India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
22ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில், விஜய் சேதுபதிக்கு (மகாராஜா) சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. இதேபோல மக்களுக்கு பிடித்த நடிகர் பிரிவில் அரவிந்த்சாமிக்கும் (மெய்யழகன்), சிறந்த துணை நடிகைக்கான விருது துஷாராவுக்கும் (வேட்டையன்), சிறந்த துணை நடிகருக்கான விருது தினேஷுக்கும் (லப்பர் பந்து), சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது பொன்வேலுக்கும் (வாழை) வழங்கப்பட்டது.
இன்று (டிச.20) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
இன்று (டிச.20) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிடுவது, பிற்பகல், இரவு மட்டும் உணவு எடுத்துக்கொள்வது.. இப்படி எந்தவிதமான Intermittent Fasting முறையில் இருந்தாலும் உடல் எடை குறையும். ஆனால் அது முடி உதிர்வை ஏற்படுத்திவிடும் என எச்சரிக்கிறார்கள் Westlake ஆய்வாளர்கள். எலியை வைத்து ஆய்வு செய்ததில் இதனை கண்டறிந்துள்ளனர். Fasting, முடியின் ஸ்டெம் செல்களை (HFSCs) காலி செய்துவிடுகிறதாம். fasting-லும் கொஞ்சம் கவனமா இருங்க.
அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசிய பேச்சு பெரும் சர்ச்சையாகியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து இயக்குநர் பா. ரஞ்சித்திடம் நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “அமித் ஷா பேசுவதற்கு யார் உரிமை தந்தது? அந்த உரிமையை வாங்கிக் கொடுத்ததே அம்பேத்கர்தான். அதனால், எந்த சக்தி நினைத்தாலும் அம்பேத்கரை தடுக்கவும் முடியாது. மீறவும் முடியாது. பாபா சாஹேப் அம்பேத்கருக்கு ஜெய்பீம்” எனக் கூறினார்.
புரோ கபடி லீக் தொடரில் குஜராத் அணியை வீழ்த்தி உ.பி. யோத்தாஸ் அபார வெற்றி பெற்றுள்ளது. தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக விளையாடிய உ.பி. யோத்தாஸ் அணி ஆட்ட நேர முடிவில் 59-23 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றது. இந்த தொடரில் 12 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், 79 புள்ளிகளுடன் ஹரியானா அணி முதலிடத்தில் உள்ளது. பாட்னா, உ.பி அணிகள் தலா 74 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
தென்கொரிய கார் நிறுவனமான Kia தனது புதிய SUV மாடலான Syros-ஐ இந்தியாவிலிருந்து அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவின் எஸ்யூவி மார்க்கெட்டில் 15 சதவீதம் கைப்பற்றியுள்ள Kia, இந்தாண்டு மட்டும் 3 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. பெட்ரோல், டீசல் என 2 விதமான ஆப்ஷனில் கிடைக்கும் Syros-ன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.10 லட்சம்- ரூ.15 லட்சத்துக்குள் நிர்ணயிக்கப்படலாம். இதற்கான புக்கிங் ஜனவரியில் தொடங்குகிறது.
➤மேஷம் – நன்மை ➤ரிஷபம் – தாமதம் ➤மிதுனம் – நிம்மதி ➤கடகம் – குழப்பம் ➤சிம்மம் – வரவு ➤கன்னி – பக்தி ➤துலாம் – பேராசை ➤விருச்சிகம் – அமைதி ➤தனுசு – வெற்றி ➤மகரம் – நலம் ➤கும்பம் – ஆர்வம் ➤மீனம் – பொறாமை
ராகுல் காந்தி மீது நாகலாந்து பெண் எம்.பி. பாங்னோன் கொன்யாக் பரபரப்பு புகார் அளித்தது தொடர்பாக வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார். பழங்குடியின பெண் எம்.பி.யை அவமதித்த ராகுல் காந்தி உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வானதி வலியுறுத்தியுள்ளார். முன்னதாக, நாடாளுமன்றத்தில் தனக்கு மிக அருகே ராகுல் நின்றது அசெளகர்யமாக இருந்ததாக பாங்னோன் கொன்யாக் புகார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
WI மகளிர் அணிக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில், IND அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த IND அணி, 4 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்களை எடுத்தது. கேப்டன் ஸ்மிரிதி மந்தனா அதிகபட்சமாக 77 ரன்களை விளாசினார். அடுத்து களமிறங்கிய WI அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.
Sorry, no posts matched your criteria.