India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வலதுசாரியாக இருந்தாலும், நாட்டின் மதச்சார்பின்மையை பேணிக்காத்தவர் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் என்று முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். வாஜ்பாயின் 100ஆவது பிறந்தநாள் இன்று பாஜகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஸ்டாலின் தனது X பதிவில், “தமிழகத்தின் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ஆற்றிய பங்களிப்பினை, கலைஞருடன் கொண்டிருந்த நட்புறவினை நினைவுகூர்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.
தான் வளர்த்த செல்ல நாய் ‘சோரோ’ உயிரிழந்துவிட்டதாக நடிகை த்ரிஷா சோகத்துடன் பதிவிட்டுள்ளார். விலங்குகள் ஆர்வலரான அவர், அவ்வப்போது சோரோவுடன் விளையாடுவது போன்ற போட்டோக்களை இணையத்தில் பதிவிடுவார். “என் மகன் இறந்துவிட்டான். இனி எனது வாழ்வில் அர்த்தமே இல்லை” என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் அவர், சில காலம் பணியில் இருந்து ஓய்வு எடுக்கப்போவதாக உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் வராது, அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். இந்த மசோதாவின் மீது பாஜகவினரே வாக்களிக்க மாட்டார்கள் என்று கூறிய அவர், சட்டம் நிறைவேறினாலும் அதற்கு எதிராக தான் வழக்கு தொடர்வேன் என்றும் கூறியுள்ளார். மேலும், ஜிஎஸ்டியை அழிக்க வேண்டுமென்றும், நிதி அமைச்சருக்கு ஒன்றும் தெரியாமல் பிறர் எழுதித் தருவதை படிப்பதாகவும் சாடியுள்ளார்.
நாயகிகள் சிலர் தர்மசங்கடமான நிலையில் சிக்கிக்கொள்ளும் சில சம்பவங்களை நாம் கண்டுள்ளோம். நடிகை கியாரா அத்வானி, ஆலியா பட் ஆகியோருடன் வருண் தவான் நடந்துகொண்டது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. இது குறித்து அவரிடம் கேட்ட போது, கியாராவை முத்தமிட்டது திட்டமிட்டதே எனக் கூறி, அவற்றை வேடிக்கையாக செய்ததாகவும், ஆண் நண்பர்களிடமும் தான் அவ்வாறே நடப்பேன், ஆனால் அது குறித்து ஏன் யாரும் பேசவில்லை என்கிறார்.
வேலு நாச்சியாரின் நினைவு நாளையொட்டி அவரது போட்டோவுக்கு, பனையூர் கட்சி ஆபிஸில் விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், மண்ணைக் காக்க வாளேந்திப் போர்க்களம் புகுந்த வீரப் புரட்சியாளர் என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார். பொதுவெளிக்கு வரமால் போட்டோ அரசியல் செய்யும் விஜய், நேற்று பெரியார், இன்று வேலு நாச்சியார் போட்டோக்கள் மாறியுள்ளார் என்றும் பேக்ரவுண்ட் அதே தான் என்றும் கமெண்ட் செய்கின்றனர்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் தமிழகம் முழுவதிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படியான சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்று சுட்டிக் காட்டும் எதிர்க்கட்சியினர், இது தொடர்பாக முதல்வர் பதிலளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். இதுகுறித்து உங்களது கருத்தை பதிவு பண்ணுங்க.
‘என் அடையாளத்தை வைத்து மோசடி பண்ணவங்கள சும்மா விடக் கூடாது’ என நடிகை சன்னி லியோன் பொங்கி எழுந்துள்ளார். சத்தீஸ்கரில், திருமணமான பெண்களுக்கு மாதம் ₹1000 வழங்கும் திட்டத்தில், சன்னி லியோன் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கி, வீரேந்திர ஜோஷி என்பவர் மாதந்தோறும் பணம் பெற்று வந்தது தெரியவந்துள்ளது. இது துரதிருஷ்டவசமானது எனவும், போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன் என்றும் சன்னி லியோன் கூறியுள்ளார்.
தேனி மாவட்டம் கடமலைகுண்டை சேர்ந்தவர் மணிகண்டன். மனைவியை பிரிந்து தனியாக வசித்துவந்த அவர், வேலைக்காக வெளியூர் சென்றிருந்தார். அப்போது அவரது வீட்டில் அழுகிய பிணம் ஒன்று இருந்ததை அறிந்த குடும்பத்தினர் மணிகண்டன்தான் உயிரிழந்துவிட்டதாக நினைத்து உடலை தகனம் செய்தனர். இரண்டு நாள்களுப்பின் மணிகண்டன் ஊரில் இருந்து திரும்பிவர, கிராமமே அதிர்ச்சியடைந்தது. இறந்தவர் யார் என்று போலீசார் விசாரிக்கின்றனர்.
டங்ஸ்டன் விவகாரத்தில் திமுக அரசின் பொய்கள், நாடகங்கள் வெட்ட வெளிச்சமாகியுள்ளதாக EPS குற்றஞ்சாட்டியுள்ளார். ஏலம் விடும் உரிமை மாநில அரசுக்கே வழங்கக் கோரியதை மத்திய அரசு அம்பலப்படுத்தியுள்ளதாக கூறிய அவர், 10 மாதங்களில் ஒருமுறை கூட எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். தூங்குபவர்களை எழுப்பலாம், கும்பகர்ணன் போல் தூங்குவதாக நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்றும் அவர் சாடியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர் பொறியியல் மாணவி என்பது தெரியவந்துள்ளது. இரண்டாம் ஆண்டு படித்துவரும் அவர், நான்காம் ஆண்டு படிக்கும் மாணவனுடன் நேற்று இரவு நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த இருவர், மாணவனை தாக்கிவிட்டு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இது தொடர்பாக கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் இன்று காலை புகார் பதிவாகியிருக்கிறது.
Sorry, no posts matched your criteria.