News December 21, 2024

வார்டு வரையறைக்கு பிறகே உள்ளாட்சித் தேர்தல்

image

வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு நடைமுறைக்கு பின்னரே தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. வரும் 5ஆம் தேதியுடன் ஊரக உள்ளாட்சி நிர்வாகிகளுக்கான பதவிக்காலம் நிறைவடைகிறது. ஆனாலும், இதுவரை தேர்தல் அறிவிப்பு வெளியாகாத நிலையில் அரசு இவ்வாறு பதிலளித்துள்ளது.

News December 21, 2024

அஸ்வின் மனைவியின் எமோஷனலான கடிதம்

image

அஸ்வினின் ஓய்வு குறித்து அவரது மனைவி பிரீத்தி எமோஷனலான கடிதத்தை பதிவிட்டுள்ளார். 13-14 ஆண்டுகளாக அஸ்வின் கரியரில் இருவரும் எதிர்கொண்ட தருணங்கள் நினைவுக்கு வருவதாகவும், அஸ்வினாக இருப்பதில் அவர் எதிர்கொண்ட சவால்களையும் குறிப்பிட்டுள்ளார். எல்லாமும் நன்றாகவே அமையும். வாழ்க்கையை பிடித்தமாதிரி வாழ இந்த ஓய்வு பயன்படட்டும் என உருக்கமாக பதிவிட்ட போஸ்ட்டுக்கு ரசிகர்கள் ❤️❤️ பறக்கவிடுகிறார்கள்.

News December 21, 2024

பேருந்தில் மின்சாரம் தாக்கி பெண் பலி

image

மேல் மருத்துவத்தூரில் பேருந்து ஒன்று சாலையோரம் நிறுத்தப்பட்டபோது மின் கம்பியின் மீது உரசி நின்றிருக்கிறது. அப்போது, டீ குடிப்பதற்காக அதிலிருந்து செருப்பு அணியாமல் இறங்கிய இளம்பெண் அகல்யா மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். பேருந்தின் இரும்புக் கம்பியை பிடித்தபோது அவரை மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது. அகல்யாவை காப்பாற்ற முயற்சித்தவர்களையும் மின்சாரம் தாக்கியது.

News December 21, 2024

காதல் மனைவிக்கு பிறந்தநாள்: ரோஹித் க்யூட் வாழ்த்து

image

BGT தொடரின் வலைப்பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் நிலையிலும், இந்திய அணியின் ரோஹித் சர்மா, மனைவி பிறந்தநாளுக்கு வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார். என் வாழ்க்கை பயணத்தில் துணையாக நீங்கள் இருப்பதற்கு மிகவும் நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார். 7 வருடமாக காதலித்து வந்த இருவரும் 2015ல் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

News December 21, 2024

சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் தற்காலிக நிறுத்தம்

image

சபரிமலையில் பக்தர்கள் வருகை அதிகரிப்பால் ஸ்பாட் புக்கிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி, டிச.25, 26 மண்டல பூஜை நடைபெறுவதால், ஆன்லைன் முன்பதிவு 70,000ல் இருந்து 60,000ஆக குறைக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 96,000 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். மண்டல பூஜை யாத்திரையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 27 லட்சம் பக்தர்களுக்கு மேல் தரிசித்துள்ளனர்.

News December 21, 2024

iPhone திருப்பிக் கொடுக்கப்படுமா?

image

திருப்போரூர் முருகன் கோயில் உண்டியலில் பக்தர் ஒருவர் iPhoneஐ தவறாக போட்டதால் அதனை திரும்பப் பெற முடியாமல் அல்லாடுகிறார். இதுகுறித்து பேசியிருக்கும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “சாத்தியக்கூறுகள் இருந்தால் iPhone திருப்பிக் கொடுக்கப்படும்” என்றார். ஆனால், iPhone முருகனுக்கே சொந்தம் என்று கோயில் நிர்வாகம் சொல்லிவிட்டதால் பக்தர் செய்வதறியாது திகைத்து வருகிறார்.

News December 21, 2024

உலக தியான தினம்…நீங்களும் முயற்சி பண்ணி பாருங்க

image

உலகிற்கு இந்திய வழங்கிய கொடைகளில் ஒன்று தியானம். இன்று டிச. 21ஆம் தேதியை ஐநாவும் உலக தியான தினமாக அங்கீகரித்துள்ளது. மனதை அமைதியடைய செய்து, சிந்தனையை ஒருநிலைப்படுத்த தியானம் மிகவும் உதவுகிறது. ஆற்றல் மிக்க இதனை மூச்சு பயிற்சியில் இருந்து தொடங்க வேண்டும். அமைதியாக அமர்ந்து மூச்சை ஒருநிலைப்படுத்தினால் போதும். உலக தியானத்தில் நீங்களும் முயற்சிக்கலாமே…

News December 21, 2024

இறுதி ஊர்வலத்தில் பாரபட்சம் பார்க்க முடியாது: அமைச்சர்

image

வழக்குகளில் சிக்கியவர்கள், ரவுடிகள் பட்டியலில் உள்ளவர்களை கட்சியில் சேர்ப்பது BJP மட்டுமே என அமைச்சர் ரகுபதி விமர்சித்தார். ஒருவரின் இறுதி ஊர்வலத்தில் பாரபட்சம் பார்க்க முடியாது எனவும், யாருடைய இறுதி ஊர்வலத்திலும் கூட்டம் அதிகளவில் இருந்தால், அங்கு போலீஸ் பாதுகாப்பு இருப்பது அவசியம் என்றும் கூறினார். கோவை குண்டுவெடிப்பு குற்றவாளியின் இறுதி ஊர்வலத்தை போலீஸ் அனுமதித்ததாக BJP குற்றஞ்சாட்டியிருந்தது.

News December 21, 2024

தமிழக மீனவர்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல்

image

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றிரவு நாகை கோடியக்கரை மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தி மீன்பிடி வலைகளை திருடிச்சென்றனர். இந்நிலையில், இன்று காலை நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் மீது கடல் கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

News December 21, 2024

விமான கட்டணம் கடும் உயர்வு

image

கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு தொடர் விடுமுறையால் விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. தூத்துக்குடி, மதுரை, கொச்சி உள்ளிட்ட உள்நாட்டு விமானங்களுக்கான கட்டணமும், சிங்கப்பூர், கோலாலம்பூர், தாய்லாந்து, துபாய் உள்ளிட்ட வெளிநாட்டு விமானங்களுக்கான கட்டணமும் அதிகரித்துள்ளது. கூட்டம் அதிகரிப்பு காரணமாக டிக்கெட் கட்டணம் 3 முதல் 4 மடங்கு வரை அதிகரித்துள்ளதால், பயணிகள் கவலை அடைந்துள்ளனர்.

error: Content is protected !!