி, ஜனநாயகத்தில் ஏற்பட்டுவரும் முதிர்ச்சி, அரசியல் நெருக்கடிகள் ஆகியவற்றால், முன்பு எப்போதையும் விட இந்திய அரசியலில் அம்பேத்கர் தவிர்க்க முடியாதவராகி விட்டார்.
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வரலாற்றில் முதல் முறையாக ₹85க்கு கீழ் வீழ்ந்திருக்கிறது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தில் ஒரு டாலரின் மதிப்பு ₹85.17ஐ தொட்டது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ₹83ஆக இருந்த டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஒரே ஆண்டில் ₹2க்கு மேல் சரிந்திருக்கிறது. இந்திய பங்குச்சந்தைகளும் கடந்த இரண்டு நாள்களாக கடும் வீழ்ச்சி கண்டிருக்கிறது.
மக்களவை கூட்டம் தொடங்கிய ஒரே நிமிடத்தில் அவை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பார்லி., வளாகத்தில் பாஜக, எதிர்க்கட்சிகள் இருதரப்பினரும் மோதிக் கொண்டதில் எம்பி ஒருவரின் மண்டை உடைந்தது. இந்நிலையில், மக்களவை தொடங்கியதும் அவையில் கட்டுப்படுத்த முடியாத அமளி ஏற்பட, பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்தி வைக்கப்படுவதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார். தொடர்ந்து மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டது.
எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரித்ததை மறுபரிசீலனை செய்யக் கோரிய மனுக்களை சென்னை HC தள்ளுபடி செய்தது. விளம்பர நோக்கத்தில் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். அதிமுகவைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
இந்திய பங்குச்சந்தையில் தேசிய குறியீட்டெண் நிஃப்டி 250 புள்ளிகள் சரிந்து, 24,000 support level-க்கு கீழ் வர்த்தகமாகி வருகிறது. இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவதும், FII பங்குகளை விற்பதும் இதற்கான காரணங்களாகக் கூறப்படுகிறது. US பெடரல் ரிசர்வ் பென்ச்மார்க் வட்டியை 0.25% குறைத்தது இந்தியாவுக்கு சாதகமாகப் பார்க்கப்பட்டது. எனினும், 2025இல் 2 ரேட் கட் மட்டுமே இருக்கும் என்பதை சந்தை ஏற்கவில்லை.
டெல்லியில், ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. குளிர்கால கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், அம்பேத்கர் குறித்த அமித் ஷா பேச்சு, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கொடைக்கானலில் சுற்றுலா சென்ற இளைஞர்கள் அங்கு போதைக் காளானை தேடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இளைஞர்கள் குடிப்பழக்கத்திற்கு ஆளாவதை தடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் வேளையில், இப்படி மற்ற போதைகளை தேடி அலைவது “நாடு எங்கே செல்கிறது?” என்று கேட்க வைக்கிறது. இதற்கெல்லாம் யார்தான் வேலி போடுவது? நீங்களே சொல்லுங்க.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ₹520 குறைந்தது. நேற்று ₹57,080ஆக இருந்த ஒரு சவரன் தங்கத்தின் விலை இன்று ₹56,560ஆக குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் நேற்று ₹7,135க்கு விற்பனையான நிலையில் இன்று ₹65 குறைந்து ₹7,070க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ₹1 குறைந்து ₹99க்கு விற்பனையாகிறது.
இந்தியப் பெருங்கடலில் உருவான ‘சீடோ’ புயல் தெற்கு ஆப்பிரிக்கா மற்றும் மடகாஸ்கர் பகுதிகளில் 1000க்கும் மேற்பட்டோரை பலி வாங்கியிருக்கிறது. மிக தீவிர புயலாக இருந்த சீடோ, அப்பகுதியில் இருந்த தீவுக்கூட்டங்கள், மொசாம்பிக்யூ ஆகிய நாடுகளில் கோர தாண்டவம் ஆடியிருக்கிறது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் தங்களது உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.