India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் – கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் விடப்பட்டுள்ளது. இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து டிச.24, 31 ஆகிய தேதிகளில் நள்ளிரவு 00.35-க்கு புறப்பட்டு, அதே நாள் மதியம் 12.15-க்கு கன்னியாகுமரி சென்றடையும். மறுமார்க்கமாக, கன்னியாகுமரியில் இருந்து டிச.25, ஜன.1 ஆகிய தேதிகளில் மாலை 4.30-க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 4.20-க்கு தாம்பரம் வந்தடையும்.
சத்தீஸ்கரில் அரசு சார்பில் வழங்கப்படும் திட்டங்களை நடிகை ‘சன்னி லியோன்’ பெயரில் ஒருவர் மோசடியாக பெற்றது கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைப் போலவே சத்தீஸ்கர் மாநில அரசும் மகளிருக்கு மாதம் ₹1000 வழங்கி வருகிறது. இதனை பலர் மோசடியாக பயன்படுத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், சன்னி லியோன் பெயரிலும் ஒருவர் கணக்கு வைத்திருக்கிறார். அதில், அவரது கணவர் பெயர் ‘ஜானி சின்ஸ்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
முருகப்பெருமான் அன்னையிடம் இருந்து வேல் வாங்கிய நாள் தைப்பூசமாக கொண்டாடுப்படுகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி 11ல் தைப்பூசம் வருகிறது. பக்தர்கள் 48 நாட்கள் விரதமிருந்து பாதயாத்திரையாக பழனி சென்று முருகனை வழிபடுவார்கள். அப்படி விரதம் இருக்க எண்ணுபவர்கள் டிசம்பர் 25ல் தொடங்கலாம். 48 நாட்கள் விரதம் இருப்பவர்கள் சைவ உணவுகளை உண்டு, காலை, மாலை இருவேளை குளித்து, முருகனை மனம் உருகி பிராத்திக்க வேண்டும்.
ஆற்காடு அருகே நிகழ்ந்த விபத்தில் 40 பேர் உயிரைக் காப்பாற்றிய பெண் உடல் கருகி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2 நாள்களுக்கு முன்னர் டூர் பஸ் மீது தாழ்வாக இருந்த மின்கம்பி உரசியதில் அகல்யா(20) மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அகல்யா, மரணிப்பதற்கு முன்பு ‘யாரும் கம்பியில் கை வைக்காதீங்க..’ எனச் சத்தமிட்டதால் பஸ்ஸில் இருந்தவர்கள் தப்பித்தனர். இல்லை எனில் நிலைமை மோசமாகியிருக்கும்.
இந்திய அணிக்காக இதுவரை 106 டெஸ்ட் போட்டிகளில் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடி இருக்கிறார். ஆனால், 100 அல்லது அதற்கு அதிகமான டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 73 சர்வதேச வீரர்களில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடாத ஒரே வீரர் அஸ்வின் தான். மற்ற வீரர்கள் ஒரு போட்டியிலாவது பாக். அணிக்கு எதிராக டெஸ்ட்டில் விளையாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தவெகவில் இணைந்திருக்கும் நடிகர் தாடி பாலாஜி, சென்னையில் நடந்த தவெக நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவரிடம், அம்பேத்கரை அமித்ஷா இழிவாக பேசியதை எதிர்த்து தவெக போராட்டம் நடத்தாதது குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த தாடி பாலாஜி, “விஜய் என்ன முடிவெடுக்கிறாரோ அதன்படி செயல்படுவோம். அவர் சைலண்ட்டா ஒரு விஷயம் சொன்னாலே பயங்கரமாக வெடிக்கும். விஜய் பேச வேண்டிய இடத்தில் பேசுவார்” என்றார்.
வெற்றிமாறனின் விடுதலை 2 இத்திரைப்படத்தில், “கோட்பாடு இல்லாத தலைவர்கள், ரசிகர்களைதான் உருவாக்குவார்கள்” என்ற வசனம் வரும். இது, விஜய்யின் அரசியலை விமர்சிக்கும் வகையில் இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில், இத்திரைப்படம் பார்த்துவிட்டு வந்த திருமாவிடம் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு, “இது யாரையும் மனதில் வைத்து எழுதப்பட்ட வசனம் அல்ல. உலகம் முழுவதும் இது பொருந்தும்” என்றார்.
திருமணமாகி ஓராண்டு கூட நிறைவடையாத நிலையில், மதுரையைச் சேர்ந்த ராணுவ வீரர் அசாம் எல்லையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை ராணுவ வாகனம் விபத்தில் சிக்கியதில் உசிலம்பட்டியை சேர்ந்த இன்பராஜ் என்ற ராணுவ வீரர் மரணமடைந்தார். ராணுவ முகாமில் மரியாதை செலுத்திய பிறகு அவரது உடல் விமானம் மூலம் மதுரை கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
‘விடுதலை 2’ திரைப்படம் நக்சல் தீவிரவாதத்தை நியாயப்படுத்தி இருப்பதாக, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து பேசிய அவர், இப்படம் மீது தேசிய புலனாய்வு முகமை நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர். இந்நிலையில், அர்ஜுன் சம்பத்தின் கருத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
தாங்க முடியாத குளிர் கூட ஏதோ ஒரு நோயின் அறிகுறியாகும். இது உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றம் சார்ந்த பிரச்னைகளில் ஒன்றாகும். பொதுவாக மனித உடலின் வெப்பநிலை பல அமைப்பு முறைகளில் கட்டுப்படுத்தப்படுகிறது. அதிக குளிரில் விரைத்துப் போதல், உடல் நடுக்கம் ஏற்பட்டால், உங்கள் உடல் வெப்பத்தை இழப்பதற்கான அறிகுறியாகும். உடனடியாக பல அடுக்கு வெப்ப உடைகளை அணியுங்கள். தாமதிக்காமல் அருகில் உள்ள டாக்டரிடம் போங்க..
Sorry, no posts matched your criteria.