India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் அமைக்கப் போவதாக சசிகலா உறுதிபடத் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட இலவச லேப்டாப், சைக்கிளை திமுக அரசு நிறுத்தி விட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அதிமுகவின் வாக்கு வங்கி அப்படியேதான் உள்ளது, குறையவில்லை என்ற சசிகலா, தமிழக மக்களை காப்பாற்றும் திட்டத்துடன் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைப்பதாகவும் கூறியுள்ளார்.
5- 8 வகுப்பு வரை <<14959639>>கட்டாயத்<<>> தேர்ச்சி ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கல்வி பொதுப் பட்டியலில் உள்ளது. அதனால் மத்திய அரசின் இந்த அறிவிப்பு எந்தெந்த பள்ளிகளுக்கு பொருந்தும் என பார்க்கலாம். மத்திய அரசால் நாடு முழுவதும் கேந்த்ரீய வித்யாலயா, நவோதயா வித்யாலயா, சைனிக் பள்ளிகள் என 3,000க்கும் அதிகமான பள்ளிகள் நடத்தப்படுகின்றன. அந்தப் பள்ளிகளுக்கு இந்த அறிவிப்பு பொருந்தும்.
வகுப்பு 5, 8 -க்கான கட்டாய தேர்ச்சியை மத்திய அரசு நீக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. RTI தகவலின்படி ஏற்கெனவே 16 மாநிலங்கள், 2 UT’s கட்டாய தேர்ச்சியை கைவிட்ட நிலையில் மத்திய அரசும் இணைந்துள்ளது. பள்ளிக்கல்வி பொதுப் பட்டியலில் உள்ளதால், மாநில அரசு நடத்தும் பள்ளிகளுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது. ஆதலால் தமிழகத்திற்கு மத்திய அரசின் அறிவிப்பு பொருந்தாது என்று கூறப்படுகிறது.
IND அணியின் EX வீரர் வினோத் காம்ப்ளி உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் கடுமையாக அவதிப்பட்டு வந்த அவர், சனிக்கிழமை இரவு உடல்நிலை மீண்டும் மோசமானதால் தானே அக்ரிதி ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகக் கூறப்படுகிறது. அவர் நலம்பெற வேண்டுமென ரசிகர்கள் உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர்.
ஆ.ராசா மீதான ரூ.5.53 கோடி சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றச்சாட்டு பதிவை தள்ளி வைக்கக்கூடாது என சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ED மனுத்தாக்கல் செய்துள்ளது. குற்றப்பத்திரிகை நகல் ஏற்கெனவே உரியவர்களுக்கு தரப்பட்டு விட்டதால், விசாரணையை தொடர்ந்து நடத்த வேண்டும் எனவும் அம்மனுவில் ED கோரியுள்ளது. சிபிஐ பதிவு செய்த இந்த வழக்கை, சட்டவிரோத பணபரிமாற்றம் என்ற அடிப்படையில் ED-யும் விசாரித்து வருகிறது.
திமுக கூட்டணியில் 25 தொகுதிகளை கேட்போம் என்று விசிக நிர்வாகி வன்னி அரசு கூறியது தொடர்பாக திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். இன்றைய செய்தியாளர் சந்திப்பில், “அது வன்னி அரசுவின் தனிப்பட்ட கருத்து. அதிக தொகுதிகளை பெற வேண்டும் என்று நிர்வாகிகள் கேட்பது இயல்புதான்” என்று அவர் கூறினார். கூட்டணி கட்சிகளிடம் முன்கூட்டியே நிபந்தனைகள் வைப்பதில்லை என்று கூறி கச்சிதமாக அவர் நழுவினார்.
அதிமுக, இரட்டை இலை சின்னம் தொடர்பாக இபிஎஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் ஆஜரான சி.வி.சண்முகம் பொதுக்குழு முடிவுகளை எடுத்துரைத்தார். இரட்டை இலை சின்னத்தை இபிஎஸ் தரப்பிற்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் உள்ளிட்டோர் தொடர்ந்த 7 மனுக்கள் மீது இன்றும், நாளையும் ECI விசாரணை நடத்துகிறது. அனைத்து தரப்பு விசாரணைக்குப் பிறகு ‘இரட்டை இலை’ தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
ஹோண்டா நிறுவனம் புதிய ‘Activa 125’ ஸ்கூட்டியை அறிமுகம் செய்துள்ளது. வெள்ளை, மெரூன், ப்ளூ உள்ளிட்ட 6 கலர்களில், இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. DLX வேரியண்ட் எக்ஸ்-ஷோரூம் விலை ₹94,422 ஆகும். அதேபோல் Key Fob, Keyless Ignition கூடிய H ஸ்மார்ட் வேரியண்ட் எக்ஸ்-ஷோரூம் விலை ₹97,146 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு துறைகள் தங்கள் பணிகளை சரியாக செய்வதில்லை என அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். திமுக அரசின் வறட்டு கவுரவத்தை காக்க, அமைச்சர் அன்பில் பொய் பேசுவதாகக் கூறிய அவர், மாணவர்களின் கல்வியோடு விளையாடக் கூடாது என அறிவுறுத்தினார். முன்னதாக ₹1.5 கோடி பாக்கி உள்ளதால் NET சேவை துண்டிக்கப்படும் என, பள்ளிக் கல்வித்துறையை BSNL எச்சரித்ததாக அண்ணாமலையும், பாக்கி இல்லை என அன்பில் மகேஷும் தெரிவித்திருந்தனர்.
5- 8ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறையை மத்திய அரசு ரத்து செய்துள்ளதாக, அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தற்போது, 8ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி என்பது நடைமுறையில் உள்ள நிலையில், இதனை மத்திய அரசு ரத்து செய்துள்ளதாகவும், மாணவர்கள் பாஸ் ஆகும் வரை பள்ளியை விட்டு வெளியேற்றக் கூடாது என பள்ளிகளுக்கு நிபந்தனை விதித்துள்ளதாகவும் கூறியுள்ளனர். இது, மாணவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
Sorry, no posts matched your criteria.