News December 24, 2024

SET தேர்வு நிச்சயம் நடத்தப்படும்.. அமைச்சர் உறுதி

image

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் SET தேர்வு நிச்சயம் நடத்தப்படும் என்று உயர்க்கல்வி அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பதவிக்கு மாநிலத்தினால் நடத்தப்படும் SET (அ) யுஜிசியால் நடத்தப்படும் NET தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்நிலையில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில், மாநில தகுதி தேர்வு நடத்துவதற்கான கட்டமைப்பு தமிழக அரசிடம் இருப்பதாக கூறியுள்ளார்.

News December 24, 2024

அதிமுகவில் சசிகலா, டிடிவி? செல்லூர் ராஜூ பதில்

image

சசிகலா, டிடிவி தினகரனை அதிமுகவில் இணைத்துக் கொள்வது குறித்து EPS தான் முடிவு எடுப்பார் என செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரையில் பேட்டியளித்த அவர், EPSஐ முதல்வராக்க உறுதுணையாக இருக்கும் கட்சிகளுடன், 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி அமைக்கும் என்றார். மேலும் தமிழகத்தில் தற்போது நடைபெற்று வருவது, “CM ஸ்டாலின் குடும்பத்திற்கான பொற்கால ஆட்சி” எனவும் அவர் விமர்சித்தார்.

News December 24, 2024

5, 8ம் வகுப்பில் கட்டாயத்தேர்ச்சி ரத்து ஏன்?: விளக்கம்

image

தமிழகத்தின் கல்வித்தரத்தை வட மாநிலங்களோடு ஒப்பிடும் அமைச்சர், கேரளாவோடு ஒப்பிட முடியுமா என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். TNஇல் மாணவர்கள் தேர்ச்சி அதிகரித்திருந்தாலும், தரம் குறைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதனை மேம்படுத்தவே 5, 8ஆம் வகுப்பில் கட்டாயத் தேர்ச்சி ரத்து கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் கூறினார். MGR-ஐ அதிமுக மட்டும் உரிமை கோர முடியாது, ஏனெனில் அவர் பாரத ரத்னா என்றும் விளக்கமளித்தார்.

News December 24, 2024

ஷியாம் பெனகல் உடல் தகனம்

image

மூத்த இயக்குனர் ஷியாம் பெனகல் உடல் இன்று தகனம் செய்யப்பட்டது. மும்பை சிவாஜி பூங்காவில் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது. இதில் அவரது உறவினர்கள், திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ள ஷியாம் பெனகலுக்கு, பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகளை அரசு அளித்துள்ளது. சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று காலமானார்.

News December 24, 2024

இவர் அவரு இல்லைங்க.. கீர்த்தியின் வைரல் போட்டோ

image

கீர்த்தி சுரேஷ், வருண் தவானுடன் நடித்த பேபி ஜான் படத்திற்கான ப்ரோமோஷன் படங்கள் ட்ரெண்டாகி வருகின்றன. வருண் தவானுடன் இருக்கும் படங்களிலும் அவர் தாலி அணிந்திருப்பது ரீல் கப்பிள், ரியல் கப்பிள் குழப்பத்தை ஏற்படுத்திவிடுவதால் இந்த புகைப்படத்தை பகிர்ந்து சிலர் திருமண வாழ்த்துகள் பதிவிடுகின்றனர். இவர் அவரு இல்லைங்க.. ரீல் கப்பிள்ஸ் இவங்க என மற்றவர்கள் விளக்கம் கொடுத்து வருகின்றனர்.

News December 24, 2024

இந்தியா – பாக்., மோதும் போட்டிகள் அட்டவணை

image

Champions Trophy தொடருக்கான அட்டவணையை ICC வெளியிட்டுள்ளது. பிப்.19இல் தொடங்கும் இத்தொடர் மார்ச் 9 நிறைவடைகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா – பாக்., மோதும் போட்டி பிப்.23இல் துபாயில் நடைபெறவுள்ளது. பிப்.20ஆம் தேதி வங்கதேசத்தையும், மார்ச் 2ஆம் தேதி நியூசிலாந்தையும் IND எதிர்கொள்கிறது. இந்தியா மோதும் அனைத்து போட்டிகளும் துபாயில் நடைபெறும் வண்ணம் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

News December 24, 2024

ஆத்தாடி.. ஒரே ஆண்டில் 8 கோடி பிரியாணி ஆர்டரா?

image

அசைவ பிரியர்களுக்கு பிரியாணி மீது எப்போதும் தனி விருப்பம் உண்டு. ஆன்லைன் நிறுவனங்களில் ஆர்டர் செய்யப்படும் உணவுகளில் எது இருக்கிறதோ, இல்லையாே, பிரியாணி இருக்கும். கடந்த ஜன.1 முதல் நவ.22 வரை ஸ்விக்கியில் மட்டும் 8 கோடியே 30 லட்சம் பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. அதாவது ஒவ்வொரு விநாடிக்கும் 2 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. ஆன்லைனில் நீங்கள் எதை ஆர்டர் செய்வீர்கள்? கமெண்ட் ப்ளீஸ்.

News December 24, 2024

மீன்பிடி தொழிலை பாதுகாக்க வேண்டும்: G.K.வாசன்

image

மீன்பிடி தொழிலை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என G.K.வாசன் வலியுறுத்தியுள்ளார். 2 விசைப்படகுகளுடன், தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அவர், கைது நடவடிக்கைகளால் மீனவக் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாக வேதனை தெரிவித்துள்ளார். மேலும், இலங்கை கடற்படையின் அத்துமீறலால் மீனவர்கள் அச்சத்தோடு வாழ்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

News December 24, 2024

பொங்கல் பண்டிகைக்கு கூடுதல் விடுமுறையா?

image

ஜன.13 போகி பண்டிகைக்கு அரசு சிறப்பு விடுமுறை அளித்தால், பொங்கலுக்கு 6 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது. ஜன.11, 12 (சனி, ஞாயிறு) வாரவிடுமுறை வருகிறது. 13ஆம் தேதி போகி பண்டிகைக்கு விடுமுறை அளித்தால், ஜன.14,15,16 என 6 நாள் விடுமுறை கிடைக்கும். பண்டிகை கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள் திரும்ப ஏதுவாக ஜன.17 (வெள்ளி) விடுமுறை விட்டால், ஜன.18,19 ( சனி, ஞாயிறு) என 9 நாள் விடுமுறை கிடைக்கும்.

News December 24, 2024

தமிழகம் வருகிறார் அமித் ஷா

image

உள்துறை அமைச்சர் அமித் ஷா, டிச.27இல் தமிழகம் வருகிறார். டெல்லியில் இருந்து சென்னைக்கு வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் தி.மலைக்கு செல்கிறார். அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜக அலுவலகத்தை திறந்து வைத்தபின், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அதைத் தொடர்ந்து அண்ணாமலையார் கோயிலில் தரிசனம் செய்யும் அவர், அன்றிரவே டெல்லிக்கு திரும்புவார் என பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

error: Content is protected !!