News October 27, 2025

கர்நாடகாவில் இனி 30 மார்க் எடுத்தால் பாஸ்

image

கர்நாடகாவில் SSLC, PUC-க்கான தேர்ச்சி சதவீதத்தை 35%-லிருந்து 33% ஆக குறைத்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, SSLC-ல் 206/625 மதிப்பெண்களும், PUC-ல் 198/600 மதிப்பெண்களும் (ஒரு பாடத்தில் 30 மார்க் எடுக்க வேண்டும்) எடுத்தால் பாஸ் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று தமிழகத்தில் தேர்ச்சி மதிப்பெண்ணை குறைக்கலாமா? அவ்வாறு குறைத்தால் எவ்வளவு குறைக்கலாம் என்று கமெண்ட் பண்ணுங்க.

News October 27, 2025

கவிஞர் சினேகனின் தந்தை காலமானார்

image

பிரபல கவிஞரும், நடிகருமான சினேகனின் தந்தை சிவசங்கு(102) காலமானார். தஞ்சாவூர் மாவட்டம் புது காரியாபட்டியில் உள்ள வீட்டில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அண்மையில் தனது இரட்டை குழந்தைகளை தந்தையிடம் கொடுத்து வாழ்த்து பெற்ற நெகிழ்ச்சி வீடியோவை சோசியல் மீடியாவில் பகிர்ந்திருந்தார். சினேகனுக்கு திரைத்துறையினர் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர். #RIP

News October 27, 2025

திராவிட கட்சிகள் தனித்து களமிறங்க தயங்குவது ஏன்?

image

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளுங்கட்சியான DMK, பிரதான எதிர்க்கட்சியான ADMK தங்களது கூட்டணியை பலப்படுத்தி வருகின்றன. 1967-க்கு பிறகு இரு பெரும் திராவிட கட்சிகளும் மாறி மாறி ஆட்சி கட்டிலில் அமருகின்றன. ஆனால், தேர்தலில் தனித்து போட்டியிட தயங்குவது ஏன் என சீமான் உள்ளிட்டோர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது அரசியல் களத்திலும் பேசுபொருளாகியுள்ளது. இது பற்றி உங்கள் கருத்தை கமெண்ட்ல சொல்லுங்க.

News October 27, 2025

அட்டகாசம் பட டிரெய்லரால் அப்செட்டான இயக்குநர்

image

‘தல தீபாவளியாக’ வெளியான ‘அட்டகாசம்’ படம் அக்.31-ல் ரீரிலீஸாகிறது. இதனையொட்டி, தயாரிப்பு நிறுவனம் புதிய டிரெய்லரை வெளியிட்டது. ஆனால், இந்த டிரெய்லர் தனக்கு ஏமாற்றமளிப்பதாக இப்பட இயக்குநர் சரண் வருந்தினார். தன்னிடம் இந்த பணியை ஒப்படைத்திருந்தால் தல விரும்பிகளின் நல விரும்பியாக செயல்பட்டு டிரெய்லரை சூடேற்றி இருப்பேனே என்றும் கூறியுள்ளார். இதனையடுத்து, டிரெய்லர் யூடியூபிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

News October 27, 2025

CM விஜய்.. திருமாவளவனே சொல்லிட்டாரு!

image

CM விஜய் என்று நான் சொன்னால், அது வேறு பொருளாகிவிடும், திருமாவளவனே சொல்லிட்டாரு என்று பேசுவார்கள் என திருமா கூறியுள்ளார். ‘ஆறு அறிவு’ பட இயக்குநரின் பெயரை குறிப்பிட்டு இவ்வாறு அவர் பேசினார். இந்த பெயரை எதற்கு வைத்தீர்கள் என இயக்குநரிடம் கேட்டதற்கு, ஊர் & தந்தையின் பெயர் காரணமாக வைத்தேன் என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார். ஆனாலும், இது அரசியல் கணக்கா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

News October 27, 2025

இந்தியாவை விட பாகிஸ்தான் முக்கியம் அல்ல: USA

image

இந்தியாவின் நட்பை விட்டுக்கொடுத்து, பாகிஸ்தானுடன் USA நட்பு பாராட்டாது என அமெரிக்க வெளியுறவு செயலர் மார்கோ ரூபியோ கூறியுள்ளார். பாகிஸ்தானுடன் USA நெருக்கம் காட்டுவது இந்தியாவுக்கு உறுத்தலாக இருக்கலாம், ஆனால் பல நாடுகளுடன் நட்பு வைத்துக்கொள்வது அவசியமாகிறது என்றார். மேலும், இந்தியாவுடனான USA-வின் நட்பு ஆழமானது, முக்கியமானது மற்றும் வரலாற்று சிறப்பு மிக்கது எனவும் கூறியுள்ளார்.

News October 27, 2025

Sports Roundup: ஓய்வு பெற்றார் ஷோபி டிவைன்

image

*நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் ஷோபி டிவைன் சர்வதேச போட்டியிலிருந்து ஓய்வு.
*இன்று தொடங்குகிறது சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டிகள்.
*ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றார் சுவிட்சர்லாந்தின் பெலின்டா பென்கிக்.
*ஹாக்கி இந்தியா லீக் போட்டியின் முதல் ஆட்டத்தில் தமிழகம் – ஹைதராபாத் மோதல்.

News October 27, 2025

தீபாவளிக்கு அதிக வசூலை ஈட்டிய விஜய்யின் TOP 5 படங்கள்

image

தீபாவளி என்றாலே பெரிய ஸ்டார்களின் படம்தான். அதிலும் விஜய் படங்கள் ரிலீஸ் என்றால் Family audience கூட தியேட்டருக்கு சென்று பார்ப்பார்கள். இந்த தீபாவளிக்கு விஜய்யின் படம் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. ஆனால், இதுவரை தீபாவளிக்கு ரிலீஸ் ஆன விஜய் படங்களிலேயே அதிக வசூலை சில படங்கள் ஈட்டியுள்ளன. அதில் டாப் 5 படங்கள் என்ன என்பதை தெரிந்துகொள்ள போட்டோக்களை SWIPE பண்ணுங்க. விஜய் ரசிகர்களுக்கு SHARE பண்ணுங்க.

News October 27, 2025

FLASH: பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு

image

TN-ல் 2024-25 கல்வி ஆண்டில் 311 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இல்லாதது தெரியவந்துள்ளது. இந்த பள்ளிகளில் 432 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ள போதிலும், மாணவர் சேர்க்கை இல்லாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டு பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News October 27, 2025

Montha புயல்: 13 மாவட்டங்களில் மழை வெளுக்கும்

image

Montha புயல் எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த 2 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD அலர்ட் கொடுத்துள்ளது. இதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், விழுப்புரம், கோவை, கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகை, ராணிப்பேட்டை, நீலகிரி, தி.மலை மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது.

error: Content is protected !!