News December 25, 2024

நீங்க தூங்கும்போது இதுதான் நடக்கும்!

image

*நாம் தூங்கும் போது சராசரியாக 20-40 முறை புரண்டு படுக்கிறோம். அதனால் இரத்த ஓட்டம் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும்.
*இதயத் துடிப்பானது சற்று குறைவாக இருக்கும்.
*ஜீரணிக்கும் உறுப்புகள் சீராக இயங்கும்.
*சிறுநீரகம், ஈரலும் தொடர்ச்சியாக செயலாற்றும்.
*உடல் வெப்பம் குறைவடையும்.
*உடலில் சேர்ந்திருக்கும் கழிவுகளை வெளியேற்றும் வேலைகள் வேகமாக நடைபெறும்.

News December 24, 2024

விருது எனது லட்சியம் இல்லை: மனு பாக்கர்

image

கேல் ரத்னா விருதுக்கான பரிந்துரையில் பெயர் இடம்பெறாதது சர்ச்சையான நிலையில், விருது பெறுவது தனது இலக்கு அல்ல என மனு பாக்கர் தெரிவித்துள்ளார். ஒரு வீராங்கனையாக நாட்டுக்காக விளையாடுவதே தனது பணி எனவும், நாட்டுக்காக இன்னும் அதிக மெடல்களை வெல்வதே லட்சியம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், விருதுக்காக நாமினேஷன் செய்யும்போது, தனது தரப்பில் தவறு நடந்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

News December 24, 2024

உக்ரைனில் 3,000 வடகொரிய வீரர்கள் பலி

image

உக்ரைன், ரஷ்யா இடையே 2 ஆண்டுகளுக்கும் மேலாக சண்டை நடக்கிறது. இதில் ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியை உக்ரைன் ஆக்கிரமித்துள்ளது. இதையடுத்து அப்பகுதியை மீட்கும் பணிக்கு ரஷ்ய ராணுவத்திற்கு ஆதரவாக வடகொரிய ராணுவமும் களத்தில் இறங்கியுள்ளது. சுமார் 10,000 வடகொரிய வீரர்கள் அங்கு சண்டையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சண்டையில் 3,000 வடகொரிய வீரர்கள் பலியாகி விட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

News December 24, 2024

அதில் எனக்கு வருத்தம் இல்லை: அஸ்வின்

image

இந்திய அணியின் கேப்டன் பொறுப்பு தனக்கு கிடைக்காததில் வருத்தம் இல்லை என அஸ்வின் தெரிவித்துள்ளார். ”அணியை வழிநடத்த நான் போதுமானவன் இல்லை என நிர்வாகம் நினைத்திருக்கலாம், ஆனால் அதற்கு தகுதியானவன் இல்லை என்று அர்த்தம் இல்லை’’ என அவர் கூறியுள்ளார். மேலும், மற்றவர்களின் வெற்றிக்கு பங்களித்த ஒரு சிறந்த தலைவராக தான் இருந்ததில் பெருமை கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News December 24, 2024

களமிறங்க போகும் 200 வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள்

image

நாடு முழுவதும் தற்போது 130 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவை அனைத்தும் இருக்கை வசதி கொண்டவை ஆகும். இந்த ரயில்களுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, தற்போது ஸ்லீப்பர் பெட்டிகளை கொண்ட வந்தே பாரத் ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டு வருகிறது. இதில் முதல்கட்டமாக 10 ரயில்களை ரயில்வே கட்டமைத்து வருகிறது. படிப்படியாக வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

News December 24, 2024

‘சூர்யா 44’ டைட்டில் டீசர் நாளை ரிலீஸ்

image

‘சூர்யா 44’ படத்தின் டைட்டில் டீசர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார். பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அந்தமான், கேரளா, மூணார், சென்னை ஆகிய பகுதிகளில் நடந்த ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது. படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2025 கோடையில் படம் வெளியாகும் என கூறப்படுகிறது.

News December 24, 2024

BREAKING: புதிய ஆளுநர்கள் நியமனம்

image

5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. கேரள ஆளுநராக இருந்த ஆரிப் முகம்மது கான், பீகாருக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, அப்பதவியில் பீகார் ஆளுநராக இருந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமிக்கப்பட்டுள்ளார். ஒடிசா ஆளுநராக மிசோரம் ஆளுநர் ஹரிபாபு கம்பம்படி, மிசோரம் ஆளுநராக வி.கே. சிங், மணிப்பூர் ஆளுநராக அஜய்குமார் பல்லா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

News December 24, 2024

நக்சல் என்பது புனிதமான சொல்: சீமான்

image

ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டுமே போற்றுவது, மதம் சார்ந்த நலன்களை மட்டுமே பேசுவதைவிடவா கொடிய நக்சல் இருந்துவிட முடியும் என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். நக்சல் என்பது புனிதமான சொல் எனவும், பசி, வலி ஆகியவைதான் போராளி உருவாவதற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், நக்சல் என்ற விமர்சனம், அதிகாரம் செலுத்தும் கூட்டத்தினரின் மொழி என்பதால், அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள் என கூறியுள்ளார்.

News December 24, 2024

சொந்த ஊருக்கு செல்ல ரெடியா?

image

வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று TNSTC அறிவித்துள்ளது. அதன்படி, டிச.27, 28, 29 ஆகிய 3 நாட்களுக்கு சென்னையில் இருந்தும், முக்கிய நகரங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அரையாண்டு லீவ், ஆங்கில புத்தாண்டு விடுமுறை என்பதால் மக்கள் கூட்டம் அலைமோதும். எனவே, கூட்ட நெரிசலை தவிர்க்க www.tnstc.in மற்றும் Mobile App மூலம் இப்போதே முன்பதிவு செய்யவும்.

News December 24, 2024

வசூலை வாரிக் குவிக்கும் புஷ்பா 2

image

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா 2 – தி ரூல்’ திரைப்படம் வசூலை வாரிக் குவித்து வருகிறது. இது தொடர்பாக படக்குழு தெரிவித்த தகவலின்படி, ஹிந்தி மொழியில் மட்டும் 16 நாட்களில் ₹645 கோடி வசூலித்துள்ளது. இதுவரை எந்த படமும் இந்தியில் இவ்வளவு வசூலை ஈட்டியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. உலகளவில் ₹1,500 கோடிக்கும் அதிகமாக புஷ்பா 2 படம் வசூல் செய்துள்ளது. படம் எப்படி இருக்கு? கமெண்ட்ல சொல்லுங்க.

error: Content is protected !!