News December 21, 2024

SUNDAY கிச்சன் டிப்ஸ்

image

*சிறிது நெய்யில் கடுகு, 5 மிளகு சேர்த்து தாளித்தால் ரசம் வாசனை தூக்கும்.
*உளுத்தம் பருப்புடன் 6 முந்திரி சேர்த்து அரைத்து வடை செய்தால், மிருதுவாக இருக்கும்.
*அரை கப் சிறு பயிறு, கால் கப் வேர்க்கடலை சேர்த்து அடை மாவு அரைத்தால் சாப்பிட ருசியாக இருக்கும்.
*புளித்த தயிருடன் அரை டீஸ்பூன் சர்க்கரை சேர்த்தால், தயிரில் இனிப்பு சேர்ந்து புளிக்காமல் பாதுகாக்கும்.

News December 21, 2024

பெங்களூருவில் தமிழ் புத்தகத் திருவிழா

image

பெங்களூருவில் 3ஆவது தமிழ் புத்தகத் திருவிழாவை, இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தொடங்கி வைத்தார். சிவாஜிநகர் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினியர்ஸ் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி டிச.29ஆம் தேதி வரை நடைபெறும். நாள்தோறும் மாலையில் புத்தக வெளியீடு, கருத்தரங்கம், பட்டிமன்றம் போன்ற இலக்கிய நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News December 21, 2024

மின்சாரம் திருடிய MP: ₹1.91 கோடி அபராதம்

image

உ.பியை சேர்ந்த சமாஜ்வாதி MP ஜியா உர் ரகுமானுக்கு, ₹1.91 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. சம்பல் தொகுதியில் சில நாள்களாக அதிரடி ஆய்வு நடந்து வருகிறது. அந்த வகையில் ரகுமான் வீட்டில் நடந்த சோதனையில், 2 மின் இணைப்பு மீட்டர்கள் 6 மாதங்களாக ஓடாதது தெரியவந்தது. மேலும் அதன் மீட்டர் சீல்களும் உடைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து அவருக்கு அபராதம் விதித்த அதிகாரிகள், வீட்டின் மின் இணைப்பு துண்டித்தனர்.

News December 21, 2024

பாகற்காயில் ஒளிந்து கிடக்கும் நன்மைகள்

image

அன்றாடம் உணவில் பாகற்காயை சேர்ப்பதால் கிடைக்கும் எல்லையில்லா நன்மைகள்.
*புற்றுநோயை எதிர்த்து போராடும்.
*இரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்தும்.
*இரத்த சோகையை தடுக்கும்.
*கல்லீரல் மற்றும் டிடாக்ஸ் நன்மைகள்.
*தோல் மற்றும் முடி ஆரோக்கியம் மேம்படும்.
குறிப்பு: பாகற்காயை அதிகளவில் சாப்பிட்டால் வயிறு கோளாறு உண்டாகும்.
கர்ப்பிணி பெண்கள் நிபுணர்களிடம் ஆலோசனை பெற்ற பிறகே பாகற்காய் சாப்பிட வேண்டும்.

News December 21, 2024

ஜனநாயகம் புதைக்கப்படுகிறது: செல்வப்பெருந்தகை

image

நாடாளுமன்ற ஜனநாயகம் நாள்தோறும் குழிதோண்டி புதைக்கப்பட்டு வருவதாக செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். ஆரோக்கியமான விவாதங்கள், கருத்து மோதல்கள் நடப்பதற்கு பதிலாக, கார்கே, ராகுல் ஆகியோர் வன்முறை நோக்கத்துடன் பாஜகவினர் தாக்க முற்பட்ட குற்றஞ்சாட்டிய அவர், இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துமாறு கேட்டுக்கொண்டார்.

News December 21, 2024

9 ஹார்பர்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை

image

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதனால் தமிழகத்தில் உள்ள 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னைக்கு 370 KM தொலைவில் மையம் கொண்டுள்ள இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது, அடுத்த 24 Hrsஇல் வடக்கு-வடகிழக்கு நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

News December 21, 2024

மூல நோயை விரட்டலாம் வாங்க!

image

மூல நோய் பிரச்னையில் இருந்து விடுபட சில டிப்ஸ்…
*ஆப்பிள், பேரிக்காய், பெர்ரி, வாழைப்பழங்கள் மற்றும் ஆரஞ்சு பழங்கள் அடிக்கடி சாப்பிடலாம்.
*ப்ராக்கோலி, கேரட் மற்றும் அனைத்து வகையான கீரை வகைகளும் மூல நோய் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு தரும்.
*ஓட்ஸ், முழு கோதுமை பிரெட், பிரவுன் அரிசி, பார்லி போன்ற முழு தானிய உணவுகளை அவ்வபோது சாப்பிட்டால் நல்ல தீர்வு கிடைக்கும்.

News December 21, 2024

கடன்களை இன்னும் சுலபமா தாங்க: தங்கம் தென்னரசு

image

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்படும் கடன்களை, வங்கிகள் இன்னும் மேம்படுத்த வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார். 180ஆவது மாநில அளவிலான வங்கிகள் குழு கூட்டத்தில் பேசிய அவர், விவசாயம், கல்விக் கடன்கள், வீட்டுக் கடன்கள், பெண் கடன்தாரர்கள், சிறுபான்மையினர், SC, ST பிரிவினர் உள்பட முன்னுரிமை பிரிவினருக்கு லோன் வழங்குவது குறித்து அதிகாரிகளுக்கு எடுத்துரைத்தார்.

News December 21, 2024

8 வயதில் உலக சாதனை

image

சாதிக்க வயது தடையில்லை என்பதை இந்த 8 வயது சிறுமியின் அசாத்திய திறமை நிரூபிக்கிறது என்றால் அது மிகையாகாது. உடலை முறுக்கி செய்யக்கூடியது கமர் மரோதாசனம். இந்த ஆசனத்தை ஒரே நிமிடத்தில் சுமார் 45 முறை செய்துள்ளார் அந்த சிறுமி. அவரது இந்த முயற்சி, International, Worldwide, International Yoga ஆகிய 3 உலக சாதனை புத்தகங்களில் இடம்பிடித்துள்ளது. இதையடுத்து சாதனை சிறுமிக்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

News December 21, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶டிசம்பர் 21 (மார்கழி 6) ▶சனி ▶நல்ல நேரம்: 07:45 – 08:45 AM, 05:15 – 06:00 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 – 11:45 AM, 09:30 – 10:30 PM ▶ராகு காலம்: 09:00 – 10:30 AM ▶எமகண்டம்: 01:30 – 03:00 PM ▶குளிகை: 06:00 – 07:30 AM ▶திதி: 03:10 PM வரை சஷ்டி பின்பு சப்தமி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶நட்சத்திரம்: 06:53 AM வரை மகம் பின்பு பூரம் ▶சந்திராஷ்டமம்: 06:53 AM வரை உத்திராடம் பின்பு திருவோணம்.

error: Content is protected !!