India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புஷ்பா 2 படத்தை ரசிகர்களுடன் பார்க்க திரையரங்கிற்கு அல்லு அர்ஜூன்(AA) செல்ல, கூட்டம் அலைமோதி ஒரு உயிர் பிரிந்தது. கைதான AA ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். தெலங்கானா முதல்வர் சட்டமன்றத்தில் இது குறித்து கொந்தளிக்க, AA தன்னிலை விளக்கத்தை அளிக்கிறார். ஆனால், தாயை இழந்து 20 நாட்கள் நெருங்கியும் காயமடைந்த சிறுவன் இன்னும் ஆஸ்பத்திரியிலேயே உள்ளார். எதிர்பாராதது என்றாலும், அச்சிறுவனுக்கு என்ன பதில்?
13 வயதேயான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் மெகா ஏலத்தின் போதே பலரின் கவனத்தை பெற்றார். அவர் தற்போது மாபெரும் சாதனை ஒன்றை நிகழ்த்தி இருக்கிறார். அவர் 13 வயது 269 நாட்களில் லிஸ்ட்-ஏ கிரிக்கெட்டில் விளையாடிய இளம் வீரராக மாறியுள்ளார். நேற்று, விஜய் ஹசாரே டிராபியில், ம.பி அணிக்கு எதிரான போட்டியில் பீகார் அணிக்காக விளையாடினர். இதற்கு முன் அலி அக்பர் (14 வயது 51 நாட்கள்) வைத்திருந்தார்.
மாநில அரசுகள் வாரி வழங்கும் இலவசத் திட்டங்கள் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி வருவதாக RBI கூறியுள்ளது. இதனால், உள்கட்டமைப்புக்கு பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதோடு நிதி ஒதுக்கீடு செய்வது கணிசமாகக் குறைந்துள்ளதாகவும், 2018 – 19 முதல், மாநிலங்கள் வழங்கும் மானியங்கள் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் அளவை விட 2.5 மடங்கு அதிகரித்து ₹4.7 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் 1,036 இடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ RRB இணையதளம் வழியாக சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன் பணிக்கான தகுதி, வயது, தேர்வு செயல்முறையை முழுமையாக அறிந்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேறக்கப்படுகிறது.
வரும் 5ஆம் தேதியுடன் 28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், தனி அதிகாரிகளை நியமிக்க TN அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அவசரச் சட்ட மசோதா வரும் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படவுள்ளது. பின்னர், வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு நடைமுறைகள் முடிந்த பிறகே உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவுள்ளது. அதிமுக ஆட்சியில் 2016 – 2019 வரை தனி அதிகாரிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
உ.பி., மகா கும்பமேளாவுக்குக் கூடுதல் ரயில்கள் இயக்கப்படுவதால் 10 மெமு(MEMU) ரயில்களில் 2 பெட்டிகள் தற்காலிகமாக குறைபட்டுள்ளதாக SR அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை பீச் – திருவண்ணாமலை, விழுப்புரம் – சென்னை பீச், திருவண்ணாமலை – தாம்பரம், தாம்பரம் – விழுப்புரம், சென்னை எழும்பூர் – புதுச்சேரி, தாம்பரம் – விழுப்புரம் , புதுச்சேரி – திருப்பதி ஆகிய ரயில்களில் 26ஆம் தேதி முதல் குறைத்து இயக்கப்படவுள்ளன.
பல்வேறு மொழி திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த சிவன் (49) மாரடைப்பால் இன்று காலமானார். கேரள மாநிலம் மூணாறைச் சேர்ந்த இவர், மலையாளம், தமிழ், உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தவர். விஜய்யின் ஆரம்பக்கால திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். ‘மைனா’ திரைப்படத்திலும் சிவன் நடித்திருக்கிறார். அவரது உருவத்தால் குட்டை சிவன் என இவர் அழைக்கப்பட்டார்.
16ம் நூற்றாண்டில், ஜெர்மனியில் மார்டின் லூதர் என்பவர் வீட்டிற்கு வரும்போது, வாடாமல் இருக்கும் கரும்பச்சை நிற மர இலைகளுக்கு மத்தியில் ஒளிரும் நட்சத்திரங்களால் ஆச்சரியமடைந்து, அதை அனைவரிடமும் கூறி, வீட்டிலும் இவ்வாறு அலங்காரம் செய்யும் வழக்கத்தை அறிமுகம் செய்கிறார். இப்படி அலங்கரிப்பதன் மூலம், இயேசுவே வீட்டிற்கு வந்திருப்பதாக அர்த்தம் என மக்கள் கருத, அது பண்டிகையின் முக்கிய அங்கமாக மாறியுள்ளது.
2026இல் ADMK ஆட்சியமைத்தால், தலித் கிறிஸ்தவர்களுக்கு அனைத்து சலுகைகளும் கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என இபிஎஸ் உறுதியளித்துள்ளார். கீழ்ப்பாக்கத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய அவர், திமுக அரசு சிறுபான்மை மக்களுக்காகச் சிறு துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை எனச் சாடினார். மேலும், தலித் கிறிஸ்தவர்களுக்கு அனைத்து சலுகைகள் கிடைக்க வேண்டும் என்பதே அதிமுகவின் கொள்கை என்றும் கூறினார்.
நாமக்கல் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் நிர்ணயித்த விலையின்படி, கறிக்கோழி கிலோ ₹94ஆகவும், முட்டைக்கோழி கிலோ ₹108ஆகவும் விற்கப்படுகிறது. சென்னையில் இன்று கோழி இறைச்சியின் விலை கிலோ ₹220 முதல் ₹250 வரையும், மட்டன் கிலோ ₹800-850 வரையும் விற்பனையாகிறது. சபரிமலை சீசன் காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் இறைச்சி, மீன் விற்பனை மந்தமாக காணப்படுவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
Sorry, no posts matched your criteria.