India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஷமி தனது மனைவியையும், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தனது கணவரையும் சில ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து செய்தனர். இந்நிலையில், இருவரும் திருமணம் செய்து கொண்டதுபோல், சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் படுவேகமாக வைரலாகி வருகின்றன. ஆனால், இவை அனைத்தும் AI-ஆல் உருவாக்கப்பட்டவை. அவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகவில்லை.
இந்திய அணியில் பந்துவீச்சு வலுவாக இல்லை என புஜாரா ஆதங்கம் தெரிவித்துள்ளார். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிதாக ரன் குவிப்பில் ஈடுபடாவிட்டாலும், மிடில் ஆர்டர் மற்றும் பின்வரிசை பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுப்பதாக சுட்டிக்காட்டிய அவர், பந்துவீச்சை ஒப்பிடுகையில் பேட்டிங் சிறிது பரவாயில்லை என்றார். BGT தொடரில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் நிலையில், இரு அணிகளும் தலா 1 வெற்றியை பெற்றுள்ளன.
சூர்யா 44 படத்தின் தலைப்புடன் கூடிய டைட்டில் டீசர் வெளியாகும் தேதியை அறிவித்துள்ளது 2டி தயாரிப்பு நிறுவனம். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம் ஆகியோர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசைமைத்துள்ளார். கேங்க்ஸ்டர் பிளஸ் காதல் கதையாக உருவாகியுள்ள படத்தின் டைட்டில் டீசர் கிறிஸ்துமஸ் பரிசாக டிச.25 வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துள்ளது.
NHRC தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். 23 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றிய அவர், சென்னை உட்பட பல்வேறு உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாகவும் பதவி வகித்தார். 2019-23 வரை SC நீதிபதியாக முக்கியத் தீர்ப்புகளை வழங்கினார். Ex CJI சந்திரசூட்டை நியமிக்க, ராகுல், கார்கே எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படும் நிலையில், இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாப்கார்னுக்கு [கேரமல் பாப்கார்ன்] GST வரி ஏன் விதிக்கப்படுகிறது என்பதற்கு நிர்மலா சீதாராமன் விளக்கம் கொடுத்துள்ளார். பாப்கார்னை சர்க்கரையுடன் கலக்கும்போது, அதன் மூலக்கூறு தன்மை சர்க்கரை மிட்டாயாக மாறுகிறது, எனவே சர்க்கரை மிட்டாய்க்கு ஒப்பாக பாப்கார்னுக்கும் 18% GST வரி விதிக்கப்படுகிறது என்றார். இந்த விளக்கம் நெட்டிசன்களிடையே விவாதத்தை ஏற்படுத்தி, கிண்டல் கேலிக்கு உள்ளாகி வருகிறது.
பள்ளிகளுக்கான இணையதள சேவைக்கு BSNL-க்கு அளிக்க வேண்டிய ரூ.1.50 கோடி பாக்கியை பள்ளிக்கல்வித் துறை செலுத்தவில்லை என்றும், ஆதலால் இணையதள சேவை துண்டிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இதை அன்பில் மகேஷ் மறுத்திருந்தார். இந்நிலையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கட்டணம் செலுத்தக்கோரி அரசு எழுதிய கடிதத்தை X பக்கத்தில் வெளியிட்டு அன்பிலை அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
AUS அணியில் நாதன் மெக்ஸ்வீனி மீண்டும் இடம் பிடிப்பார் என ENG EX கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் மெக்ஸ்வீனி அளவுக்கு எந்த வீரருக்கும் சவால் கொடுக்கப்பட்டிருக்காது என்றும், பும்ரா போன்ற பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வது அவ்வளவு எளிதானது அல்ல எனவும் கூறியுள்ளார். மெக்ஸ்வீனி மீண்டும் அணியில் இணையும் போது, 4 அல்லது 5ஆவது இடத்தில் இறங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
1 – 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு இன்று மாலையுடன் முடிந்துவிட்டது. இதனால், மாணவர்களுக்கு இப்போதே அரையாண்டு விடுமுறை தொடங்கிவிட்டது. 9 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பின் ஜன.2ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஃபெஞ்சல் புயலால் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வு தி.மலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஜன.2இல் தொடங்கும் என கூறப்படுகிறது.
சிறந்த படைப்பாளர்களுக்கு கலைஞர் நிதியில் இருந்து ஆண்டுதோறும் கலைஞர் பொற்கிழி விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு தேர்வான எழுத்தாளர்கள் பட்டியலை புக் ஃபேர் நடத்தும் பபாசி அமைப்பு வெளியிட்டுள்ளது. விருது உடன் ரூ.1 லட்சம் பரிசுத்தொகை அளிக்கப்படும். *பேரா. அருணன் -உரைநடை *நெல்லை ஜெயந்தா -கவிதை *சுரேஷ்குமார இந்திரஜித் -நாவல் *என்.ஸ்ரீராம் -சிறுகதைகள் *கலைராணி -நாடகம் *நிர்மால்யா -மொழிப்பெயர்ப்பு.
நிதி தொடர்பான கணக்குகளில் நாமினி நியமன சட்டத்தில் திருத்தம் செய்து அண்மையில் மக்களவையில் மசோதா தாக்கலானது. அதன்படி, MF, Demat, Insuranceஇல் தலா 3 பேரையும், பேங்க் அக்கவுண்டில் 4 பேரையும் நாமினிகளாக நியமிக்க முடியும். உரிமையாளர் மறைவுக்கு முன் நாமினி மறைந்துவிட்டால் உருவாகும் சட்ட சிக்கலை போக்கவே, இந்த திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது வரை ₹78,213 கோடி உரிமைகோராத சொத்துகள் வங்கிகளில் உள்ளன.
Sorry, no posts matched your criteria.