News December 25, 2024

9 மாதங்களில் ரூ.2,57,00,000 கோடி லாபம் பார்த்த வங்கிகள்

image

பொதுத்துறை, தனியார் வங்கிகள் கடனுக்கான வட்டி உள்ளிட்ட பல்வேறு வகைகளில் லாபம் ஈட்டி வருகின்றன. அந்த வகையில் கடந்த ஜனவரி-செப்டம்பர் காலகட்டத்தில் மட்டும் ரூ.2.57 லட்சம் கோடியை லாபமாக ஈட்டியுள்ளன. இதில் பொதுத்துறை வங்கிகளுக்கு மட்டும் ரூ.1.31 லட்சம் காேடி கிடைத்துள்ளது. தனியார் வங்கிகள் ரூ.1.26 லட்சம் கோடி லாபம் பார்த்துள்ளன. அதிகபட்சமாக எஸ்பிஐ ரூ.56,064 கோடி வருமானம் பார்த்துள்ளது.

News December 25, 2024

IND vs PAK: புதிய மைல்கல்லில் விராட் கோலி

image

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தான் மற்றும் துபாயில் பிப்.19 முதல் மார்ச்.9 வரை நடைபெற உள்ளது. குறிப்பாக இந்தியா- பாக் அணிகள் பிப்.23ஆம் தேதி பலப்பரிட்சை நடத்த உள்ளனர். இந்நிலையில் இப்போட்டி இந்திய அணி வீரர் விராட் கோலிக்கு 300வது ஒருநாள் போட்டியாகும். இதுவரை 295 ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ள கோலி 50 சதத்துடன் 13,906 ரன்கள் குவித்துள்ளார்.

News December 25, 2024

டிச. 25 வரலாற்றில் இன்று

image

✒ 1861: போர்வீரன் மதன் மோகன் மாளவியாவின் பிறந்தநாள்
✒ 1924: முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்தநாள்
1956 – தமிழ்த் திரைப்பட நடிகர் பிரபு பிறந்தநாள்
✒ 1971: கடந்த 1971ம் ஆண்டு இந்திய இயக்குநர் ஜெனரல் கருணாகர் பிறந்தார். ராஜகோபாலாச்சாரி
✒ 2003 – பெனின் விமான நிலையத்தில் போயிங் 727 விமானம் வீழ்ந்ததில் 151 பேர் உயிரிழந்தனர்.

News December 25, 2024

விண்வெளியில் ஒரு ரூபாய் செலவு; வருமானம் 2 மடங்கு

image

2035ம் ஆண்டுக்குள் சொந்தமாக விண்வெளி நிலையம் அமைப்பதே ISRO இலக்கு என சோம்நாத் தெரிவித்துள்ளார். முதலாவதாக 2028ல் Space Station module அனுப்ப உள்ளதாகவும், 2040க்குள் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் நோக்கத்தில் செயல்பட்டு வருவதாகவும் கூறினார். விண்வெளித்துறைக்கு மத்திய அரசு ரூ.31 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என்ற அவர், செலவிடப்படும் ஒவ்வொரு ரூபாய்க்கும் ரூ.2.52 வருமானம் வரும் என்றார்.

News December 25, 2024

சச்சின் ஃபார்முலாவை யூஸ் பண்ணுங்க கோலி: ஹெய்டன்

image

கோலி தனது ஃபார்மை மீட்டெடுக்க, சச்சின் செய்ததை செய்ய வேண்டும் என AUS முன்னாள் வீரர் அட்வைஸ் வழங்கியுள்ளார். 2004 தொடரின் போது, டெண்டுல்கர் தனது பிரபலமான ஆஃப் சைடு ட்ரைவ்களை 10 மணி நேரமாக தவிர்த்து நிதானம் காட்டியதாகவும், அது சச்சினின் ஃபார்மில் நல்ல வளர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல், கவர் ட்ரைவ் ஆடுவதில் வல்லவரான கோலி, அதை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

News December 25, 2024

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்

image

▶இல்லை என்று ஒருபோதும் சொல்லாதீர்கள், என்னால் முடியாது என்று ஒருபோதும் சொல்லாதீர்கள், ஏனெனில் நீங்கள் எல்லையற்றவர்.
▶எல்லாச் சக்தியும் உங்களிடம் உள்ளது. உங்களால் எதையும் சாதிக்க முடியும்.
▶வேறுபாடு என்பது பெயரிலும் வடிவத்திலும் மட்டுமே உள்ளது.
▶’என்னால் எல்லாம் செய்ய முடியும்’ என்று சொல்லுங்கள். நீங்கள் உறுதியாக மறுத்தால் ஒரு பாம்பின் விஷம் கூட சக்தியற்றதாகிவிடும்.

News December 25, 2024

ஒரே மாதத்தில் 1.40 கோடி பேர் விமானப் பயணம்

image

விமானப் பயணம் என்பது முன்பு எட்டாக் கனியாக இருந்த நிலையில், தற்போது அது படிப்படியாக சாத்தியமாகி வருகிறது. விமான நிறுவனங்களின் சலுகைகள், நேர சிக்கனம் ஆகியவையும் இதற்கு ஒரு காரணமாகும். கடந்த நவம்பரில் மட்டும் 1.40 கோடி பேர் உள்நாட்டுக்குள்ளேயே பயணித்துள்ளனர். அதாவது 2023 நவம்பருடன் ஒப்பிடுகையில் இது 12% அதிகமாகும். நீங்கள் விமானத்தில் சென்றுள்ளீர்களா? கீழே கமெண்ட் பண்ணுங்க.

News December 25, 2024

பிரேம்ஜி மனைவி பகிர்ந்த ஷாக் தகவல்

image

தனது தம்பிக்கு தனது கணவரை பிடிக்காது என பிரேம்ஜியின் மனைவி இந்து அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளார். அதனால் தான் தம்பி தங்களது திருமணத்திற்கு வரவில்லை எனவும், பிரேம்ஜி பேசி பார்த்தும் பேச மறுத்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இப்பதான் கல்லூரி முடித்திருப்பதால், மெச்சூரிட்டி இன்னும் வரவில்லை எனவும், கொஞ்ச நாளில் ரியலைஸ் பண்ணி தம்பி மாறிவிடுவார் எனவும் தெரிவித்துள்ளார்.

News December 25, 2024

HRCE மீது அனைத்து சாதி அர்ச்சகர்கள் சந்தேகம்

image

பிராமணர்களுக்கு ஆகம கோயில்கள், மற்றவர்களுக்கு பிற கோயில்கள் என்ற சமரசத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை சென்றுவிட்டதோ என தமிழ்நாடு அரசு நியமன அர்ச்சகர்கள் சங்கம் சந்தேகம் எழுப்பியுள்ளது. அர்ச்சகர் நியமனத்திற்கு சுப்ரீம் கோர்ட் விதித்த தடையை நீக்க ஓராண்டாக நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், அர்ச்சகர் வழக்குகளை முறையாக நடத்த சட்ட வல்லுநர்கள் குழுவை நியமிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளது.

News December 25, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: அடக்கமுடைமை ▶குறள் எண்: 128 ▶குறள்: ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் நன்றாகா தாகி விடும்.
▶பொருள்: ஒரு குடம் பாலில் துளி நஞ்சுபோல், பேசும் சொற்களில் ஒரு சொல் தீய சொல்லாக இருந்து துன்பம் விளைவிக்குமானாலும், அந்தப் பேச்சில் உள்ள நல்ல சொற்கள் அனைத்தும் தீயவாகிவிடும்.

error: Content is protected !!