India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஹைதராபாத்தில் நடந்த பி.வி.சிந்து- வெங்கட தத்தா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் உடன் அஜித்குமார் கலந்துகொண்டார். அப்போது எடுத்த படங்களை ஷாலினி இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். மகளுடன் ஷாலினி எடுத்த படங்களில் அஜித் பொண்ணா இது என நெட்டிசன்கள் பலரும் ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்கள் வெளியாக தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு டிஜிட்டல் சாதன பயிற்சி அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு டிஜிட்டல் முறையின் மூலம் ஆசிரியர்கள் பாடம் கற்றுக் கொடுக்கவும், கேள்வித்தாள் உள்ளிட்டவை தயாரித்து அளிக்கவும் அரசு விரும்புகிறது. இதற்காக பள்ளி ஆசிரியர்களுக்கு டிஜிட்டல் சாதன பயிற்சி அளிக்க மாநில தாெடக்கப்பள்ளி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.
ICC டெஸ்ட் பவுலர்கள் தரவரிசைப் பட்டியலில் ஜஸ்பிரித் பும்ரா முதல் இடம் பிடித்துள்ளார். 904 புள்ளிகளுடன் அஸ்வினின் முந்தைய சாதனையை அவர் சமன் செய்துள்ளார். டாப் 10 பட்டியலில் அஸ்வின் 5, ஜடேஜா 10ஆம் இடங்களை பிடித்துள்ளனர். பேட்ஸ்மேன்களின் பட்டியலில் இந்திய அணி சார்பில் ஜெய்ஸ்வால் (5) மட்டும் டாப் 10ல் இடம்பெற்றுள்ளார். அணிகளின் தரவரிசையில் ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் முதல் 2 இடங்களை பிடித்துள்ளன.
2024-25இல், கட்டமைப்பு மூலதன செலவீனமாக திட்டமிடப்பட்ட ₹11.11 லட்சம் கோடியில், முதல் ஆறு மாதங்களில் 37.28% மட்டுமே பயன்படுத்தப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில், நேரடி கட்டமைப்பு செலவு ₹4.15 லட்சம் கோடி, மாநில முதலீட்டு சொத்துகள் உருவாக்கத்திற்கான நிதியளிப்பாக ₹1.45 லட்சம் கோடி, முதல் அரையாண்டில் ₹5.6 லட்சம் கோடி, மூலதன செலவீனமாக பயன்படுத்தப்பட்டதாக கூறியுள்ளது.
அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் PHOTO வெளியாகியுள்ளது. பிரியாணிக்கடை நடத்தி வரும் இவன் விற்பனையை முடித்த பிறகு, பாலியல் சீண்டல் வேலையை ஆரம்பிப்பது வழக்கம். இவன் 2011இல் இதேபோன்று மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளான். பல்கலை., வளாகத்தில் தனிமையில் இருக்கும் காதலர்களை வீடியோ எடுத்து மிரட்டி, பல மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது.
இன்று விஜய்யின் தெறி பட ரீமேக்கான பேபி ஜான் பாலிவுட்டில் வெளிவந்துள்ளது. நாயகன் வருண் தவான் ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்ள, சல்மான் கான் திடீரென எண்ட்ரி கொடுக்கிறார். அவரின் இன்ட்ரோ வரும் போது, ஏஜென்ட் பாய் ஜான் என போடுகிறார்கள். இது எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே என்று தான் தோன்றுகிறது. சரி என்ன பண்றது ஏழு தாளம் தான், ஏழு ராகம் தான். மாற்றி மாற்றி தான் போட்டாக வேண்டும். நீங்க என்ன சொல்றீங்க?
தவெக தலைவர் விஜய் குறித்த மிக மோசமான ஹேஷ்டேக் ட்ரெண்டிங் செய்யப்படுகிறது. அஜித் ரசிகர்கள் என்ற பெயரில் சில விஷமிகள் காலமானார்_விஜய் என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டு, கீழ்தரமான கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். இதனால், ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். மேலும், அந்த ஹேஷ்டேக்கை நீக்கக்கோரி ரிப்போர்ட் அடிக்கின்றனர்.
வாடிக்கையாளர்களை ஈர்க்க வாட்ஸ் அப் புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. தற்போது ஆவணங்களை ஸ்கேன் செய்யும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதனால் 3ம் தரப்பு செயலிகளை ஸ்கேனிங்கிற்கு பயன்படுத்த வேண்டியதில்லை. வாட்ஸ் அப்பில் ஸ்கேன் செய்து அப்படியே ஆவணங்களை அனுப்பலாம். முதல்கட்டமாக iOS பயனர்களுக்கு இந்த வசதி கிடைக்கிறது. விரைவில் ஆன்ட்ராய்டு போன்களுக்கும் வசதி அறிமுகமாகும்.
டங்ஸ்டன் ஏலத்தால் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என 2023 அக்டோபரில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதாக துரைமுருகன் விளக்கமளித்துள்ளார். நில விவகாரங்களில் மத்திய அரசுக்கு எந்த பங்கும் இல்லை. இதை சுட்டிக்காட்டி மாநில அரசு ஆட்சேபனை தெரிவித்தபோதும், மத்திய அரசு ஏலத்தை மேற்கொண்டது எனக் குற்றம் சாட்டினார். மேலும், இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு கொடுத்த ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்திய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பாப்கார்னுக்கும் GST போட்டதற்கு, மத்திய அரசை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், இன்றைய கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, ‘Giftக்கும் GST போட்டாங்களா?’ என Santa தாத்தா இணையத்தில் தேடுவது போன்ற ஃபோட்டோ வைரலாகி வருகிறது. ‘போட்டாலும் போட்டிருப்பாங்க..’ என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். உங்க கமெண்ட் என்ன?
Sorry, no posts matched your criteria.