News December 22, 2024

திமுகவுக்கு 200 இல்லை, 2 சீட் மட்டும்தான் கிடைக்கும்: வானதி

image

சட்டமன்ற தேர்தலில் 200 இடங்களில் வெற்றி என்ற திமுகவின் எண்ணம் பலிக்காது என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். 200 இடங்களுக்கு பதிலாக, மக்கள் கடைசி 2 பூஜ்ஜியத்தை எடுத்துவிட்டு மீதத்தை மட்டுமே (2 இடங்கள்) தரப்போகிறார்கள் எனவும் விமர்சித்துள்ளார். பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணி நிச்சயம் ஆட்சி வரும் என்றும், திமுகவை மக்கள் வீழ்த்துவார்கள் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.

News December 22, 2024

Wow: 1400 ஆண்டுகளாக நீடிக்கும் பழமையான நிறுவனம்

image

1400 ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்பட்டு வரும் ஜப்பானைச் சேர்ந்த Kongō Gumi நிறுவனம், கி.பி 578ல் நிறுவப்பட்டது. கோயில் கட்டுமானத்தில் தொழிலைத் தொடங்கி, தற்போது பல்வேறு தொழில்களை செய்து வருகிறது. 2 உலகப்போர்கள், அணு ஆயுத தாக்குதல் என பல தடைகளையும் கடந்து பயணித்து வருகிறது. கொங்கோ குடும்பத்தின் 40 தலைமுறைகள் இதை நடத்தி வந்துள்ளனர். தற்போது இது மியாடைகு நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது.

News December 22, 2024

சஞ்சு சாம்சனுக்கு திருமண நாள் வாழ்த்துக் கூறிய சாருலதா

image

இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் 2018 ஆம் ஆண்டு டிச., 22 ஆம் தேதி சாருலதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், திருமண நாளை ஒட்டி இன்ஸ்டாவில் தங்களது புகைப்படத்தை பகிர்ந்து சாருலதா வாழ்த்து கூறியுள்ளார். அந்தப் படத்தில் சஞ்சு சாம்சன் பேட்டிங் செய்ய சாருலதா கீப்பிங் செய்கிறார். இந்த பதிவிற்கு கீழே ‘Keeper For Life’ (வாழ்நாள் முழுவதும் காப்பவர்) என சஞ்சு சாம்சன் கமெண்ட் செய்துள்ளார்.

News December 22, 2024

அஜித்துக்கு நன்றி சொன்ன மகிழ் திருமேனி

image

‘விடாமுயற்சி’ படப்பிடிப்பின் இறுதி நாளான இன்று இயக்குநர் மகிழ் திருமேனி, நடிகர் அஜித் குமாருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது X பதிவில், “சார், உங்களுக்கு எல்லையற்ற அன்பும் நன்றியும். நீங்கள் நீங்களாக இருப்பதன் மூலம் எங்கள் அனைவருக்கும் ஊக்கம் அளித்துள்ளீர்கள். முழு குழுவும் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளது. முதல் நாள் முதல் இன்று வரை அளித்த அன்பு & ஆதரவுக்கு நன்றி ” என்றார்.

News December 22, 2024

கழிவுகளை கலப்பவர்களிடம் நஷ்டஈடு கேட்டும் சவுமியா

image

தென்பெண்ணை ஆற்றில் ரசாயன கழிவுகளை கலப்பவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்று பசுமை தாயகம் தலைவர் சவுமியா வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பேசிய அவர், “தென்பெண்ணை ஆறு கர்நாடகத்தில் உற்பத்தியாகி, தமிழ்நாட்டிற்குள் வருகிறது. அந்த நீர் வரும்போதே ரசாயன நுரையோடுதான் வருகிறது. அதில் கழிவுகளைக் கொட்டு, அசுத்தப்படுத்தும் நபர்களிடம் நஷ்டஈடு கேட்க வேண்டும்” என்றார்.

News December 22, 2024

₹5,000 கோடியில் 2ஆம் திருமணம்

image

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், தனது காதலியான லாரன் சான்செஸை வரும் 28ஆம் தேதி திருமணம் செய்ய உள்ளார். ₹5,000 கோடி ($600 மில்லியன்) செலவில் ஆடம்பரமாக திருமணத்தை ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பில் கேட்ஸ், டிகாப்ரியோ, ஜோர்டன் ராணி உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் வருகை தர உள்ளனர். கடந்த 2018ல் தனது முதல் மனைவி மெக்கன்சி ஸ்காட்டை ஜெஃப் டைவர்ஸ் செய்தார்.

News December 22, 2024

1,602 ரன்கள்.. கிரிக்கெட்டில் மந்தனா புதிய சாதனை

image

ஒரு ஆண்டில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ், இந்தியா இடையேயான முதலாவது ODI நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 314 ரன் குவித்தது. நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, 91 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் 2024இல் மொத்தம் 1,602 ரன் விளாசி, அதிக ரன் குவித்த வீராங்கனை என்ற சாதனை படைத்தார்.

News December 22, 2024

வெல்வோம் 200! படைப்போம் வரலாறு!

image

X பக்கத்தில் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அதில் அவர், திமுக வெள்ளிவிழா, பொன்விழா, பவளவிழா கண்டபோதெல்லாம் ஆட்சியில் இருக்கும் நாம் நூற்றாண்டிலும் ஆட்சியில் இருப்போம், களத்தில் அதற்கான உழைப்பைக் கொடுப்போம் என்று தெரிவித்துள்ளார். 75 ஆண்டாக எதிரிகள் எந்த வடிவில் வந்தாலும், அடையாளம் கண்டு வீழ்த்தும் ஆற்றல் கொண்டது தி.மு.க என்றும், வெல்வோம் 200, படைப்போம் வரலாறு என்றும் கூறியுள்ளார்.

News December 22, 2024

நகைச்சுவை நடிகர் ‘குட்டை’ சிவன் காலமானார்!

image

பல்வேறு மொழி திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த சிவன் (49) மாரடைப்பால் இன்று காலமானார். கேரள மாநிலம் மூணாறைச் சேர்ந்த இவர், மலையாளம், தமிழ், உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தவர். விஜய்யின் ஆரம்பக்கால திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். ‘மைனா’ திரைப்படத்திலும் சிவன் நடித்திருக்கிறார். அவரது உருவத்தால் குட்டை சிவன் என இவர் அழைக்கப்பட்டார்.

News December 22, 2024

அரசுப் பணித் தேர்வுகள்: நாளை முதல் இலவச பயிற்சி வகுப்பு

image

டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட அரசுப் பணி போட்டித் தேர்வுகள் எழுதுவோரில் வசதி படைத்தவர்கள் பணம் செலவழித்து பயிற்சி வகுப்புக்கு செல்வர். ஆனால் வசதியில்லாதோர் எங்கு சென்று பயிற்சி பெறுவது எனத் தெரியாமல் இருப்பர். அவர்களுக்காக மாநில அரசின் கல்வி டிவியில் நாளை முதல் 27ஆம் தேதி வரை காலை 7-9 மணி வரையும், மாலை 7- 9 மணி வரை இலவச பயிற்சி வகுப்பு ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. இந்தத் தகவலை பகிருங்கள்.

error: Content is protected !!