India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை என, டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை அண்ணா பல்கலை.யில் நிகழ்ந்த பாலியல் அத்துமீறல் சம்பவத்தை சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனத்தில் நடந்த இத்தகைய விரும்பத்தகாத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், மாணவிகளுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டும் என TN அரசை வலியுறுத்தியுள்ளார்.
திராவிட கட்சிகள் மீது தங்களுக்கும் விமர்சனங்கள் உண்டு என திருமாவளவன் கூறியுள்ளார். ஆனால், அதற்காக சனாதன சக்திகளை உள்ளே வர அனுமதிக்க முடியாது எனவும், திமுகவை விமர்சிக்கும் போர்வையில் ஒட்டுமொத்த திராவிட சித்தாந்தத்தையே விமர்சிப்பது ஆபத்தானது எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், திராவிட அரசியல் என்பது திமுகவோடு சுருங்கி விடக்கூடியது எல்ல என்றும் கூறியுள்ளார்.
‘புஷ்பா 2’ பார்க்கச் சென்று கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த சிறுவன் ஸ்ரீதேஜ் குடும்பத்திற்கு, ₹2 கோடி வழங்க உள்ளதாக அல்லு அர்ஜுன் தந்தை அல்லு அரவிந்த் தெரிவித்துள்ளார். அல்லு அர்ஜுன் ₹1 கோடி, இயக்குனர் சுகுமார் ₹50 லட்சம், தயாரிப்பு நிறுவனம் ₹50 லட்சம் வழங்க உள்ளதாக அவர் கூறியுள்ளார். தாயார் ரேவதி உயிரிழந்த நிலையில், ICUவில் இருந்த ஸ்ரீதேஜ் தற்போது சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பேட்மிண்டன் சாம்பியன் பி.வி.சிந்து – ஐடி நிறுவன இயக்குநர் வெங்கட தத்தா சாய் இருவருக்கும் முன்பே அறிமுகம் இருந்தது. ஆனால் 2022 அக். மாதத்தில் ஒரு விமான பயணம், இருவரிடையே காதலை மலரச் செய்துள்ளது. ஸ்டார்ஸ் அலைன் ஆனதுபோல. கிட்டதட்ட முதல் பார்வையிலேயே காதல், அந்த தருணத்தில் இருந்து எல்லாமும் சரியாக அமைந்தது என பி.வி.சிந்து கூறியுள்ளார். இருவருக்கும் டிச.22 உதய்பூரில் திருமணம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே சாலை விபத்தில் பலியான 3 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் வழங்க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சாலையாேரம் நின்ற கார் மீது லாரி மோதிய விபத்தில் திருப்பூரை சேர்ந்த 3 பேர் பலியாகினர். மேலும் 2 பேர் பலத்த காயமடைந்தனர். விபத்தில் பலியானோருக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஸ்டாலின், காயமடைந்தோருக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.50,000 வழங்க ஆணையிட்டுள்ளார்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை சிஎஸ்கே நாயகன் தோனி, Santa Claus வேடமிட்டு குடும்பத்துடன் கோலாகலமாக கொண்டாடினார். தனது மகள் மற்றும் மனைவியுடன் இருக்கும் போட்டோவில் கிறிஸ்துமஸ் தாத்தாவாகவே காட்சியளிக்கும் அவர், மற்றொரு போட்டோவில் கால் மேல் கால் போட்டு கெத்தாக சேரில் அமர்ந்திருக்கிறார். இதனை பார்த்த சிஎஸ்கே ரசிகர்கள், அடுத்த ஐபிஎல்லில் “தாத்தா வராரு கதற விட போறாரு என ❤️ பறக்க விடுகின்றனர்.
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள அரசு ஆய்வகத்திலிருந்து ஹான்டா என்ற ஆபத்தான வைரஸ் மாதிரிகள் காணாமல் போயிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் CDC கூற்றுப்படி, ஹான்டா வைரஸ் கடுமையான நோய் & மரணத்திற்கு கூட வழிவகுக்கும். சில வல்லுநர்கள் இது சீனாவின் வுஹானில் இருந்து பரவிய கோவிட்-19 ஐ விட அதிக இறப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரிக்கின்றனர்.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் சரிந்துள்ளது. நேற்று ஒரு டாலரின் மதிப்பு ₹85.18ஆக இருந்த நிலையில், இன்று மேலும் சரிந்து ₹85.41ஆக உள்ளது. இதன் எதிரொலியாக கச்சா எண்ணெய், தங்கம், மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட இறக்குமதி பொருட்களின் விலை கடுமையாக உயரும் சூழல் உருவாகியுள்ளது. அதேநேரம் IT, Pharma உள்ளிட்ட ஏற்றுமதி துறைகளின் லாபம் அதிகரிக்கும்.
அமெரிக்காவில் நடிகர் சிவராஜ்குமாருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. மியாமி இன்ஸ்டியூட்டில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் உடல்நிலை குறித்து டாக்டர் முருகேசன் மனோகரன் வெளியிட்ட அறிக்கையில், சிவராஜ்குமாருக்கு செயற்கை சிறுநீர்ப்பை பொருத்தப்பட்டதாகவும், தற்போது நலமுடன் இருப்பதாகவும் கூறியுள்ளார். அவருக்கு சிறுநீர் பையில் புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டு, அறுவை சிகிச்சை நடந்தது.
திராவிட மாடல் ஆட்சியில் குற்றவாளிகளுக்கே பாதுகாப்பு என ராமதாஸ் விமர்சித்துள்ளார். அண்ணா பல்கலை., சம்பவத்தை சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டுள்ள அவர், தமிழ்நாட்டில் சட்டம்&ஒழுங்கு நிலைமை, எந்த அளவுக்கு மோசமடைந்திருக்கிறது என்பதற்கு இந்த நிகழ்வுதான் கொடூரமான எடுத்துக்காட்டு எனக் கூறியுள்ளார். மேலும், பல்கலையில் பாலியல் வன்கொடுமை நடப்பது பெண் கல்விக்கு தடையாக மாறிவிடாதா எனவும் வினவியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.