India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காலை எழுந்ததும் முதல் 1 மணி 20-20-20 என்ற ரூலின் படி, செய்யும் சில வேலைகள் வாழ்க்கையே மாற்றும் என்கிறார், The Power of 5 AM புத்தகத்தை எழுதிய ராபின் ஷர்மா. முதல் 20 நிமிடங்களில் உடற்பயிற்சி மேற்கொள்ளவேண்டும். 2வது 20 நிமிடங்களில் தியானம் பண்ணனும். 3வது 20 நிமிடங்களில் ஊக்கம் அளிக்க கூடிய புத்தகத்தை படிக்கவோ, Podcast கேட்கவோ சொல்கிறார். இதனை 21 நாள்கள் செய்து தான் பாருங்களேன்?
பள்ளிகளில் கட்டாய தேர்ச்சி முறையை மத்திய அரசு ரத்து செய்தால், குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று பாமக தலைவர் அன்புமணி கவலை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “கட்டாய தேர்ச்சி முறை ரத்து என்ற முடிவை ஒன்றிய அரசு பரிசீலனை செய்ய வேண்டும். பாஜக கூட்டணியில் இருந்தாலும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம். எங்களுக்கு எந்த அச்சமும் இல்லை” என்றார்.
ராமேஸ்வரம் வந்து அக்னி தீர்த்தத்தில் நீராடும் பக்தர்கள் அங்கே உள்ள தனியார் உடை மாற்றும் அறைகளை பயன்படுத்துவது உண்டு. அப்படி பெங்களூருவில் பணிபுரியும் ஐடி பெண் ஒருவர் உடை மாற்ற சென்றபோது செல்ஃபோனில் உள்ள கேமரா டிடெக்டர் அப்ளிகேஷனை பயன்படுத்தியிருக்கிறார். அதில், அங்கு வைக்கப்பட்டிருந்த ரகசிய கேமராக்கள் வெளிப்படவே, போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கயவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நடிகைகளுக்கு கவர்ச்சி அவசியமான ஒன்று என சாந்தினி தமிழரசன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், எல்லா அம்சங்களையும் போல கவர்ச்சியும் அவசியம் என்றார். ஆடைகளை குறைப்பது மட்டுமே கவர்ச்சியாகாது எனக் கூறிய அவர், முகத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டுமெனக் குறிப்பிட்டார். கதைக்கு தேவைப்பட்டால் கவர்ச்சியாக நடிக்கலாம் எனவும், குளோஸ் அப் ஷாட்டில் கூட கவர்ச்சி காட்டி அசத்தலாம் என்றும் கூறினார்.
ராமேஸ்வரம் பெண் பக்தர்கள் உடை மாற்றும் அறையில் கேமரா வைத்து சிக்கிய இருவரிடம் இருந்து சுமார் 200க்கு மேற்பட்ட வீடியோக்கள் சிக்கியுள்ளன. கைதான ராஜேஷ் கண்ணன், மீரான் மைதீன் ஆகியோர் இந்த வீடியோக்களை வைத்து வணிக நோக்கில் செயல்பட்டார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. இந்த விவகாரத்தில் மேலும் சிலர் ஈடுபட்டிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பல தடைகளை கடந்து “விடாமுயற்சி” பொங்கலுக்கு தயாராகி விட்டது. தனது உடல் எடையை கணிசமாக குறைத்து “தல டக்கர் டோய்” எனக் கூறவைத்து விட்டார் அஜித்குமார். படத்தின் டப்பிங் வேலையை அஜித் முடித்து கொடுத்ததை அடுத்து, அவருக்கு தயாரிப்பாளர் சுபாஸ்கரன், ஜி.கே.எம்.தமிழ்குமரன் மற்றும் இயக்குனர் மகிழ்திருமேனி தரப்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையில் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது.
ICC டெஸ்ட் ‘ஆல்-ரவுண்டர்’ தரவரிசைப் பட்டியலில் ரவீந்திர ஜடேஜா முதலிடத்தில் நீடித்து வருகிறார். 424 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்துள்ளார். டாப் 10 பட்டியலில் 3ஆவது இடத்தை அஸ்வின் பிடித்துள்ளார். அணிகளின் தரவரிசையில் 3654 புள்ளிகளுடன் இந்தியா 2ஆவது இடத்தை பிடித்துள்ளது. பேட்ஸ்மேன்களின் பட்டியலில் இந்திய அணி சார்பில் ஜெய்ஸ்வால் (5) மட்டுமே டாப் 10இல் 5ஆவதாக இடம்பெற்றுள்ளார்.
அடையாளம் தெரியாத நபர்கள், தன்னையும், ஆண் நண்பரையும் தாக்கி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட மாணவி போலீசில் புகார் அளித்ததாக அண்ணா பல்கலை பதிவாளர் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதேநேரம், மாணவியை மர்ம நபர்கள் இருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக தகவல் வெளியானது. ஆனால், தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் மட்டுமே இக்குற்றச் செயலில் ஈடுபட்டதாக போலீசார் கூறுவதால், குழப்பம் தொடர்கிறது.
பெலகாவியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. காந்தி தலைமையில் 1924இல் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டின் நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு 2 நாள்கள் விழா நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, சித்தராமையா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இம்மாநாட்டில் மத்திய அரசுக்கு எதிராக பல தீர்மானங்களை நிறைவேற்ற காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
நாட்டில் செயல்பாட்டில் உள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை, கடந்த 5 ஆண்டுகளில் 54% அதிகரித்துள்ளதாக, மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. செயல்பாட்டில் உள்ள நிறுவனங்கள் அதிகம் இருக்கும் மாநிலங்களின் பட்டியலில், மகாராஷ்டிரா, டெல்லி, உ.பி., ஆகியவை முதல் 3 இடங்களில் உள்ளன. தமிழகத்தை (6) பொறுத்தவரை, 2019இல் 76,000 ஆக இருந்த நிறுவனங்களின் எண்ணிக்கை 2024 அக்., நிலவரப்படி, 1.18 லட்சமாக உயர்ந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.