India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் 3ஆம் கட்ட அகழாய்வில் சங்கு வளையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், பியான்ஸ் எனப்படும் மூலப்பொருளால் தயாரிக்கப்பட்ட உருண்டை வடிவ மணி, மாவு கற்களால் செய்யப்பட்ட நீள்வட்ட வடிவ மணிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அங்கு இதுவரை தோண்டப்பட்ட 16 குழிகளில் இருந்து 2,850க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கிடைத்துள்ளன.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் காதலன் கண்முன்னே காதலிக்கு வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அமைச்சர் கோ.வி.செழியன் விளக்கம் அளித்துள்ளார். சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்யப்படுவதாகவும் ஒருவர் பிடித்து விசாரிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். பல்கலைக்கழகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் விளக்கமளித்தார்.
1) சனிக்கிரகத்தின் துணைக்கோள்களின் எண்ணிக்கை எவ்வளவு? 2) பக்ஸார் போர் எப்போது நடந்தது? 3) இந்தியாவின் முதல் பெண் அமைச்சர் யார்? 4) OTP என்பதன் விரிவாக்கம் என்ன? 5) மனிதரின் அறிவியல் பெயர் என்ன? 6) ‘தொண்டர் சீர் பரவுவார்’ என்ற பட்டத்தை கொண்ட புலவர் யார்?7) யுரேனியத்தை கண்டுபிடித்த நபர் யார்? 8) மேட்டூர் அணையின் வேறு பெயர் என்ன? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான பதிலை 2 மணிக்கு பாருங்க.
சென்னை அண்ணா யுனிவர்சிட்டியில், பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ள சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்றும் அண்ணாமலை விமர்சித்துள்ளார். காவல் துறையினர், பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதை விட்டுவிட்டு எதிர்க்கட்சியினரை கைது செய்வதையே குறிக்கோளாக செயல்படுவதாக சாடியுள்ள அவர், CM ஸ்டாலின் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
காசாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு குழந்தை கொ லை செய்யப்படுவதாக பாலஸ்தீனத்துக்கான ஐ.நா. நிவாரணக் குழு தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில், குழந்தைகளைக் கொல்வதை நியாயப்படுத்த முடியாது. உடல் & மன ரீதியாக காயமடைந்துள்ள இக்குழந்தைகள் வாழ்க்கை, எதிர்காலம் மீதான நம்பிக்கை இழந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. காசாவில் இதுவரை 14,500 குழந்தைகள் கொல்லப்பட்டதாக UNICEF தெரிவித்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ₹80 குறைந்த நிலையில், இன்று சவரனுக்கு ₹80 அதிகரித்து ₹56,800க்கு விற்பனையாகிறது. 22 கேரட் தங்கம் நேற்று கிராம் ₹7,090க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று, கிராமுக்கு 10 உயர்ந்து 7,100க்கு விற்கப்படுகிறது. அதேநேரத்தில் வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமின்றி கிராம் ₹99க்கும், கிலோ ₹99,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கல்லீரல் செயல்பாட்டை சீர்செய்து, உடலிலுள்ள நச்சுக்களை நீக்கி, ரத்தத்தை சுத்தப்படுத்தும் ஆற்றல் கோதுமை புல்லுக்கு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. கால்சியம், மெக்னீசியம், துத்தநாகம், அயோடின், இரும்புச்சத்து நிறைந்த கோதுமைப் புல்லை நீரில் நன்கு கழுவி, மிக்ஸியில் அரைத்து வடிகட்டி, சாறெடுத்து பருகலாம். இதனால் பெருங்குடல் சுத்தமாவதுடன் செரிமானப் பிரச்னையும் நீங்குமென டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்.
டெல்லி CM அதிஷி விரைவில் போலி வழக்கில் கைது செய்யப்படலாம் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மகிளா சம்மன் யோஜனா, சஞ்சீவனி யோஜனா போன்ற நலத்திட்டங்களால் சிலர் ஏமாற்றமடைந்துள்ளதாகவும், இதனால் அவர்கள் அடுத்த சில நாட்களில் அதிஷியை புனையப்பட்ட வழக்கில் கைது செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அதற்கு முன், ஆம் ஆத்மியின் மூத்த தலைவர்கள் இடங்களில் சோதனை நடத்தப்படலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
அதிமுக – பாஜக மீண்டும் கூட்டணியமைத்தால் 2026 தேர்தலில் இருந்து விலகி இருக்கத் தயார் என டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணியமைத்தால் மட்டுமே அதிமுக வெற்றிபெறும் என்று மீண்டும் மீண்டும் கூறிவரும் அவர், தான் இருப்பது EPSக்கு பிடிக்கவில்லை என்றால், விலகிக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார். 2021 தேர்தலின்போது இதே உத்தியை பரிந்துரைத்ததாகவும் அவர் பேசியுள்ளார்.
நாடு முழுவதும், <<14972883>>ஆளுநர்கள்<<>> மாற்றப்படும் சூழலில், ஆர்.என்.ரவி தொடர்ந்து பதவியில் நீடிப்பது எப்படி என்ற பேச்சு எழுந்துள்ளது. காரணம், கடந்த ஆக.31 ஆம் தேதியுடன் பதவிக்காலம் நிறைவடைந்த போதிலும், கடந்த ஜூலையில் வெளியான அறிவிப்பிலும் சரி, நேற்று வெளியான அறிவிப்பிலும் சரி, அவரது பெயர் இடம்பெறவில்லை. நேற்று டெல்லி சென்ற அவர், PM மோடி, அமித் ஷாவை சந்தித்து TNஇல் தொடர விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.