News December 22, 2024

IND Vs WI: இந்திய மகளிர் அணி ரன் குவிப்பு

image

இந்திய மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற 315 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலில் களமிறங்கிய இந்திய அணி, தொடக்கம் முதலே அதிரடி காட்டியது. தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 91 ரன்கள் குவித்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த இந்திய வீராங்கனைகள், 50 ஓவர் முடிவில் 314/9 ரன்கள் குவித்தனர்.

News December 22, 2024

எது ஆணவம்? விஜய்யை விளாசிய கரு.பழனியப்பன்

image

200 தொகுதிகளில் வெல்வோம் என ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சி சொல்வதில் என்ன தவறு இருக்கிறது என இயக்குநர் கரு.பழனியப்பன் கேள்வி எழுப்பியுள்ளார். மாநிலத் திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய அவர், கட்சி தொடங்கிய உடனே ஒருவர் ஆட்சிக்கு வந்துவிடுவேன் எனக் கூறுவதுதான் ஆணவப்பேச்சு என்றார். நம்பிக்கைக்கும், அதீத நம்பிக்கைக்கும் வித்தியாசம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News December 22, 2024

மீண்டும் ரூ.2,000 கரன்சி அறிமுகமா?

image

நாட்டில் ஏற்கெனவே புழக்கத்தில் இருந்த ரூ.2,000 கரன்சியை மத்திய அரசு திரும்பப் பெற்றது. இந்நிலையில், புதிதாக ரூ.2,000, ரூ.500 கரன்சியை புழக்கத்தில் விட இருப்பதாக மோடி பேசுவது போல வீடியோ வைரலாகி வருகிறது. இதை FACT CHECK செய்தபோது, அது முன்பு ரூ.2,000, ரூ.500 கரன்சி புழக்கத்தில் விடுவது தொடர்பாக மோடி பேசிய வீடியோ என்பதும், அந்த பழைய வீடியோவே தற்போது வைரலாகிறது என்பதும் தெரிய வந்துள்ளது.

News December 22, 2024

அரசால் இது கூட முடியாதா? : அண்ணாமலை கேள்வி

image

பள்ளிக்கல்வி துறை <<14951993>>BSNL-க்கு<<>> இணைய சேவை கட்டணம் செலுத்தவில்லை எனச் செய்தி வெளியானது. அதனை மறுத்துள்ள அமைச்சர் புதிய கதையை சொல்லிக்கொண்டிருப்பதாக BJP அண்ணாமலை ட்வீட் செய்துள்ளார். வெறும் பொய்யை மட்டும் திமுக அரசு சொல்லி வருகிறது, ஆண்டுக்கு லட்சம் கோடி கடன் வாங்குபவர்களால் இணைய கட்டணம் ரூ.1.50 கோடியை கட்ட முடியவில்லையா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

News December 22, 2024

இனி ஆண்டுக்கு 2 படங்கள் நடிப்பேன்: சூர்யா

image

கோவையில் நடைபெற்றுவரும் ‘SURIYA 45’ படத்தின் படப்பிடிப்புக்கு இடையே தனது ரசிகர்களை நடிகர் சூர்யா சந்தித்துள்ளார். அப்போது பேசிய அவர், “இனி வருடத்துக்கு இரண்டு படங்கள் வெளியாகும். அதில் நான் உறுதியாக இருக்கிறேன்” என்று தெரிவித்தார். சூர்யாவின் இந்தப் பேச்சு அவரது ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2025ஆம் ஆண்டு ‘சூர்யா 44’ & ‘சூர்யா 45’ ஆகிய இரு படங்கள் வெளியாகவுள்ளன.

News December 22, 2024

IND அணிக்கு எதிரான ENG படை அறிவிப்பு

image

இந்திய அணிக்கு எதிரான போட்டிகள் மற்றும் சாம்பியன்ஸ் டிராபிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஜனவரியில் இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. 5 டி20 போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இரு ஃபார்மெட்களிலும் ஜோஸ் பட்லர் கேப்டனாக செயல்பட உள்ளார். கடந்த ஒரு வருடமாக ஒருநாள் போட்டிகளில் விளையாடாத ஜோ ரூட், இந்த முறை ODI அணியில் இடம்பெற்றுள்ளார்.

News December 22, 2024

எந்த அலுவலகத்திலும் கட்டணம் பாக்கி இல்லை: அன்பில் மகேஷ்

image

மாவட்ட கல்வி அலுவலகங்களில் (DEO) <<14951993>>கட்டணம் <<>>செலுத்தாததால் இணையசேவை துண்டிக்கப்படுவதாக வெளியான செய்தியை மறுத்துள்ளார் அமைச்சர் அன்பில் மகேஷ். எந்த DEO அலுவலகத்திலும் கட்டணம் நிலுவையில் இல்லை. மத்திய அரசு மார்ச் முதல் தரவேண்டிய ரூ.2,151 கோடி நிதி வராதபோதும் மாநில அரசு மாணவ, ஆசிரியர் நலனுக்காக சொந்த நிதியை செலவிடுவதாக அவர் கூறினார்.

News December 22, 2024

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறைப்பு.. எவ்வளவு தெரியுமா?

image

பெட்ரோல், டீசல் விலையை தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, சலுகை அடிப்படையில் லிட்டருக்கு ரூ.3 குறைத்துள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் பெட்ரோல் வாங்குவோருக்கு மட்டும் இச்சலுகை வழங்குகிறது. இந்நிலையில், பொதுத் துறை நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 33 காசுகள் குறைத்து ரூ.100.90க்கும், டீசல் விலையை 33 காசுகள் குறைத்து ரூ.92.48க்கும் விற்கின்றன. உங்கள் ஊரில் பெட்ரோல், டீசல் விலை என்ன?

News December 22, 2024

4,000 அரசுப்பள்ளிகளில் விரைவில் INTERNET துண்டிப்பு?

image

மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 4,000 அரசுப்பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள், பிற பயன்பாட்டுக்காக இன்டர்நெட் இணைப்பை பிஎஸ்என்எல் அளித்துள்ளது. அந்தப் பள்ளிகள் ரூ.1.5 கோடி கட்டணம் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அங்கு INTERNET சேவை விரைவில் துண்டிக்கப்படக்கூடும் என சொல்லப்படுகிறது. அப்படி துண்டிக்கப்பட்டால் ஸ்மார்ட் வகுப்பு பாதிக்கப்படும் நிலை ஏற்படும்.

News December 22, 2024

பொங்கலை குறிவைத்து தேசிய தேர்வுகள்: கனிமொழி வார்னிங்

image

தமிழ்நாட்டின் பண்பாடு- கலாச்சாரம்- உணர்வுகள் என எதையும் பாஜக அரசு மதிப்பதில்லை என கனிமொழி எம்பி கடுமையாக சாடியுள்ளார். பொங்கல் பண்டிகையை குறிவைத்து CA தேர்வுகள் நடத்த இருந்ததை எதிர்த்தால், அது மாற்றப்பட்ட நிலையில், தற்போது அதே நாளில் வேறொரு தேசியத் தேர்வை நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதை அவர் வன்மையாக கண்டித்துள்ளார். மேலும், தமிழர் விரோத செயலை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் எச்சரித்துள்ளார்.

error: Content is protected !!