News December 22, 2024

விவசாயிகளுக்கு எதிரானது திராவிட மாடல்: ராமதாஸ்

image

வேளாண்மைக்கு முன்னுதாரணமாக திகழும் இஸ்ரேல் விவசாய மாடல் தான், தமிழகத்திற்கு வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். உழவர் பேரியக்கத்தின் மாநாட்டில் பேசிய அவர், திராவிட மாடல் விவசாயிகளுக்கு எதிரானது. அதுதான் விவசாயிகளைப் படுகுழியில் தள்ளியது. இந்தியாவில் விவசாயிகள் அதிகம் தற்கொலை செய்து கொள்ளும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாக உள்ளது. இந்நிலை மாற வேண்டும் என்றார்.

News December 22, 2024

பும்ராவை பாராட்டிய ஆலன் பார்டர்!

image

பெர்த் டெஸ்டில் பும்ராவின் கேப்டன்ஷிப் மற்றும் பீல்டிங் setput அபாரமாக இருந்ததாக ஆஸி. ஜாம்பவான் ஆலன் பார்டர் பாராட்டியுள்ளார். அவர் “இந்த தொடர் முழுவதும் பும்ராவின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. குறிப்பாக 3 டெஸ்ட் போட்டியில் 21 விக்கெட்களை வீழ்த்தி அதிக விக்கெட் வீழ்த்தியவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். பும்ராவின் பந்துவீச்சு நுட்பம் அவரின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கிறது” என்றார்.

News December 22, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶டிசம்பர் 22 (மார்கழி 7) ▶ஞாயிறு▶நல்ல நேரம்: 07:45 – 08:45 AM, 3:00 PM – 4:00 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 – 11:45 AM,1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: சப்தமி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶நட்சத்திரம்: பூரம் கா 8.56 ▶சந்திராஷ்டமம்: அவிட்டம்

News December 22, 2024

“4 மணி நேரம் தான் ஆனால் 40 ஆண்டுகள் ஆகிவிட்டது”

image

அரசுமுறை பயணமாக குவைத் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேசிய அவர் “ இந்தியாவில் இருந்து குவைத் வர 4 மணி நேரம் மட்டுமே ஆகும். ஆனால் இந்திய பிரதமர் ஒருவர் இங்கு வர 4 தசாப்தம் ஆகி உள்ளது. இந்தியாவின் வெவ்வேறு பகுதியில் இருந்து வந்துள்ள உங்கள் அனைவரையும் ஒரே இடத்தில் பார்ப்பது மினி இந்தியா கூடியுள்ளது போல் தெரிகிறது” என்றார்.

News December 22, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: அடக்கமுடைமை ▶குறள் எண்: 125 ▶குறள்: எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து. ▶பொருள்: பணிவு என்னும் பண்பு, எல்லார்க்கும் நலம் பயக்கும். ஏற்கனவே செல்வர்களாக இருப்பவர்களுக்கு அந்தப் பண்பு, மேலும் ஒரு செல்வமாகும்.

News December 22, 2024

ஸ்மித்தின் தந்திரம்.. அஸ்வின் வைத்த செக்: Kaif புகழாரம்

image

அஸ்வினின் புத்திசாலித்தனத்தை முன்னாள் DC உதவி பயிற்சியாளர் முகமது கைஃப் வியந்து பாராட்டியுள்ளார். 2021 ஐபிஎல் துபாயில் நடைபெற்ற போது DCயில் இருந்த ஸ்டீவ் ஸ்மித், ஹெல்மெட்டில் கேமரா வைத்து அஸ்வினின் பந்துவீச்சை ரெக்கார்ட் செய்ய முனைந்ததாக கைஃப் கூறியுள்ளார். இதை முன்பே கணித்து, ஸ்மித் இதை இந்திய அணிக்கு எதிராக பயன்படுத்தக் கூடும் என்பதால், அஸ்வின் பந்துவீச மறுத்ததாகவும் நினைவு கூர்ந்துள்ளார்.

News December 22, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (டிச.22) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News December 22, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (டிச.22) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News December 22, 2024

நைஜீரியாவில் நடந்தேறிய துயரம்!

image

நைஜீரியாவின் மைதமா நகரில் உள்ள St.டிரினிட்டி கிறிஸ்தவ தேவாலயத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டின் பல பகுதிகளில், பொருளாதார நெருக்கடி நீடித்து வருகிறது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் ஏழ்மையில் வாடிவருகின்றனர். இந்நிலையில், வறுமையில் உழன்றுவரும் அம்மக்கள் பரிசு பொருட்களை வாங்க குவிந்தபோது, நெரிசல் ஏற்பட்டு இந்த துயரச் சம்பவம் நடந்தேறியுள்ளது.

News December 22, 2024

ராசி பலன்கள் (22-12-2024)

image

➤மேஷம் – பயணம்
➤ரிஷபம் – செலவு
➤மிதுனம் – அமைதி
➤கடகம் – சிந்தனை
➤சிம்மம் – பாராட்டு
➤கன்னி – நன்மை
➤துலாம் – சோதனை
➤விருச்சிகம் – ஆக்கம்
➤தனுசு – சாதனை ➤மகரம் – பேராசை
➤கும்பம் – சிரமம் ➤மீனம் – சாந்தம்.

error: Content is protected !!